Site icon பாமரன் கருத்து

பனி மனிதன் இருப்பது உண்மையா? | Yeti | ஏதி


 

Yeti [ஏதி] என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பனி மனிதனின் கால்தடத்தை கண்டறிந்ததாக இந்திய ராணுவம் அண்மையில் தெரிவித்ததை அடுத்து பனி மனிதன் தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இது காட்டில் வாழுகின்ற கரடியின் கால்தடம் என நேபாள ராணுவம் கூறியுள்ளது.

 

பனி மனிதன் [ஏதி]

 

மனித குரங்கு போல இருக்கும் இந்த உயிரினம் மனிதர்களின் உயரத்தை விடவும் அதிகமாகவும் இமயமலை பகுதிகளில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இதுவரை பனிமனிதன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. முற்காலங்களில் வேண்டுமானால் இதுபோன்ற மனிதர்கள் இருந்திருக்கலாம் என்றும் இப்போதைக்கு இது சாத்தியமில்லை எனவும் இந்த துறைகளில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.

 

இந்திய ராணுவம் வெளியிட்ட கால்தடம்

 

 

 

கடந்த ஏப்ரல் 09 அன்று மாகலு பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது 32 இன்ச் நீளமும் 15 இன்ச் அகலமும் கொண்ட ஏதி (பனி மனிதன்) இன் கால்தடத்தை கண்டதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. இதற்க்கு பின்னர் மீண்டும் பனி மனிதன் குறித்தான விவாதங்கள் உலக அளவில் எழுந்துவிட்டன.

 

மறுத்த நேபாள ராணுவம்

 

Yeti | ஏதி

 

இந்திய ராணுவம் கூறியது உண்மை இல்லை எனவும் அந்த பகுதியில் அடிக்கடி நடமாடுகின்ற பனிக்கரடியின் கால்தடம் தான் இந்திய ராணுவம் பகிர்ந்த கால்தடம் எனவும் நேபாள ராணுவம் மறுத்திருக்கிறது.

 

அப்படியே இருந்தாலும் உலகின் கவனத்திற்கு கொண்டுவந்து காட்சிப்பொருளாக மாற்றிவிடாமல் இருப்பதே நல்லது!

 


பாமரன் கருத்து
Exit mobile version