பாமர கூட்டத்தின் காதுகளில் எளிமையான வார்த்தைகளால் சிந்தனை விதைகளை சாரலாய் பாய்ச்சி சிந்திக்க வைத்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர் , எழுத்து , கதை , கவிதை , ஆங்கில புலமை என பல்துறை வித்தகனாக விளங்கிய அனைவராலும் அன்போடு அறிஞர் அண்ணா என அன்போடு அழைக்கப்பட்ட அண்ணாதுரை மறைந்த தினம் இன்று (February 03 1969).
ஒன்றே குலம், ஒருவனே தேவன் :
அண்ணா மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை. அதுதான் இன்றுவரை தொடர்கின்றது . இந்தியாவின் வடக்கே மத மோதல்கள் நடந்தாலும் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ இந்த மனிதரின் திராவிட கொள்கை விதைப்பே காரணம் .
கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்
என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் “…..நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்……” என்றார்
பெரியாருடன் கருத்து வேறுபாடு : கண்ணியம் காத்த அண்ணா
இந்திய சுதந்திர தினத்தை கறுப்புதினமாக அனுசரிக்க சொன்ன பெரியாரிடம் எண்ணற்ற தியாகிகளின் இரத்தத்தால் வந்த சுதந்திரத்தை இவ்வாறு புறக்கணிப்பது சரியாகாது என முரண்பட்டதில் தொடங்கியது அண்ணாவுக்கும் பெரியாருக்குமான கருத்து வேறுபாடு .
பிறகு திராவிடர் கழகம் அரசியலில் பங்கேற்காது என பெரியார் கூறியபோது அதிலும் முரண்பட்டார் அண்ணா .
இறுதியாக பெரியார் தன்னை விட மிக இளைய வயதுடைய மணியம்மையை எதிர்ப்புகளுக்கு மத்தியில் மணந்தபோது பிரிவு முழுமை அடைந்தது .
திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது . ஆனாலும் தன் தலைவராக பெரியாரையே நினைத்திருந்தார் அண்ணா . அதை அவர் இறுதி மூச்சு இருக்கும்வரை கடைபிடித்தார் .
புலமையின் தலைவன் அண்ணா :யார் எந்த சூழ்நிலையில் கேட்கும் கேள்விகளுக்கும் மிக சாதுரியமாக புத்திசாலித்தனமாக பதிலளிக்கக்கூடிய புலமை அண்ணாவிற்கு இருந்தது .
அப்போது சட்டமன்றத்தில் ஆளும்கட்சியாக காங்கிரஸும் எதிர்க்கட்சியாக திமுகவும் இருந்த தருணம் . அண்ணாவை நோக்கி ” திமுகவிற்கு நல்ல எதிர்கட்சியாக செயல்பட தெரியவில்லை ” என கூறிவந்தனர் .
அதற்கு அண்ணாவோ கேள்வி கேட்ட ஆளும்கட்சியை நோக்கி “நீங்கள் கேட்பதை பார்த்தால் எங்களுக்கு பதிலாக நீங்களே எதிர்கட்சியாகிவிடுவீர்களோ என்று தோன்றுகிறது “என்றார் .
அப்போது சட்டமன்றத்தில் ஆளும்கட்சியாக காங்கிரஸும் எதிர்க்கட்சியாக திமுகவும் இருந்த தருணம் . அண்ணாவை நோக்கி ” திமுகவிற்கு நல்ல எதிர்கட்சியாக செயல்பட தெரியவில்லை ” என கூறிவந்தனர் .
அதற்கு அண்ணாவோ கேள்வி கேட்ட ஆளும்கட்சியை நோக்கி “நீங்கள் கேட்பதை பார்த்தால் எங்களுக்கு பதிலாக நீங்களே எதிர்கட்சியாகிவிடுவீர்களோ என்று தோன்றுகிறது “என்றார் .
வாயடைத்து போனார்கள் கேள்வி கேட்டவர்கள் .
தமிழ்நாடு பெயர் மாற்றம் : அண்ணா செயற்கரிய சாதனைகளை செய்திருந்தாலும் மதராஸ் என்ற பெயருக்கு பதிலாக “தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்தது வரலாற்றில் என்றும் அண்ணா புகழை சொல்லும் .
சுய மரியாதை திருமணங்களை சட்டபூர்வமாக்கி அதிரடி காட்டினார் .
இறப்பிலும் சாதனை :
இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி இறந்தார். அவர் புற்று நோயால் அவதிபட்டுக் கொண்டிருந்த போதிலும், அவர் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டார். அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்ததால், அவரது உடல் நிலை மேலும் மோசமடைய செய்தது. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் என்றும் இந்த சரித்திர நாயகனை மறவாது .
அண்ணா மறைவிற்கு கருணாநிதி எழுதிய இரங்கற்பா கவிதை
நன்றி