Site icon பாமரன் கருத்து

Why Nehru birthday celebrated as Children’s Day? | நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவது ஏன்?


 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஏன் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது? நேருவிற்கு அதிகமாக பிடித்தது ரோஜாவும் குழந்தைகளும் தான். அதற்காக மட்டும் தான் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. அதற்கான காரணம் நிறைய இருக்கின்றது.

 


 

குழந்தைகள் தான் உயரிய சொத்து

 

ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் இருக்கிறது “children’s are the worlds most valuable resource and its best hope for the future”. அதாவது குழந்தைகள் தான் உலகில் இருக்கக்கூடிய வளங்களில் முதன்மையானது நம்மை எதிர்காலத்திற்கு இட்டுச்செல்வது. இதனை நன்கு உணர்ந்து இருந்தவர் நமது நேரு அவர்கள் எனலாம்.

 

Childrens day

 

இந்தியாவின் விடுதலைக்கு காரணமானவர் மகாத்மா காந்தி, துண்டாக கிடந்த தேசத்தை ஒன்றிணைத்தவர் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், வளங்களற்று வெறும் கூடாய் கிடந்த இந்திய தேசத்தை தனது முற்போக்கு சிந்தனையால் தன்னிறைவு பாதையில் இட்டு செல்ல காரணமாய் இருந்தவர் முதல் பாரத பிரதமர் திரு நேரு. ஆகையால் தான் இவர்கள் இந்தியாவின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படுகின்றனர்.

 


பட்டினி கிடந்த நாம் இன்று வல்லரசு போட்டியில்

 

அனைவருக்குமே தெரிந்திருக்கும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது எந்த துறையிலும் நாம் முன்னேறி இருக்கவில்லை. அன்றாடம் மூன்றுவேளை உணவு அருந்திட்ட மக்களின் எண்ணிக்கையே குறைவு. அத்தனையையும் தாண்டி இன்று இந்தியா வல்லரசு க்கான போட்டியில் முன்வரிசையில் நிற்கிறது. அதற்க்கு மிக முக்கிய காரணம் நேரு அவர்களின் vision அதாவது குறிக்கோள்.

அந்நியர்கள் நம்மை விட்டுச்செல்லும்போது அவர்களை அறியாமல் விட்டுச்சென்ற வளம் மனித வளம் மட்டுமே. குறிப்பாக நம்மிடம் சிறுவர்களும் இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். நேரு வேறு மாதிரி நினைத்திருந்தால் இன்று பணி மட்டும் செய்கின்ற ஓர் இனமாக மாற்றப்பட்டு இருப்போம். ஆனால் கல்வி ஒன்று தான் நிரந்தர வெற்றிக்கான ஆயுதம் என அவர் நம்பினார். அறிவியல் நம்மை உயர்த்தும் என நம்பினார்.

இந்தியா உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என நேரு ஆத்மார்த்தமாக விரும்பினார். அதற்காக தன்னை அர்பணித்துக்கொண்டார். அவரது காலத்தில் தான் ஐந்தாண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் நாம் அடைய வேண்டிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அதற்க்கான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு மும்முரமாக செயல்படுத்தப்பட்டன. அதில் குறிப்பாக குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதும் முக்கியமான திட்டம். குழந்தைகள் அடிப்படை கல்வியினை இலவசமாக பெறவேண்டும் என எண்ணி அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

 

குழந்தைகளிடம் பேசி மகிழும் நேரு

 

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்), ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) ஆகியவை நேருவால் உருவாக்கப்பட்டவையே. 1950-ல் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூரில் முதல் ஐ.ஐ.டியைத் தோற்றுவித்தார்.
அதன் பிறகு, 1958-ல் சோவியத் யூனியனின் உதவியுடன் மும்பையில் ஐ.ஐ.டியை நிறுவினார். கான்பூர் ஐ.ஐ.டியை 1959-ல் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவினார்.

நேரு அவர்கள் குழந்தைகளின் மாமா என அன்போடு அழைக்கப்டுவதற்கும் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவதற்கும் காரணம் அவர் இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகள் தான் என நம்பி அவர்களின் நிலை உயர கல்வி எனும் கூறிய ஆயுதத்தை அவர்களிடத்தில் அன்போடு கொடுத்ததால் தான். அதற்கான விளைவு தான் இன்று பல முன்னனி நிறுவனங்களின் உயர்ந்த பொறுப்புகளில் தமிழன் வெற்றி நடை போட முக்கிய காரணம்.

நேருவை போற்றுவோம்!

 


பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version