Site icon பாமரன் கருத்து

அண்ணாவின் பகுத்தறிவு புத்தகங்கள் PDF DOWNLOAD

தமிழகம் கண்ட அறிவிற் சிறந்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் அறிஞர் அண்ணா. குறிப்பாக, தமிழகத்தை பகுத்தறிவு பாதையில் வெற்றிகரமாக அழைத்துச்சென்றவர், இன்றளவும் நம்மை உந்திக்கொண்டு இருப்பவர் அண்ணா என்றால் அது மிகையாகாது. பெரியார் இயக்க அளவில் செய்ததை அரசியல் களத்தில் நுழைந்து நிஜமாக்கியவர் அறிஞர் அண்ணா. அப்படிப்பட்ட அறிஞர் அண்ணா பல சிறந்த நூல்களை எழுதியுள்ளார். அறிஞர் அண்ணா நூல்கள் சிலவற்றில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அண்ணா நூல்கள் pdf வடிவில் இருக்கிறது.

1. புராண மதங்கள் – அண்ணா

இந்த நாட்டு மக்களின் அறிவை வளர விடாமல் தடுத்து வரும் சிலவற்றில் புராணங்களும் மதங்களும் சேர்ந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. புராணம் – புண்ணியக்கதை – மதம் மனிதனின் உயிர்நாடி என கூறிக்கொண்டு அதனையே கட்டியலும் ஒரு சில வைதீகர்களுக்கும் புராண மதங்களில் இருப்பது என்னவென்று தெரிந்துகொள்ள முனையும் சீர்திருத்த நோக்கம் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்நூல் பெரிதும் துணை புரியும். பகுத்தறிவை நோக்கிய உங்களது பயணத்திற்கு ஒரு கைத்தடியாக இந்நூல் இருக்கும். 

Purana Mathangal – Anna Bood Pdf Download

2. தேவலீலைகள் – அண்ணா

மக்களை பக்திமான்களாக மாற்றியதில் தேவ புராணங்களுக்கும் கதைகளுக்கும் பெரிய தொடர்பு இருப்பதை உணர்ந்துள்ளார் அறிஞர் அண்ணா. அதே தேவ புராணங்களில் தேவாதி தேவர்களாக மக்கள் கருதிடும் ஆட்கள் எப்படி தவறாக நடந்துகொண்டுள்ளார்கள் என்றும் மக்கள் நினைப்பது போல அவர்கள் அவ்வளவு புனிதவான்கள் அல்ல எனவும் அதே புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆனால் கவனிக்கப்படாத உண்மைகளை எடுத்துரைக்கிறார் அறிஞர் அண்ணா. இதன் மூலமாக பல கேள்விகளை உங்களது மனதில் எழுப்பவும் அவர் முயல்கிறார். 

Thevaleelaikal Anna PDF Download

குமரிக்கோட்டம் – அண்ணா

இந்த புத்தகம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது அல்ல. மாறாக, இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையாலுமே பலரது வாழ்விலும் வழக்கத்திலும் நிகழ்பவையே. குடும்பம், காதல், வெறுப்பு, விபச்சாரம், திருப்பம் என அனைத்து உணர்வுகளையும் ஒருங்கே அமைக்கப்பெற்று காவியம் படைத்திருக்கிறார் அண்ணா. இந்த புத்தகத்தை நீங்கள் படித்து முடிக்கும் போது உங்களது மனதில் பெரிய மாற்றத்தை இக்கதை நிச்சயமாக ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

Kumarikottam – Anna PDF Download 

4. நீதிதேவன் மயக்கம் – அண்ணா

தந்தை பெரியார் அவர்களின் பட்டறையில் கூர் தீட்டப்பட்டவர் தான் அறிஞர் அண்ணா. அண்ணா அவர்கள் அரசியலில் மட்டும் தனது பகுத்தறிவை புகுத்தியவர் அல்லர். அவர் தனக்கு கிடைத்த அனைத்து வழிகளிலும் அதனை செய்து காண்பித்தார். கதையாக, கவிதையாக, வசனமாக, நாவலாக, உரைநடையாக என அனைத்து விதத்திலும் அது இருந்தது. ‘நீதிதேவன் மயக்கம்’ எனும் இந்த புத்தகமும் உங்களது பகுத்தறிவை கொஞ்சம் கூர்மை படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

Neethithevan Mayakkam – Anna PDF Download

வெ.இறையண்பு ஐஏஎஸ் எழுதிய சிறந்த 10 புத்தகங்கள்

பாமரன் கருத்து

Exit mobile version