Site icon பாமரன் கருத்து

கொரோனா காலத்தில் பெற்றோர்கள் நடந்துகொள்வது எப்படி? UNICEF ஆலோசனை

indian-parents

indian-parents

வேலை இல்லை, வருமானம் இல்லை. மன அழுத்தம் கூடிக்கொண்டே போகிறது. ஆனால் நீங்கள் மட்டுமே இப்படிப்பட்ட சூழலில் இல்லை. உங்களை விடவும் பிரச்சனையில் பலர் இருக்கிறார்கள். இந்த தருணத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம்.



 கொரோனா வைரஸ் காலத்தில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வளர்ப்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது UNICEF. கொரோனா காலத்தில் எப்படி நடந்துகொள்வது? – ஐக்கிய நாடுகள் அமைப்பு கொடுக்கும் ஆலோசனை
 

One-on-one time

வேலை இல்லை அதனால் வருமானமும் இல்லை. இது பெற்றோர்களுக்கு சற்று சவாலான கால கட்டம் தான். ஆனால் இந்த ஓய்வு நேரத்தை பிள்ளைகளுடன் செலவிட கிடைத்த அற்புதமான நேரமாக பெற்றோர்கள் எண்ணிக்கொள்ள வேண்டும். அவர்களுடனான உறவை மேம்படுத்துவது, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நடந்துகொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. 

 

தினமும் 20 நிமிடமோ அல்லது அதற்கு மேலோ பெற்றோர்கள் சில விசயங்களை செய்யலாம். 

 

குழந்தையாக இருந்தால்….

 

அவர்களின் முகபாவனை மற்றும் அவர்கள் எழுப்பும் குரல்களை பதிவு செய்து பரிமாறலாம். 

 

வீட்டில் பாட்டுபாடுவது நடனம் ஆடுவது போன்றவற்றை செய்யலாம் 

 

சிறு குட்டிக்கதைகளை கூறுவது, படிப்பது போன்றவற்றை செய்யலாம். 

 

சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால் …

 

புத்தகங்கள் படிப்பது 

 

படங்கள் வரைவது 

 

பாட்டு பாடுவது அல்லது நடனம் ஆடுவது 

 

சில விளையாட்டுகளை விளையாடுவது போன்றவற்றை செய்யலாம் 

 

இளைஞர்களாக இருந்தால்…

 

இசை, விளையாட்டு, சமூகம் சார்ந்து அவர்களுடன் பேசுவது 

 

பிடித்தமான சாப்பாட்டை சமைப்பது 

 

உடற்பயிற்சியை சேர்ந்து செய்வது போன்றவற்றை செய்யலாம். 

Keeping it positive [நேர்மறையாக இருந்திடுங்கள்]


 

இந்த தருணத்தில் நேர்மறையாக இருப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கும். ஆனால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக அதை செய்துதான் ஆக வேண்டும். இந்த தருணத்தில் பிள்ளைகளிடம் வேலை வாங்கும் போது அல்லது அவர்களை உடற்பயிற்சி அல்லது ஏதேனும் ஒன்றினை செய்யச்சொல்லும்போது அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுவிடாத வண்ணமும் சொல்லுவது அவசியம். 

 

சிறு தவறுகளை குழந்தைகள் செய்திடும் போது அதற்காக உங்களது முழுக்கோவத்தையும் வெளிப்படுத்துவது அவர்களுக்கு வெறுப்புணர்வையே ஏற்படுத்தும். ஆகவே அவர்களிடம் பொறுமையாக பேசுங்கள். அதேபோல அவர்கள் சில செயல்களை சிறப்பாக செய்தால் பாராட்டவும் தவறாதீர்கள். 

Get structured [ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள்]

இதுவரைக்கும் நாம் மேற்கொண்ட தினசரி வேலைகளுக்கும் நாம் தற்போது பின்பற்றும் தினசரி வேலைகளுக்கும் ஏகப்பட்ட மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கும். இந்த தருணத்திற்காக நாம் புதிய வேலைகளை பின்பற்றி அதை தினசரி பின்பற்றி செய்திட பழகிக்கொள்ளுதல் அவசியமான ஒன்று. குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவது, உடற்பயிற்சி செய்வது, தொலைக்காட்சி பார்ப்பது, சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, விளையாடுவது, உறங்குவது என அனைத்தையும் ஒழுங்குபடுத்திக்கொண்டு பின்பற்றிடுதல் நல்லது. 

Bad behaviour [தவறான பழக்கங்கள்]

 

குழந்தைகள் தவறு செய்வார்கள் தான், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களை சரியான பாதைக்கு திருப்புவது தான் பெற்றோர்கள் செய்ய வேண்டியது. அவர்களுக்கு சரியான விசயங்களை எடுத்துக்கூறி அவர்களை நல்வழிப்படுத்திட பெற்றோர்கள் உதவிட வேண்டும்.

Keep calm and manage stress [மன அழுத்தத்தை கையாளுங்கள்]

 

தற்போது நாம் சந்தித்துக்கொண்டு இருக்கும் ஊரடங்கை இதுவரைக்கும் சந்தித்ததே இல்லை. பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் ஓடாமல் இத்தனை நாட்கள் இருக்க முடியுமா என நாம் எக்காலத்திலும் நினைத்துபார்த்திருக்கவே மாட்டோம். ஒரே இடத்தில் அடைந்திருப்பது, வருமான குறைவு போன்றவை போதும் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் உண்டாக்கிட. ஆனால் நீங்கள் ஒரு எதார்த்தத்தை உணர்ந்துகொள்ள வேண்டும், நீங்கள் மட்டுமே இத்தகைய நிலையில் இருக்கவில்லை. சரியாக சொல்லப்போனால் உலகம் முழுமைக்கும் இப்படித்தான் இருக்கிறது. உங்களைக்காட்டிலும் பலமடங்கு ஏழை எளியவர்கள் இங்கே இருக்கிறார்கள். 

ஆகவே நீங்கள் உங்களை தேற்றிக்கொள்ளுவது மிகவும் அவசியமான ஒன்று. குடும்பத்திடமும், பிள்ளைகளிடமும் இந்த நேரத்தை செலவிடுங்கள். அவர்கள் பேசுவதை கேளுங்கள். அவர்களோடு உங்களை நெருக்கமாக்கிக்கொள்ள இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அமைதியாக இருங்கள். 

படித்ததோடு நின்றுவிடாமல் இந்தப்பதிவை உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள். 


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version