Site icon பாமரன் கருத்து

காகிதங்களில் உணவுகளை வைத்து சாப்பிட வேண்டாம் | Wrapping food in newspaper is dangerous

FSSAI-restricts-the-use-of-newspapers-as-food-packaging-material

FSSAI-restricts-the-use-of-newspapers-as-food-packaging-material


நியூஸ் பேப்பர் உள்ளிட்ட காகிதங்களில் சாப்பிடும் பண்டங்களை விற்க கூடாது, அது உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது [Wrapping food in newspaper is dangerous]என உணவு கட்டுப்பாடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சாலையோர சிறு கடைகளிலும் டீ கடைகளிலும் தான் மிக அதிகமாக பேப்பரில் வைத்து பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை தடை செய்தபோதும் அதனை எவரும் பின்பற்றவில்லை, ஆகையினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்திட உணவுத்துறை துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Read This Post also : தவறான உணவுப்பழக்கத்தினால் இறப்பதே அதிகம்

 

ஆபத்தான வேதிப்பொருள்கள் 

 

நாம் பலகாரம் அல்லது பிற உணவுப்பொருள்களை வாங்குவதற்கு முன்பாக, கடை நல்ல கடையா? உணவு ருசியாக இருக்குமா? என்பதனை மட்டுமே கவனிக்கிறோம். நல்ல கடையாக இருந்தாலும் சுத்தமான முறையில் சமைக்கப்பட்ட உணவாக இருந்தாலும் நீங்கள் அதனை ஒரு நியூஸ் பேப்பரில் சுருட்டி வாங்கிச்செல்லும் போது அது ஆபத்தான உணவாக மாறிவிடுகிறது என்கிறார்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். குறிப்பாக நியூஸ்பேப்பர் தான் அதிக பாதிப்பை தரக்கூடியது.

 

நியூஸ் பேப்பரில் உணவுப்பண்டம்

 

நியூஸ்பேப்பரில் பயன்படுத்தப்படும் இங்க் இல் பயன்படுத்தப்படும் காரியம், நிறமிகள் மற்றும் பல வேதிப்பொருள்கள் எளிதாக உணவோடு கலக்கக்கூடியவை. அவ்வாறு கலப்படம் ஆகும் பொருள்களை நாம் சாப்பிடும் போது அவை உடலில் சிறிது சிறிதான பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கி அதிகபட்சமாக புற்றுநோய் வரை கொண்டுபோய் விடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

 


விழிப்புணர்வு அவசியம் 

 

>> கடைகளில் பொருள்களை விற்பவர்கள் இனியாவது விழிப்புணர்வு அடைய வேண்டும். தங்களது கடைகளில் உணவுப்பொருள்களை அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் கொடுப்பதில்லை என உறுதி ஏற்க வேண்டும்

 

>> உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு தரமான முறையில் உணவுப்பொருள்கள் சென்று கிடைக்கின்றனவா என உறுதிப்படுத்திட வேண்டும்.

 

>> அனைத்திற்கும் மேல் நாம் தான் விழிப்போடு இருக்க வேண்டும். வியாபார யுகத்தில் குறைந்தபட்ச விழிப்புணர்வோடு இல்லையெனில் அவ்வளவுதான். ஆகவே விழிப்புணர்வோடு இருந்திட வேண்டியது அவசியம்.

 

ஆரோக்கியமான வாழ்வே வாழ்வு!

 


பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version