Site icon பாமரன் கருத்து

நாளைமுதல் செல்போன்கள் போராட்டம் – கவிதை | Tamil Kavithai

நாளைமுதல் செல்போன்கள் போராட்டம் – கவிதை | Tamil Kavithai

நாளைமுதல் செல்போன்கள் போராட்டம் – கவிதை | Tamil Kavithai

காதலர்களின் அன்பு தொல்லை தாங்க முடியாமல் ஒரு செல்போன் புலம்பும் கவிதை
நாளைமுதல் செல்போன்கள் போராட்டம் – கவிதை | Tamil Kavithai

கிசு கிசு பேச்சுகளால்
இரவு துயில் கெடுகிறது

இச் இச்சுகளால் நனைந்து
குளிர்ஜுரம் நடுக்குகிறது

வித்தியாசமான கதையென்றால்
காதுகொடுத்து கேட்கலாம்

‘என்ன சாப்பாடு’
எத்தனைமுறை கேட்பார்கள்

‘ம்ம்ம்ம்ம்’ ‘ம்ம்மம்ம்’
எத்தனைமுறை சொல்லுவார்கள்

அவர்களுக்கு சந்தோசம் தான்
என்பாடு தான் திண்டாட்டம்

யாருமில்லையா ‘அழைப்பு’
யாருமிருந்தால் ‘குறுஞ்செய்தி’

இப்போது வீடியோ அழைப்பு வேறு
வந்து என்னை வதைக்கிறது

உயிரில்லை என்பதால்
ஓய்வில்லையா எனக்கு

விலை கொடுத்துவிட்டால்
அடிமையில்லையே நான்

இதோ புறப்படுகிறேன்
கோட்டைக்கு நீதி கேட்டு

நாளை முதல் போராட்டம்
காதலர்களுக்கு எதிராக !






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Exit mobile version