மஹாத்மா காந்தி பொன்மொழிகள் [mahatma gandhi ponmozhigal in tamil] உலகம் போன்றக்கூடிய பொன்மொழிகள். உலகிலேயே சிறந்த தலைவராக கருத்தப்படக்கூடிய மஹாத்மா காந்தி அவர்கள் மனிதர்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக பல பொன்மொழிகளை உலகிற்கு தந்துள்ளார். இங்கே தரப்பட்டுள்ள மஹாத்மா காந்தி தத்துவங்கள் உங்களை நல்வழிப்படுத்தும்.
கூட்டத்தில் நிற்பது எளிதானது. ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.
மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்.
பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும்.
மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது, உன் வார்த்தையில் இருக்கிறது. நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.
எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை.
உங்களிடம் நகைச்சுவை உணர்வு இல்லையென்றால், நீங்கள் தற்கொலை செய்து நீண்டகாலமாகிறது என்று அர்த்தம்.
கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே உண்மையான குருடன்.
உறுதியான மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட ஒரு சிறிய குழுவால் வரலாற்றின் போக்கையே மாற்ற முடியும்.
உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அது போல் முதலில் நீ மாறு.
மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்…!
மதத்திற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு மதம் என்றால் என்னவென்றே தெரியாது.
மதத்திற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு மதம் என்றால் என்னவென்றே தெரியாது.
மனிதர்களை திருப்தி படுத்த அனைத்துமே உலகில் உண்டு, ஆனால் மனிதனின் பேராசையை திருப்தி படுத்த எதுவும் இல்லை உலகில்.
உங்கள் அனுமதியின்றி மக்களால் உங்களை புண்படுத்த முடியாது.
நண்பர்களைப் பற்றி பெருமையாக நிறையப் பேசுங்கள். பிடிக்காதவர்களைப் பற்றி எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.
நட்பு என்பது உடன்படிக்கையன்று. கைம்மாறு விரும்பாத ஒரு உறவேயாகும்.
எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நட்பல்ல. கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத்தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.
ஒருவர் துன்பப்படும்போது நிபந்தனை ஏதுமின்றி உதவுவது தான் நட்பு.
எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது.
கடவுள் மாறாதவர். அவரைப்பற்றி மக்கள் தெரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களே மாறிக் கொண்டிருக்கின்றன.
அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார்.
நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.
தியாகம் தான் வாழ்க்கை. அது இயற்கை கற்றுத் தரும் பாடம்.
உன் எதிர்காலம், உன் இன்றைய செயலை பொருத்தது.
பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்று விடலாம்.
தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.
பலம் உடல் வலிமையை சார்ந்தது அல்ல, வெல்ல முடியாத மன தைரியத்தை சார்ந்தது. மன தைரியத்தில் ஒருவர் நிலைத்து இருந்தாலே, எளிதாக வெற்றிபெற்று விடலாம்.
முதலில் உன்னை உதாசீனம் செய்வார்கள், பிறகு கேலி செய்வார்கள்,அதன் பிறகு சண்டையிடுவார்கள், கடைசியில் நீ வென்றுவிடுவாய்.
நீங்கள் சரியாக இருக்கும்போது, நீங்கள் கோபப்பட வேண்டிய அவசியமில்லை, நீங்கள் தவறாக இருக்கும்போது, உங்களுக்கு கோபப்பட உரிமை இல்லை.
ஒரு நாட்டின் மகத்துவத்தை அதன் விலங்குகள் நடத்தப்படும் விதத்தை வைத்து மதிப்பிட முடியும்.
நாளையே இறந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்துவிடு, வாழ்நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு.
உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான், உன் வாழ்க்கையை மாற்றும் வண்ணங்கள் என்பதை மறந்துவிடாதே.