உண்மையான நட்பு என்பது என்ன? கூடவே இருப்பதும் கும்மாளம் அடிப்பதுமா நட்பு? பிறகு எது உண்மையான, ஆத்மார்த்தமான நட்பு?
இரத்த தொடர்பு இல்லாமல்
சொந்தபந்த கட்டாயம் இல்லாமல்
எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல்
நிலவுக்கும் பூமிக்கும் இடையே
பிணைந்திருக்கும் ஈர்ப்பைப் போல
எதிர்பார்ப்பற்ற பந்தம் தான்
“நட்பு”
அம்மாவின் அன்பின் இழப்பையும்
அப்பாவின் அக்கறையின் இழப்பையும்
சொந்தங்களின் பந்த இழப்பையும்
ஈடு செய்ய இறைவன் கொடுத்த
இணையற்ற உறவுமுறை தான்
உண்மையான உயிரான
“நட்பு”
சாதிசான்றிதழ் கேட்கும் பள்ளியிலும்
வருமான சான்றிதழ் கேட்கும் கல்லூரியிலும்
சாதி வருமானம் அறியாமல் உருவாகிற உன்னதம் தான்
“நட்பு”
தாய் தந்தை அண்ணன் அக்கா
தம்பி சொந்தபந்தம் அத்தனையும்
பிறக்கும் போது இருக்கலாம்
இல்லாமலும் நாம் பிறக்கலாம்
மலரின் தேன் போலவும்
கனியின் சுவை போலவும்
மரத்தின் நிழல் போலவும்
ஒவ்வொருவர் வாழ்விலும்
நிச்சயமானது தான்
“நட்பு”
எது சிறந்த நட்பு? இந்தக் கேள்வி மிகவும் அவசியமானதே
இழுத்த இழுப்பிற்கு
செல்லும் நீரோட்டத்தை
கரைகளாய் இருந்து
நல்வழியில் முறைப்படுத்துவது
“நட்பு”
நன்றி பாராமல்
பெய்கின்ற மழையின்
பண்போடு பழகுவது
“நட்பு”
நட்புக்கு எல்லைகள் இல்லை
ஆனால் இலக்கணம் இருகின்றது
இலக்கணமில்லா மொழிகள் பல
காணாமல் போன வரலாறுண்டு
கிளைகளை வெட்டிவிடாத
மரங்கள் வீழ்ந்துபோன நிகழ்வுண்டு
செழிப்பாய் வளரும் தமிழ்போல
இலக்கணத்தோடு நட்பு வளரட்டும்
நட்புகளுக்கு தேன்தொறிந்த
மலர்களின் வாசத்தோடு….
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!.
மேலும் பல கவிதைகளை வாசிக்க Click Here
இதையும் வாசியுங்கள் “அம்மா எனும் இயற்கை அதிசயம் – கவிதை“
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!