கடவுள் பற்றிய விவாதங்கள் பெரிய அளவில் நடைபெற்றுவரும் இந்த காலகட்டத்தில் உண்மையான கடவுள் எங்கே இருக்கிறார் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதிய “கடவுளைப் பார்த்தவனின் கதை” என்ற புத்தகம். நீங்களும் வாங்கி வாசித்து மகிழலாம்.
எழுத்தாளர் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : பாலு சத்யா
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன்
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 64
விலை : 50
ஒரு வரியில் கதை : கடவுள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறான்.
இரண்டு வயதான பெரியவர்கள் புனித தலமான ஜெருசலம் நகரத்துக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்பதை நீண்டநாள் ஆசையாக வைத்திருந்தார்கள். எஃபிம் ஒரு பணக்காரர். எலிசா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எஃபிமும் எலிசாவும் எப்போது பேசிக்கொண்டாலும் ஜெருசலம் போவதைப் பற்றி பேசுவார்கள். எப்படியேனும் அங்கே போய்விட வேண்டும் என்பது அவர்களது வாழ்க்கையின் லட்சியம் என்றே கூறலாம்.
பணக்கார பின்புலம் கொண்டிருந்த எஃபிமிடம் போதுமான பணம் இருந்தது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எலிசாவிடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால் எலிசா தள்ளிப்போட வேண்டாம் உடனே கிளம்பலாம் என்று கூறினார். எலிசா சொன்னதைக் கேட்டு இருவரும் கிளம்பினார்கள். எஃபிடம் அங்கு போவதற்குத் தேவையான பணத்தை விட அதிகமாகவே இருந்தது அவருக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு மீதியை குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
ஆனால் எலிசா குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உதவியோடு பணத்தைச் சேகரித்துக் கிளம்பினார். இருவரும் ஆளுக்கு நூறு நூறு ரூபாய்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். வழியில் இருவரும் சென்று கொண்டிருந்த பொழுது எலிசாவிற்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. எஃப்எம் நீங்கள் சென்று கொண்டிருங்கள் நான் பின்னால் இருக்கும் குடிசைக்கு சென்று தண்ணீர் குடித்து வருகிறேன் என்று சென்றார் எலிசா. எலிசாவிற்காக காத்திருந்தார் எஃப்எம்.
தண்ணீர் குடிக்க சென்ற எலிசா குடிசைக்கு சென்றார். அங்கிருந்த குடும்ப சூழ்நிலை பார்த்து மிகவும் வருந்தி அவர்களுக்கு உதவி செய்கிறார். முடிவில் தன்னுடைய பணம் கிட்டத்தட்ட 17 ரூபிள்களைத் தவிர அத்தனை ரூபிள்களையும் அவர்களுக்காக செலவு செய்து விடுகிறார்.அவர்களுடைய நிலத்தை மீட்டு கொடுக்கிறார். குதிரை வாங்கிக் கொடுக்கிறார்.மாடு வாங்கிக் கொடுக்கிறார். மீதமிருக்கும் பணத்தைக் கொண்டு ஜெருசலம் செல்ல முடியாது என்பதனால் அவர் திரும்பி வீட்டை அடைகிறார்.
ஆனால் வீட்டில் இருந்த அவருடைய குடும்பத்தினர் அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் பணத்தை கேட்கும் பொழுது மட்டும் அவர் தொலைத்துவிட்டதாக குடும்பத்தினரிடம் கூறுகிறார். எஃப்எம் எலிசாவுக்காகப் பொறுத்து பொறுத்து காத்திருந்து பின்பு மெதுவாக தன்னுடைய பயணத்தைத் தொடங்குகிறார். அங்கு ஜெருசலத்தில் கோயிலுக்குள் நுழைந்தவுடன் பல்வேறு இடங்களில் எலிசாவைப் தூரத்தில் பார்க்கிறார் எஃபிம். இறுதிவரை அவரை எலிசா என்றே எண்ணிக் கொண்டு வந்தார். ஆனால் அது எலிசா இல்லை.
எஃபிம் ஜெருசலேம் பயணத்தை முடித்துவிட்டு பின்னர் திரும்பும் வழியில் அதே குடிசையைப் பார்க்கிறார். இவர் ஜெருசலேம் செல்லும் போது வறுமையில் இருந்தவர்கள் இப்பொழுது இப்படி வளமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்து வியந்தார். அப்பொழுதுதான் அவருக்கு தெரிந்தது எலிசா ஜெருசலத்திற்கு வரவில்லை இப்படியே திரும்பிவிட்டார் இவர்களுக்கு உதவி செய்துவிட்டு என்று.
வீட்டிற்கு திரும்பியபிறகு எலிசா மற்றும் எஃபிம் இவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் தான் கதையின் முடிவு. அவர்களுக்குள் நடக்கும் ஒரு உரையாடலில் ஒரு வரி இது “நான் கடல் கடந்து சென்று இறைவனைப் பார்க்க ஆசைப்பட்டால் என்னிடம் இருக்கும் இறைவனை இழந்துவிடுவேன்” என்று எலிசா கூறுகிறார்.
எலிசா ஒருமுறை எஃபிமிடம் கூறுகிறார் “நான் செய்த பாவங்களை தவிர வேறு எதற்கும் வருத்தப்பட மாட்டேன் என் வாழ்க்கையில் ஆன்மாவைவிட விலை மதிப்புள்ளது வேறு எதுவும் கிடையாது” என்று.
நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது லட்சங்களில் செலவு செய்து நீண்ட தூரம் பயணம் செய்து கடவுளை தரிசிப்பதை விட அதே பணத்தைக் கொண்டு உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்தால் அங்கே கடவுளைக் காண முடியும் என்பதே எதார்த்தமான உண்மை.
“செல்லாத பணம்” எளிய நடையில் எழுதப்பட்ட சிறந்த நாவல் | PDF DOWNLOAD