Site icon பாமரன் கருத்து

“கருப்பு” தமிழ் கவிதை

"Fair and Lovely" பெயர் மாற்றம்

"Fair and Lovely" பெயர் மாற்றம்

கருப்பு 

மேலும் பல கவிதைகள் இங்கே

வெள்ளையா இருக்கவன் 

பொய் சொல்லமாட்டான் 

என்ற சொல்லாடலை நகைச்சுவையாக 

கடந்துபோகலாம்

ஆனால் எத்தனை மூளைகள்

கருப்பு நிறத்தவரை கண்டவுடன் 

 நம்பும் பழக்கம் கொண்டுள்ளன?

கருப்பு தான் அழகு 

என சொல்லிக்கொள்வதை

பழக்கமாக்கிக் கொண்டாலும்

நம்மில் எத்தனை மனங்கள்

கருப்பு நிறத்தவறை கண்டவுடன்

விரும்பும் வழக்கம் கொண்டுள்ளன?

இன்று நேற்று நடந்த 

அரிப்பால் உண்டான 

நம்மில் ஏறிய துரு 

அல்ல இது….

காலம் காலமாக நம்மில் 

நம் எண்ணங்களில் 

மெல்ல மெல்ல ஏற்றப்பட்ட 

துரு இது…..

நம்முடைய மூளையை 

நம்முடைய மனதை 

சலவை செய்திட 

தயாராவோம்

– ஶ்ரீ

மேலும் பல கவிதைகள் இங்கே

Exit mobile version