Site icon பாமரன் கருத்து

கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்

 

மனிதர்கள் வந்துபோகும் இந்த தரணியிலே மறைந்தும் நிலைத்து நிற்கும் வல்லமை உடையோர் “படைப்பாளிகள்” தான். தமிழ் தாய் ஈன்றெடுத்த படைப்பாளிகளில் என்றும் தமிழக மக்களின் உள்ளங்களில் உயிர்ப்போடு வாழ்ந்துகொண்டிருப்பவர் கவியரசர் கண்ணதாசன். பிறப்பில் துவங்கி இறப்பு வரைக்கும், இளமையில் துவங்கி முதுமை வரைக்கும், மகிழ்ச்சியில் துவங்கி துன்பம் வரைக்கும், தோல்வியில் துவங்கி வெற்றி வரைக்கும் அனைத்து உணர்வுகளுக்குமான கவிதைகளை தமிழுக்குத் தந்தவர் கவியரசு கண்ணதாசன். கவியரசு கண்ணதாசன் அவர்கள் வெறும் கவிதைகளோடு தன் எல்லையை சுருக்கிக்கொள்ளாமல் அரசியல், மதம், ஆன்மீகம் என பரந்துபட்டு சிந்தித்து செயலாற்றினார். 

 

இன்று நீங்கள் கருத்து பொதிந்த பழைய பாடல் ஒன்றை கேட்கும் வாய்ப்பை பெறுகிறீர்கள் என வைத்துக்கொண்டால் அது கண்ணதாசன் அவர்களின் பாடலாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. அவர் மறைந்து பல பத்தாண்டுகள் கடந்துபோனாலும் மக்களின் மனதில் பெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்று சொன்னால் மிகை ஆகாது. 

 

 

 

தன் வாழ்வையும் அதனை ஒட்டிக் கிடைத்த அனுபவங்களின் வாயிலாகவும் கவிதைகளையும் தன் அரசியல், ஆன்மீக நடவெடிக்கைகளையும் கொண்டு சென்றவர் கண்ணதாசன். கண்ணதாசன் அவர்களின் திரைப்படப்பாடல்கள் அவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன. 

 

கண்ணதாசன் என்ற பெயர் இடையில் அவருக்கு வந்து சேர்ந்த பொருத்தமான பெயர் தான். சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடி பகுதியில் சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் சாத்தப்ப செட்டியார் மற்றும் விசாலாட்சி அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம் ஜூன் 24, 1927. இவருடன் ஆறு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் பிறந்தார்கள். அப்போதைய காலகட்டங்களில் குழந்தைகள் அதிகம் கொண்டிருக்கும் குடும்பத்தார்கள் விரும்பினால் குழந்தைகள் இல்லாத குடும்பத்தார்களுக்கு பிள்ளைகளை தத்து கொடுப்பது வழக்கமான நடைமுறை. அந்த வகையில் கண்ணதான் அவர்களும் காரைக்குடியை சேர்ந்த பழனியப்ப செட்டியார் – சிகப்பி ஆச்சி அவர்களின் குடும்பத்திற்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கே அவருக்கு நாராயணன் என்ற பெயரை வைத்தார்கள். 

 

அவரது கிராமமான சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி பயின்ற கண்ணதாசன், அமராவதி புதூர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம்  வரைக்கும் படித்தார். சிறு வயதில் சிறு சிறு புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தபடியால் தானும் இப்படிப்பட்ட சிறுகதைகளை எழுதவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார் கண்ணதாசன். அவ்வப்போது கவிதைகளை எழுதும் வழக்கமும் கொண்டிருந்தார். அடுத்தது சினிமா ஆர்வமும் அவருக்கு வந்தது. தற்போது சினிமா துறையில் சிகரம் தொட்ட பலரில் சிலர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்தவர்கள் தான். ஆனால் நடிக்க வாய்ப்பு கிட்டாத பட்சத்தில் பிற துறைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிகரம் தொட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வரிசையில் கண்ணதாசனும் ஒருவராக நிற்கிறார். ‘

 

16 வயதில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார் கண்ணதாசன். ஆனால் அவரை சிகப்பு கம்பளம் போட்டு சினிமா நடிக்க வரவேற்கவில்லை. பல கசப்பான அனுபவங்களை அவருக்கு சினிமா தேடல் பொழுதுகள் தந்தன.  பிறகு வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்பதற்காக ஒரு நிறுவனத்தில் உதவியாளராக சேர்ந்துகொண்டு கதைகள் எழுத்தத் துவங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் “நிலவொளியிலே” என்ற கண்ணதாசனின் முதல் கவிதை வெளியானது. அதனை அடுத்து இன்னும் தீவிரமாக எழுதத்துவங்கினார் கண்ணதாசன். 

 

கண்ணதாசன்என்ற பெயர் ஒரு எதார்த்த நிகழ்வில் உண்டானது தான். புதுக்கோட்டையை சேர்ந்த திருமகள் என்ற பத்திரிகையில் பிழை திருத்துனர் பணிக்கு விண்ணப்பித்தார் கண்ணதாசன். அப்போது நடைபெற்ற நேர்காணலில் உங்களது பெயர் என்ன என்று கேட்டதற்கு, அந்த நொடியில் “கண்ணதாசன்” என பதில் சொன்னார். அப்படி உருவானது தான் கண்ணதாசன் என்ற பெயர். வரலாறு அந்தப் பெயரை பிறகு தன் நியாபகத்தில் வைத்துக்கொண்டது. 

 

 

 

அடுத்து அவரது கவிதைகளை பல பத்திரிகைகள் தாங்கிச்செல்ல ஆரம்பித்தன. கவிதைகளில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பின்பு சினிமாவில் பாடல் எழுத எண்ணம் கொண்டார் கண்ணதாசன். சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பின்பு மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் சேர்ந்தார் கண்ணதாசன். அங்கே கருணாநிதி என்ற பேராளுமையின் அறிமுகம் கிடைத்தது. பிறகு இருவருக்கும் இடையே உண்டான  நட்பு காரணமாக கண்ணதாசன் திராவிட இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டார். 

 

கவிதை எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புகளை தேடி அலைந்தார் கண்ணதாசன். அவருக்கு முதல்பாடல் எழுதும் வாய்ப்பினை கே. ராம்நாத் என்பவர் கொடுத்தார். அவர் இயக்கிய கள்வனின் காதலி என்ற படத்தில் எழுத வாய்ப்பு தந்தார். இதன்பிறகு, இவரது பாடலுக்காக திரைத்துறையை காத்திருக்க துவங்கியது வரலாறு. 

கண்ணதாசன் திருமண வாழ்க்கை

 

கண்ணதாசன் அவர்களுக்கு மொத்தம் மூன்று திருமணங்கள் நடைபெற்றன. மூன்று மனைவிகள், 15 பிள்ளைகள் என வஞ்சகமில்லா மணவாழ்க்கையை வாழ்ந்தார் கண்ணதாசன். கண்ணதாசன் அவர்கள் வாழ்வின் அத்தனை சுக துக்கங்களையும் அனுபவித்து வாழ்ந்தவர். ஆகையினாலே தான் அவரது பாடல்கள், கவிதைகள் அத்தனையும் நமக்கு அவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன.

கண்ணதாசன் அரசியல் வாழ்க்கை

 

ஆரம்பத்தில் கருணாநிதி அவர்களின் நட்பால் திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்டார். திமுக துவக்ககாலங்களில் முன்னனி அரசியல் தலைவராகவும் விளங்கினார். பிறகு திமுகவில் துரோகம், விரோதம் போன்றவைகளைக் கண்டு மனம் நொந்து அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் அரசியலில் இருந்தே விலகிவிட்டார். அதேபோல ஆரம்பகாலங்களில் பகுத்தறிவு சித்தாந்தங்களில் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த கண்ணதாசன் பிறகு மெல்ல மெல்ல ஆத்திக பாதைக்கு மாறினார். 

 

கண்ணதாசன்எழுதியவைகளை சில புத்தகங்களில் நிரப்பிவிட முடியாது. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள், இதுதவிர நூல்கள், கட்டுரைகள், சிறுகாப்பியங்கள்என எழுதி குவித்துள்ளார். 

அர்த்தமுள்ள இந்துமதம் – சுயபிரகடனம்

 

அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூலாக விளங்குகிறது. அதேபோல கண்ணதாசன் தன் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கும் சுயபிரகடனம் மிகவும் சிறப்பானது. “நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்;நான் கூறியபடி வாழாதீர்கள்” என்பதே அவரது முக்கிய கருத்து.

படைப்புகள்

 

காப்பியங்கள்

 

ஆட்டனத்தி ஆதிமந்தி

இயேசு காவியம்

ஐங்குறுங்காப்பியம்

கல்லக்குடி மகா காவியம்

கிழவன் சேதுபதி

பாண்டிமாதேவி

பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை – 14.

மலர்கள்

மாங்கனி

முற்றுப்பெறாத காவியங்கள்

 

தொகுப்புகள்

 

கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968

கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968

கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்

கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.

கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.

கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.

கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.

கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.

பாடிக்கொடுத்த மங்களங்கள்

 

சிற்றிலக்கியங்கள்

 

அம்பிகை அழகுதரிசனம்

கிருஷ்ண அந்தாதி

கிருஷ்ண கானம்

கிருஷ்ண மணிமாலை

ஸ்ரீகிருஷ்ண கவசம்

ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி

ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்

தைப்பாவை

கவிதை நாடகம்

 

கவிதாஞ்சலி 

 

மொழிபெயர்ப்பு

 

பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)

பஜகோவிந்தம்

புதினங்கள்

அவளுக்காக ஒரு பாடல்

அவள் ஒரு இந்துப் பெண்

அரங்கமும் அந்தரங்கமும்

அதைவிட ரகசியம்

ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)

ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.

ஊமையன்கோட்டை

ஒரு கவிஞனின் கதை

கடல் கொண்ட தென்னாடு

காமினி காஞ்சனா

சரசுவின் செளந்தர்ய லஹரி

சிவப்புக்கல் மூக்குத்தி

சிங்காரி பார்த்த சென்னை

சுருதி சேராத ராகங்கள்

சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)

தெய்வத் திருமணங்கள்

நடந்த கதை

பாரிமலைக்கொடி

பிருந்தாவனம்

மிசா

முப்பது நாளும் பவுர்ணமி

ரத்த புஷ்பங்கள்

விளக்கு மட்டுமா சிவப்பு

வேலங்குடித் திருவிழா

ஸ்வர்ண சரஸ்வதி

சிறுகதைகள்

ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை.

ஒரு நதியின் கதை

கண்ணதாசன் கதைகள்

காதல் பலவிதம் – காதலிகள் பலரகம்

குட்டிக்கதைகள்

பேனா நாட்டியம்

மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)

செண்பகத்தம்மன் கதை

செய்திக்கதைகள்

தர்மரின் வனவாசம்

தன்வரலாறு

எனது வசந்த காலங்கள்

வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)

எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)

மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

எனது சுயசரிதம்

 

அந்தி, சந்தி, அர்த்தஜாமம்

இலக்கியத்தில் காதல், 1956, அருணோதயம், சென்னை.

இலக்கிய யுத்தங்கள்

எண்ணங்கள் 1000

கடைசிப்பக்கம்

கண்ணதாசன் கட்டுரைகள் (1960) காவியக்கழகம், சென்னை

கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்

கூட்டுக்குரல்; அருணோதயம், சென்னை.

குடும்பசுகம்

சந்தித்தேன் சிந்தித்தேன்

சுகமான சிந்தனைகள்

செப்புமொழிகள்

ஞானமாலிகா

தமிழர் திருமணமும் தாலியும், 1956, அருணோதயம், சென்னை.

தென்றல் கட்டுரைகள்

தெய்வதரிசனம்

தோட்டத்து மலர்கள்

நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)

நான் பார்த்த அரசியல் – முன்பாதி

நான் பார்த்த அரசியல் (பின்பாதி)

நான் ரசித்த வர்ணனைகள்

புஷ்பமாலிகா

போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை

மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)

ராகமாலிகா

வாழ்க்கை என்னும் சோலையிலே

 

சமயம்

 

அர்த்தமுள்ள இந்து மதம் 1 :

அர்த்தமுள்ள இந்து மதம் 2 :

அர்த்தமுள்ள இந்து மதம் 3 :

அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை

அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை

அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி

அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்

அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்

அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி

அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்

 

நாடகங்கள் :

 

அனார்கலி

சிவகங்கைச்சீமை

ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.

உரை நூல்கள்

கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

 

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி

ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்

ஆண்டாள் திருப்பாவை

ஞானரஸமும் காமரஸமும்

சங்கர பொக்கிஷம்

சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்

சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது

திருக்குறள் காமத்துப்பால்

பகவத் கீதை

பேட்டிகள்

கண்ணதாசன் பேட்டிகள் – தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)

சந்தித்தேன் சிந்தித்தேன்

 

வினா-விடை 

 

ஐயம் அகற்று

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்

 

கண்ணதாசன் கவிதை படைப்புகளை இங்கே படியுங்கள்

Exit mobile version