சிறந்த பண்புகள் சிறந்த தலைமையை உருவாக்குகின்றன
சிறந்த தலைமைகள் சிறந்த நிறுவனங்களை உருவாக்குகின்றன
ஒரு குடும்பத்தையோ அல்லது நிறுவனத்தையோ சிறப்பாக நடத்திட வேண்டுமெனில் அதற்கென சில தலைமைப் பண்புகள் அவசியமாகின்றன. சிலருக்கு இந்தப் பண்புகள் இயல்பாகவே அமைந்து விடுகின்றன. சிலர் இதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள், அது தவறும் இல்லை. இங்கே தலைமைக்கு வேண்டிய சில சிறப்புப் பண்புகளை உங்களுக்கு கூறவிருக்கிறேன். வென்றவர்கள் பலர் பின்பற்றிய பின்பற்றுகிற பழக்கவழக்கங்கள் இவை. ஆகவே இவற்றை படித்துவிட்டு சிறிது சிந்தித்துவிட்டு பின்னர் பின்பற்றத் துவங்குங்கள். உங்களுக்கு கூடுதலாக ஏதேனும் தெரிந்திருந்தால் அதையும் கமெண்டில் பதிவிடுங்கள்.
1. அனைவரின் யோசனைக்கும் செவி மடுத்திடுங்கள்
2. ஒரு யோசனையோடு ஓய்வடைந்து விடாதீர்கள்
3. அனைத்து இடங்களிலும் யோசனைகளை தேடுங்கள்
4. மனிதர்களை அடையாளம் காணுங்கள்
5. புதுமையாக யோசிப்பவர்களை பாதுகாத்திடுங்கள்
6. பணியாளர்களை திருப்தி படுத்துங்கள்
1. அனைவரின் யோசனைக்கும் செவி மடுத்திடுங்கள்
தலைமையின் யோசனையின் படி தான் அனைவரும் நடக்க வேண்டும் அதுவே சிறந்தது என பலர் கூறுவது உண்டு. ஆனால் ஒரு நல்ல தலைமைக்கான பண்பு என்ன தெரியுமா? அனைவரின் யோசனையை கேட்பதற்கும் காதுகளை திறந்து வைத்திருப்பது தான். அனைத்து நல்ல யோசனைகளையும் தலைமையின் மூளையினால் மட்டுமே கண்டுபிடித்துவிட முடியாது. ஆகவே அடுத்தவர் கூறுகிற யோசனையை கேட்கும் தன்மை உடையவராகவும் பின்னர் அதில் இருக்கும் நன்மை தீமைகளை உணர்ந்து சிறந்த யோசனையை தெரிவு செய்து எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவராகவும் தலைமை இருக்க வேண்டும்.
அரசர்கள் தங்களது அவையில் பல அறிவாளிகளை வைத்திருந்ததற்கு அதுவே காரணம். இன்று கூட மிகப்பெரிய நிறுவனங்களில் தலைமை பணியிடங்களில் இருப்போர் நல்ல அறிவுடைய நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். நல்ல தலைமைக்கு இது முக்கியமான பண்பாகும்.
2. ஒரு யோசனையோடு ஓய்வடைந்து விடாதீர்கள்
எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் பஞ்சாயத்திற்கு செல்லும் போது தானாகவே பேசிக்கொள்ளும் வழக்கம் உடையவர். அவர் எப்படி என்னதான் பேசுகிறார் என சில சமயங்களில் கவனித்து உண்டு. அவர் என்ன பேசிக்கொள்வார் தெரியுமா நண்பர்களே, ‘எதிர்தரப்பில் இருப்பவர்கள் என்ன கேட்பார்கள்; நாம் இதை சொன்னால் அவர்கள் அடுத்த கேள்வியாக என்ன வைப்பார்கள்; நாம் அதற்கு என்ன சொல்ல வேண்டும் – என பல விதங்களில் அங்கே நிகழப்போகும் விவாதம் குறித்து தனக்குள்ளேயே பேசிக்கொண்டு செல்வார். இதனால் பஞ்சாயத்து நிகழ்வில் அவர் எத்தகைய சூழலையும் மிகவும் எளிமையாக சமாளிப்பார்.
அதுபோலவே நீங்கள் ஒரு தொழிலை துவங்கப்போகிறீர்கள் என வைத்துக்கொண்டால் ஒரே ஒரு யோசனையை மட்டும் வைத்துக்கொண்டு அதில் இறங்காதீர்கள். அடுத்தடுத்து என்ன நடக்க வாய்ப்பு உள்ளது, அப்படி நடந்தால் நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல யோசனைகளோடு தொழிலுக்குள் இறங்குங்கள். இதன் காரணமாக எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் கூட உங்களால் அதிர்ச்சியாடையாமல் முன்னேறிச்செல்ல முடியும்.
3. அனைத்து இடங்களிலும் யோசனைகளை தேடுங்கள்
ஒரு சிறந்த முதலாளி அல்லது தலைமை என்பவர் ஒரு தொழிலோடு என்றும் நிறுத்திக்கொள்வது கிடையாது. பெரும்பான்மையான நல்ல தலைமைகள் எப்போதும் புதிய ஐடியாக்களை தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். சிறந்த ஐடியா என்பது உயர்மட்ட குழுக்களில் மட்டுமே பிறப்பது இல்லை. நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது வழியில் பார்க்கின்ற ஏதோ ஒரு விசயம் மிகப்பெரிய தொழில் வாய்ப்பிற்கான ஐடியாவை வழங்கலாம்.
பல தலைமைப்பணியினை வகிக்கிறவர்கள் தொடர்ச்சியாக வாசிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, தங்களோடு படித்தவர்களுடன் உரையாடுவது, பல இடங்களுக்கு செல்வது என்பது போன்ற பலவற்றை தொடர்ச்சியாக செய்வார்கள். அவர்கள் பொழுதுபோக்கிற்காக இவற்றை செய்வது இல்லை, மாறாக அவர்கள் அங்கேயும் வாய்ப்புகளை தேடுகிறார்கள்.
4. மனிதர்களை அடையாளம் காணுங்கள்
சிலர் உங்களை ஊக்கப்படுத்துவார்கள், சிலர் உங்களை பயமுறுத்துவார்கள், சிலர் உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள், சிலர் உங்கள் வளர்ச்சியில் பொறாமைப்படுவார்கள். மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த எதார்த்தத்தை தலைமை பீடத்தில் அமர்ந்திருப்பவர் உணர்ந்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. இவர்கள் அனைவரோடும் தான் நீங்கள் பயணித்தாக வேண்டும். ஆகவே யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் அறிந்துவைத்துக்கொள்ளுங்கள்.
புதிய பிசினஸ் துவங்கப்போகிறீர்களா? அது பற்றிய கலந்துரையாடலின் போது உங்கள் மீது பொறாமைப்படுகிறவரை வைத்துக்கொள்ளாதீர்கள்.அதே சமயம், நாம் இதை செய்யப்போகிறோம் அதில் யாருக்கேனும் கருத்துக்கள் இருந்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள் என தெரிவித்து விடுங்கள்.எதிர்மறையாக பேசுகிறவர்கள் தான் புதிய பிசினஸில் இருக்கும் ஆபத்துக்களை உங்களைவிடவும் கூர்ந்து கவனிப்பார்கள். அவர்கள் கருத்துக்களை அவர்கள் எந்த எண்ணத்தில் கூறுகிறார்கள் என்பதோடு ஒப்பிட்டு கவனியுங்கள். இதனால் நீங்கள் அந்த விசயங்களில் அதிக கவனம் செலுத்தலாம்.
5. புதுமையாக யோசிப்பவர்களை பாதுகாத்திடுங்கள்
புதுமையாக யோசிக்கிறவர்கள் எந்த ஒரு நிறுவனத்திற்கும் கிடைத்த கொடை. அவர்களை சரியான முறையில் பயன்படுத்தினால் நிறுவனத்தில் நல்ல மாறுதல்களை செய்து முன்னேறச்செய்திட முடியும். இதற்காகவே பல நிறுவனங்கள் ‘கிரியேட்டிவ் டீம்’ என்ற ஒன்றினை வைத்திருப்பார்கள்.
நீங்கள் ஒரு சிறந்த தலைமையாக இருக்க வேண்டும் எனில் புதுமையாக யோசிப்பவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை பாதுகாத்திடுங்கள். அவர்கள் என்றைக்குமே நிறுவனத்தின் வெற்றிக்கு அவசியமானவர்கள்.
6. பணியாளர்களை திருப்தி படுத்துங்கள்
அண்ணா தமிழில் உரை ஆற்றினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்பார்கள். நேர்த்தியான கருத்துக்களை அளவான சொற்களை பயன்படுத்தி எளிய மக்களுக்கும் புரியும் விதமாக பேசுவதில் வல்லவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரது அடுக்குமொழி அழகுதமிழுக்கு தமிழகம் அடிபணிந்து தான் ஆட்சிக்கட்டிலில் அவரை அமர வைத்து அழகுபார்த்தது. தமிழில் மட்டும் அண்ணா மிகப்பெரிய புலமை பெற்றவர் அல்ல, அவர் ஆங்கிலத்திலும் மிகப்பெரிய அளவில் புலமை பெற்றவராக விளங்கினார். உலகை வெல்ல ஆங்கில அறிவு வேண்டும் என அண்ணா அப்போதே கருத்தியதாலோ என்னவோ தான் இருமொழிக்கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். அண்ணா அவர்களின் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை காண்போம்.
தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய சிறந்த கட்டுரைகள்
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!