Site icon பாமரன் கருத்து

நட்பின் இலக்கணம் யாதெனில்….#கவிதை

நட்பு கவிதை friendship kavithai

நட்பின் இலக்கணம் யாதெனில்… – கவிதை

மேலும் பல கவிதைகள் இங்கே

கறைபடியா உள்ளத்தோடு

நண்பன் மனைவியின் 

இடுப்பிலே கர்ணன்

கை வைத்ததும்….

 

அவிழ்ந்து சிதறிய 

முத்துக்கள் நடந்ததை 

துரியோதனன் காதுகளில் 

சொல்லாமல் சொன்னதும்….

 

சிந்தனையில் சிறுதுளியும்

கலக்கமில்லாமல் புன்னகைத்து

இந்த முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ?

என துரியோதனன் கேட்டதும்….

 

“நட்பின் இலக்கணம்”

 

கணக்கில்லாமல் கொடுக்கும் 

கொடையுள்ள நண்பனை 

எள்ளளவும் உள்ளத்தில்

ஏமாளியாக எண்ணிடாமல்….

 

வானிலிருந்து தள்ளப்பட்டவனுக்கு

நல்லவனொருவன் தவறிப்போய்

வைத்தனுப்பிய பாராசூட் 

உயிர்காத்தது போல….

 

இறைவன் நமக்கு 

தந்தருளிய மூன்றாம் கரம்

கொடையுள்ள நண்பன் என

உள்ளமுணர்ந்து நம்பிடுவது….

 

“நட்பின் இலக்கணம்” 

 

பல்லாயிரம் ஆண்டுகள் 

முதுமையான மணியில்

புறப்படும் இளமையான 

ஒலி போல …

 

துணைகொண்டு நடக்கும்

முதுமை பொழுதுகளிலும்

வெளிப்படும் நட்பினை 

இளமையாக வைத்திருப்பது…

 

“நட்பின் இலக்கணம்”

 

மேகங்களில் மறைந்திருக்கும்

தூய நீர் போல மாசில்லாத 

எண்ணமும் குணமும் 

கொண்டிருப்பது….

 

திரைமறைவு யேதுமின்றி

இதயத்தில் தயக்கமின்றி

உதிப்பதை உதிர்க்கும் 

உரிமை கொண்டிருப்பது….

 “நட்பின் இலக்கணம்”

மேலும் பல கவிதைகள் இங்கே

Share with your friends !
Exit mobile version