இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட சாகித்திய அகாடமி என்னும் அமைப்பு சிறந்த நாவல் , சிறுகதை , இலக்கிய விமர்சனம் போன்ற எழுத்து சார்ந்த விசயங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற விதமாக ஆண்டுதோரும் சாகித்திய அகாடமி விருதினை வழங்கிவருகிறது . எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கக்கூடிய இவ்விருது திரு S ராமகிருஷ்ணன் அவர்களின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை வெளிக்கொணரும் சஞ்சாரம் என்ற நாவலுக்காக வழங்கியுள்ளது .
S ராமகிருஷ்ணன்
விருதுநகர் மாவட்டதை சேர்ந்த திரு அவர்களின் முதல் படைப்பு கணையாழியில் வெளியான பழைய தண்டவாளம் . இதன்பிறகு இவர் ஆனந்த விகடன் பருவ இதழில் எழுதிய தொடர்கள் (துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி) மூலமாக மிகப்பெரிய வாசகர் வட்டத்தை பெற்றார் .
இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்” என்று ஜெயமோகனும், “ஜெயகாந்தன் போல… எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்” என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர்.
S ராமகிருஷ்ணன் சிறந்த கதை சொல்லி..
சிறந்த இலக்கிய படைப்பாளியாக மட்டுமே அல்லாமல் சிறந்த பேச்சாளராகவும் திகழ்கிறார் . ஒரு நிகழ்வை கதையாக சொல்லிடும் விதத்தில் கேட்போரையும் இலக்கியம் பக்கம் ஈர்க்கும் வல்லமை கொண்டவராக திகழ்கின்றார் . உதாரணத்திற்கு ஹிரோஷிமா சென்ற நிகழ்வை அவர் விவரிக்கும் விதமே சிறப்பு ….
சஞ்சாரம் நாவல்
கோவில்பட்டி பகுதிகளை சார்ந்த நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள சஞ்சாரம் என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது .
இவர் குறிப்பிடும் நாதஸ்வர கலைஞர்கள் , தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த கலைஞர்களை போன்று அங்கீகாரம் கிடைக்கப்பெறாதவர்கள் . விவசாயத்தை மட்டுமே ஆதாரமாக கொண்ட இவர்களால் நாதஸ்வர கலையினை தொடர முடியாமல் போனதை விவரிக்கிறது சஞ்சாரம் .
Download/Buy : சஞ்சாரம் [Sancharam]
பெரும்பாலும் விமர்சனங்களை பெறும் சாகித்திய அகாடமி விருது இந்தமுறை சரியான நபருக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கின்றது தமிழ் இலக்கிய வட்டம் .