நீங்கள் சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா? இந்த கேள்வியை ஏழை பணக்காரன் இளைஞர் வயோதிகர் என இருவேறு நிலையில் உள்ளவர்களிடம் கேட்டுப்பார்த்தாலும் பெரும்பாலானவர்கள் ‘இல்லை‘ என்றே கூறுவார்கள். அவரவர் நிலைக்கு ஏற்றவாறு பிரச்சனைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆக.. தற்போதைய சூழலில் வாழ்வதே மிக சிரமமானதாக இருக்கின்றது. இந்த சூழலில் முழுமையான வாழ்க்கை வாழ்வதென்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்க்காகத்தானே நாம் அனைவரும் பிறந்திருக்கிறோம்? இல்லையென எவராலும் மறுக்க முடியாது அல்லவா? முழுமையான வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதற்கான ஆலோசனைகளை தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
நிகழ்காலத்தில் வாழ பழகுங்கள்
ஒரு மனிதனுக்கு கடந்த காலத்தில் பெற்ற அனுபவமும் எதிர்காலத்தை பற்றிய திட்டமிடலும் அவசியம் தான் . ஆனால் அதற்காக நிகழ்காலத்தை நாம் இழந்துவிட்டு முடிந்ததையும் வரப்போவதையும் நினைத்து பயனில்லை . ஆகவே நிகழ்காலத்தில் வாழ பழகுங்கள்
உங்களுக்கு எது முக்கியம் ?
உங்களுக்கு எது முக்கியமானது , பிடித்திருக்கின்றது . இதனை கண்டுபிடியுங்கள் . அது உங்களுக்கு சரியாக இருக்கின்றபட்சத்தில் எவர் எதிர்த்தாலும் அதிலிருந்து பின்வாங்காதீர்கள் . சந்தோசமே வாழ்க்கை ஆகவே உங்களுக்கு எது முக்கியமோ அதனை தயங்காமல் செய்யுங்கள் .
அன்பை பகிருங்கள்
உங்களுக்கு பிடித்தவர்களிடம் தயங்காமல் பேசுங்கள் . யார் முதலில் பேசுவது என்ற ஈகோவெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பிடித்தவர்களிடம் முதலில் சென்று அன்பினை வெளிப்படுத்துங்கள் . அதிக நட்பினை உருவாக்கிக்கொள்ளுங்கள் .
பிடிக்காதவர்களிடம் விலகி இருங்கள்
ஆண்டவனையே பிடிக்காதவர்கள் இருக்கும் போது நம்மை பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்களா ? இருப்பார்கள் . அவர்களுக்காக உங்களை நீங்கள் தாழ்த்திக்கொள்ள வேண்டாம் . விலகி இருப்பது தவறில்லை . அவர்களின் தாக்கம் உங்கள் மீது இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் .
தயங்காமல் பாராட்டுங்கள்
எந்த வயதினருக்கும் உற்சாகமூட்டக்கூடியது பாராட்டு . எத்தனயோ சிறந்த விசயங்களை கண்டும் பாராட்டாமல் இருக்கும் பலர் உண்டு . மனைவியை பாராட்டுங்கள் , குழந்தையை பாராட்டுங்கள் , நண்பர்களை பாராட்டுங்கள் . யார் சிறப்பாக செயல்பட்டாலும் பாராட்டுங்கள் . பாராட்டும்போது இருவருக்கும் இடையே சிறந்த பந்தம் உருவாகும் .
நம் சந்தோசம் நம்மிடமே இருக்கின்றது
இதனை உணர்ந்தால் ஒவ்வொருவரின் வாழ்வும் வசந்தம் வீசும் வாழ்வாக அமையும் . சாலையென்றால் மேடு பள்ளம் வரத்தானே செய்யும் அதைப்போலவே வாழ்வென்றாலும் இன்ப துன்பங்கள் வரவே செய்யும் . அனைத்தும் வாழ்வின் ஓர் அங்கமென்பதனை உணர்ந்திடுங்கள் .
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய அன்பானவர்களுக்கு பகிர்ந்திடுங்கள் .
பாமரன் கருத்து