வங்கி சேவையை சாதாரண குடும்பங்களும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஆகஸ்ட் 15,2014 ஆம் ஆண்டு ஜன்தன் யோஜனா [Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)] என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்தத்திட்டத்தின்படி, வங்கிக்கணக்கு இல்லாத ஒருவர் குறைந்தபட்ச வைப்புத்தொகையே இல்லாமல் ஒரு வங்கிக்கணக்கை துவங்கிக்கொள்ள முடியும் என்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை இருந்தாலே ஒரு வங்கிக்கணக்கை துவங்கிக்கொள்ள முடியும் என்றும் அறிவித்தார். இது மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து பல கோடி ஏழை எளிய மக்களும் இந்த ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலமாக வங்கிக்கணக்கை துவங்கி இன்று வங்கிசேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மானியங்களை பொதுமக்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைத்து வருகிறது. இடையில் இருப்பவர்கள் மக்களுக்கு செல்ல வேண்டிய மானியங்களை சுரண்டி விடுவதை தடுக்கவே இப்படி நேரடியாக குறிப்பிட்ட நபரின் வங்கிக்கணக்கில் மானியங்களை செலுத்தும் நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை சாத்தியமாக்கியதில் ஜன்தன் யோஜனா திட்டத்தின் பங்கு மிக அதிகம்.
இந்தப்பதிவில் எப்படி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு வங்கிக்கணக்கை திறப்பது என்றும் அப்படி திறக்கப்படும் வங்கிக்கணக்கிற்கு என்னென்ன சலுகைகள் உண்டு என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
ஜன்தன் யோஜனா விண்ணப்பம்
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கும் பெரும்பான்மையான வங்கிகள் அனைத்திலும் நீங்கள் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கை துவங்க முடியும். அதற்கான விண்ணப்ப படிவங்களை நீங்கள் வங்கிகளையே பெற்றுக்கொள்ள முடியும். இல்லையெனில் நீங்கள் மத்திய அரசின் இந்த [https://pmjdy.gov.in/] இணையதளத்தில் சென்றும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் [Pradhan Mantri Jan Dhan Yojana Bank Application Download Link]. இதனை பூர்த்தி செய்து பின்வரும் ஆவணங்களையும் இணைத்து கொடுத்தால் உங்களது வங்கிக்கணக்கு திறக்கப்பட்டு விடும்.
ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்கு துவங்க என்ன ஆவணங்கள் வேண்டும்?
சாமானிய மக்களும் வங்கிக்கணக்கு துவங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஜன்தன் யோஜனா என்ற திட்டம் துவங்கப்பட்டது. ஆகவே, வங்கி கணக்கு துவங்குவதற்கான நடைமுறைகள் என்பது மிகவும் சுலபமானதாக இருக்கும். பின்வரும் ஆவணங்களை கொண்டு நீங்கள் வங்கிக்கணக்கு துவங்கலாம்.
எந்தவொரு வங்கிக்கணக்கும் இல்லாத 18 வயது முதல் 65 வயதுவரை உள்ளவர்கள் இந்த வங்கிக்கணக்கை திறக்கலாம்.
ஓட்டுநர் உரிமம்
வாக்காளர் அடையாள அட்டை
பான் அட்டை
பாஸ்போர்ட் – இதில் உங்களுடைய முகவரி இருக்கும். ஆகவே இதனை பயன்படுத்தி வங்கிக்கணக்கு துவங்கலாம்.
ஆதார் அட்டை : இவை எதுவும் இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை இருந்தால் போதுமானது. இதனை கொடுத்து வங்கிக்கணக்கு திறக்கலாம்.
விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் கொடுக்க வேண்டும்.
ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்கில் என்ன பலன்கள் கிடைக்கும்?
1. வங்கிக்கணக்கு இல்லாத ஒருவர் எளிமையாக வங்கிக்கணக்கை திறக்க முடியும்.
2. குறைந்தபட்ச வைப்புத்தொகை போன்ற கட்டுப்பாடுகள் இல்லை
3. அந்தக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் தொகைக்கு வட்டியும் வழங்கப்படும்
4. Rupay Debit card வழங்கப்படும்.
5. ரூ. 2 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்படும்.
6. கணக்கு துவங்கி 6 மாதம் ஆகியிருந்தால் பணம் தேவைப்படும் அவசர காலகட்டங்களில் ரூ.10,000 முன்பணமாக பெற முடியும்.
எந்தெந்த வங்கியில் ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்கை துவங்க முடியும்?
Allahabad Bank
Andhra Bank
Axis Bank
Bank of Baroda
Bank of India
Central Bank of India
city Union Bank
Corporation Bank
dena Bank
federal Bank
HDFC Bank
ICICI Bank
IDBI Bank
Indian Bank
Indian overseas Bank
industrial Bank
Jammu and Kashmir Bank
Karur Vysya Bank
Lakshmi Vilas Bank
Oriental Bank
Punjab sind Bank
Punjab national Bank
RBL Bank
South Indian Bank
State Bank of India
syndicate bank
UCO Bank
Union Bank of India
United Bank of India
Vijaya Bank
yes Bank
செல்வமகள் சேமிப்பு திட்டம் | எப்படி துவங்குவது? விதிகள் என்னென்ன?
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்