Site icon பாமரன் கருத்து

பட்டாசு வெடிப்பதை நாமே நிறுத்திட வேண்டும் | Stop firing Crackers on festival days

 
[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]


 

இன்று பட்டாசு பொருள்களுக்கு தடை விதிக்கக்கோரும் மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் , பட்டாசு விற்கவோ வெடிக்கவோ தடை இல்லை என குறிப்பிட்ட உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணிமுதல் 10 மணிவரை பட்டாசு வெடித்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது . இன்னும் எதற்கெல்லாம் தடை விதிக்கப்போறாங்களோ என பலராலும் கிண்டலாக பார்க்கப்படுகிறது . ஒருவேளை அந்த குழுவில் நீங்களும் ஒருவராக இருந்தால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்க்காகத்தான்.

 


 

நீதிமன்றத்தின் தீர்ப்பு


 

அதிகரிக்கும் காற்று மாசு

 

Air pollution due to industries



2016 ஆண்டுவாக்கில் கடுமையான காற்று மாசின் காரணமாக டில்லி தடுமாறி நின்றதை நாம் கண்கூடாக கண்டோம். அதனை தொடர்ந்து தான் கடுமையான வாகன கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது டெல்லி அரசு . உச்சநீதிமன்றமும் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும் தடை விதித்தது .

 

The air quality of Delhi continued to be in the “poor” category on Tuesday. The Central Pollution Control Board (CPCB) recorded the city’s overall air quality index (AQI) at 252 at 11 am. An AQI between 0 and 50 is considered ‘good’, 51 and 100 ‘satisfactory’, 101 and 200 ‘moderate’, 201 and 300 ‘poor’, 301 and 400 ‘very poor’, and 401 and 500 ‘severe’.

 

Chennai AQI : 160 to 175



டெல்லி மட்டுமே இத்தகைய காற்று மாசினால் பாதிக்கப்படவில்லை . உலகமே காற்று மாசினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது . குழந்தைகளில் 20 சதவீதத்தினர் சுவாச கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . காற்று மாசு வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக புவி வெப்பமயமாதல் துவங்கி , பனி உருகி கடல் நீர்மட்டம் உயர்வதுவரை தொடர்கின்றது இந்த பிரச்சனை .

 

 






நாமே பட்டாசு வெடிப்பதனை குறைத்துக்கொள்ளவேண்டும்

 



காற்று மாசு நாம் சில நாட்களில் வெடி வெடிப்பதனாலேயே ஏற்படுகின்றது என நானும் சொல்ல மாட்டேன் .

 

Crackers shop



ஆனால் சில நாட்கள் தான் என்றாலும் அதிகபடியாக வெடிப்பதனாலும் அதிக சத்தத்தினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அதிகப்படியாக வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுவதும் கணிசமான அளவில் காற்று மாசினை ஏற்படுத்திடுகிறது என்பதனை மறுக்க இயலாது .

 

சுற்றுசூழல்  மாசுப்பாட்டை குறைக்கவும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த உலக நாடுகள் பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன .

 

ஆனால் அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி இனி வெளியிடப்படும் கார்பனின் அளவினை குறைத்தால் மட்டும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்திட முடியாது , ஏற்கனவே காற்றில் கலந்திருக்கும் கார்பன் (CO2 ) அளவினை குறைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் .
ஏற்கனவே நாம் அளவினை கடந்து மாசினை ஏற்படுத்திவிட்டோம்
தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 41 பில்லியன் டன்னுக்கும் அதிகமான அளவில் கார்பன் டை ஆக்ஸைடை ஆண்டுக்கு காற்றில் வெளியிடுகிறோம் . ஆகையால் வெறுமனே கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுவதை குறைப்பது மட்டும் போதாது, ஏற்கனவே இருப்பதையும் அகற்றுவது முக்கியம் .

 




பட்டாசு வெடிப்பதனால் மட்டுமே மொத்த  காற்று மாசுபடும் ஏற்படுவதில்லை என்றாலும் அத்தியாவசியமில்லாத பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை குறைத்துக்கொள்வதன் மூலமாகவோ நிறுத்திக்கொள்வதன் மூலமாகவோ நம்மால் இயன்ற வகையில் காற்று மாசு ஏற்படுவதனை குறைக்க உதவிட முடியும் .


குறிப்பு : பல்லாயிரகணக்கான தொழிலாளர்களுக்கு பட்டாசு தயாரிப்புதான்  தொழில் என்பதனை அறிந்திருக்கிறோம் , அவர்களுக்கு மாற்றினை ஏற்படுத்தும் பொறுப்பு அரசிற்க்கே உண்டு .

 


 

பாமரன் கருத்து
Exit mobile version