Site icon பாமரன் கருத்து

இந்தியர்கள் பொருள்களை வாங்கி பயன்படுத்த மட்டுமேயானவர்களா  ? ஏன் இங்கு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுவதில்லை ?  

புதிய கண்டுபிடிப்பு என செய்திகளிலோ அல்லது புத்தகங்களிலோ படிக்க நேர்ந்தால் அதனை கண்டுபிடித்தவர்களை யாரென்று நோக்கினால் பெரும்பாலும் அவர்கள் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் .புதிதாக வைரஸ் தாக்குதலோ புதிய நோய்களோ மக்களை தாக்கினால் அதற்கான மருந்துகளை தயாரிப்பது ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவனமாகத்தான் இருக்கும் .

நாம் இறக்குமதி செய்து பயன்படுத்துவதில் முன்னே நிற்போம் . ஏன் நம் நாட்டிலிருந்து கண்டுபிடிப்புகள் வருவதில்லை , புதிய மருந்துகளை கண்டுபிடிக்க முடியவில்லை ?

விஞ்ஞானிகள் , அறிவியலாளர்கள் இல்லாமல் இருக்கிறார்களா ? இல்லை அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் , மருத்துவத்துறையில் , அறிவியல் கூடங்களில் இந்தியர்கள் நிரம்பி வழிகின்றனர் .

பிறகென்ன ? அதைத்தான் இங்கு காணவிருக்கிறோம் .

 

முதலீடே கண்டுபிடிப்பின் ஆதாரம் :

 

அமெரிக்கா போன்ற நாடுகளில் பல தனியார் நிறுவனங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக முதலீடுகளை செய்கின்றன . கண்டுபிடிப்புகள் முடிவுக்கு வந்தவுடன் அதனை விற்று லாபம் கொழிக்கின்றன.

உதாரணத்திற்கு அமெரிக்காவின் space X  என்கிற அமெரிக்க தனியார் நிறுவனம் நாசாவிற்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சிகளை செய்கின்றது . விண்வெளியில் ராக்கெட்டுகளை விடுகின்றது .

இதேபோலத்தான் பல நிறுவனங்கள் செயல்பட்டு நோய்க்களுக்கு மருந்துகள் கண்டுபிடிப்பது , ரோபோட்டிக்கிள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது , விவசாயத்தில் பல கருவிகளை , மருந்துகளை , பூச்சிக்கொல்லிகளை தயாரிப்பது என செயல்படுகின்றன .

இவை அனைத்திற்கும் காரணம் முதலீடு . அறிவியல் கண்டுபிடிப்பாளர்களிடம் இருக்கும் திறனை வெளிப்படுத்தி சோதனை பல செய்து  கண்டுபிடிப்புகளை நிகழ்த்த கண்டிப்பாக மிக பெரிய அளவில் முதலீடு தேவைப்படும் . அதனை செய்ய அமெரிக்க நிறுவனங்கள்  தயாராக இருக்கின்றன .
மேலும் அவர்களுக்கு உலகில் தாங்களே அறிவாளிகள் என்னும் எண்ணமும் அதனை விட்டுக்கொடுக்க கூடாது என்கிற வைராக்கியமும் இருக்கின்றது . ஆனால் நாம் இன்னும் இறக்குமதி செய்து பயன்படுத்தும் பயன்பாட்டாளராகவே இருக்கின்றோம்.

இந்தியாவில் முதலீடு செய்ய ஆட்கள் இல்லை :

இந்தியாவில் விஞ்ஞானிகளுக்கு பஞ்சம் இல்லை . ஆனால் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த ஆய்வகங்கள் தேவையே அதற்கு பெரும் முதலீடு தேவைப்படுமே , அதனை செய்ய அரசோ தனியார் நிறுவனமோ பெரிய அளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை .இதனால் தான் இங்குள்ள அறிவுள்ள நபர்களும் வெளிநாடுகளை நாடுகின்றனர் . அங்கு கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றனர் . அதனால் அந்த நாடுகளுக்கே பேரும் புகழும் லாயல்டி மூலமாக வருமானமும் கிடைக்கின்றன.

நாம் அதனை வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளராக மட்டுமே இருந்துவருகிறோம் .

என்ன செய்ய வேண்டும் :

 

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ஆர்வமிருப்பின் வீட்டிலேயே சிறு அறிவியல் கூடத்தை அமைக்க சிறு அறையை ஒதுக்கலாம் .

சிறிது வசதி படைத்தவர்கள் பள்ளிகளில் மாணவர்கள் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த சிறிய அளவில் முதலீடுகளை செய்ய வேண்டும் .

நிறுவனங்கள் கல்லூரிகளை அணுகி கண்டுபிடிப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு முதலீடுகளை செய்து ஊக்குவிக்க வேண்டும் .

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்  கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆய்வகங்களை அமைத்து அவர்களுக்கு ஊதியமும் கொடுத்து அதன் மூலமாக சம்பாதிக்க பழக வேண்டும் .

வாடிக்கையாளராகவே இருந்துபோகாமல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவோராக பொருள்களை உருவாக்குபவராக இந்தியா உருவாக வேண்டும் .

கண்டுபிடிப்புகளே உலகத்திற்கு நம் பெருமையை சொல்லும் .

குறிப்பு : இது நம் நாட்டை தாழ்த்திப்பேசுவதாக ஆகாது . மாறாக இன்னும் உயர்ந்திட நாம் செய்ய வேண்டியதை சொல்லும் பதிவாகவே இருக்கும் .

குறைந்தது ஒரு மாணவருக்கேனும்
பகிருங்கள் .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version