Site icon பாமரன் கருத்து

ஏன் ஜெயலலிதா ரசிக்கப்படுகிறார் ?

 


 

அம்மா என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்டுவந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் இன்றளவும் மக்களால் விரும்பப்படுகிறார் . குறிப்பாக அவரை எதிர்ப்பவர்களாலும் ரசிக்கப்படுகிறார் . சில நிகழ்வுகள் நடக்கும் போது “அந்தம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்காது “ என மக்கள் பேசிக்கொள்வதை நம்மால் பார்க்க முடிகின்றது . ஜெயலலிதா அவர்கள் மக்களால் ரசிக்கப்பட காரணம் என்ன ? அப்படியென்ன மந்திரக்கோலை அவர் வைத்திருந்தார் என்பதைத்தான் பார்க்க இருக்கின்றோம் .

 

ஒருவரியில் இதற்கான பதில் “ஆளுமை “. ஆமாம் நண்பர்களே , ஜெயலலிதா எனும் ஒற்றை பெண்மணி இறந்தபிறகு நடந்த நாடகங்களை  யுத்தங்களை நாம் கண்டோம் . இத்தனை பெரிய நடிகர்களை இவ்வளவு ஆண்டுகள் கண்காணித்து , அடக்கி , ஆண்டிருக்க வேண்டுமெனில் எத்தனை அதிகமான “ஆளுமை , அறிவு ” இருந்திருக்க வேண்டும் .


ஜெயலலிதா வாழ்க்கை குறிப்பு – படியுங்கள்


சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டு தான் நினைத்ததை எந்தவகையிலும் செய்து முடித்தே தீருவேன் என்ற ஜெயலலிதா அவர்களின் துணிவினை கண்டு வியக்காதவர்கள் இல்லை . விமர்சனங்களை செய்தவர்கள் கூட அவரது துணிவு கண்டு வியந்தார்கள் . ஆகையால் தான் இரும்புப்பெண்மணி வரிசையில் ஜெயலலிதாவும் இடம்பிடித்தார் .

 

ஆட்டிப்படைக்கும் ஆண்கள் பலரை தன் கால்களில் விழுகின்ற அளவிற்கு , வாய்திறக்காத அளவிற்கு கட்டிப்போட்டிருந்தார் ஜெயலலிதா . காலில் விழ அனுமதிப்பதும் , சுதந்திரமாக பிறர் தங்களது கருத்துக்களை கூற அனுமதிக்காததும் தவறுதான் என்றாலும் அந்த ஆளுமையை தான் மக்கள் விரும்பினார்கள் , ஏற்றுக்கொண்டார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை .

 

எனது அனுபவத்தில் நான் கண்டு வியந்த திட்டங்களில் முதன்மையானது “பேருந்து நிலையங்களில் பெண்கள் பாலூட்ட தனி அறை திட்டம் “. பல திட்டங்கள் ஒவ்வொரு முதல்வராலும் அறிவிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன . அவை அனைத்துமே மக்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் பயனுள்ள திட்டமாகவே இருக்கும் . ஆனால் ஜெயலலிதா அவர்களின் திட்டங்கள் மக்களுக்கு அடிப்படை தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய திட்டமாக இருக்கும் . உதாரணத்திற்கு பேருந்து நிலையங்களில் விற்கப்படும் 10 ரூபாய் குடிநீர் திட்டம் .

 



ஆளுமை என்பது எங்கிருந்து வருகின்றது என்றால் அது அவர்களின் பின்னால் நிற்கும் உண்மையான தொண்டர்களால் வருகின்றது . மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதா அவர்களின் சொல்லாடலைப்போல ஜெயலலிதா மக்களால் விரும்பப்பட்டார்  என்பதே உண்மை .


பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version