Site icon பாமரன் கருத்து

அம்பேத்கர் ‘அறிவின் சின்னம்’ என ஏன் அழைக்கப்படுகிறார்? | Symbol of Knowledge

இந்த உலகத்தில் அதிகம் படித்த மேதாவி யார் என எங்கிருந்து தேடினாலும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய பதில் 'அம்பேத்கர்' என்பது தான். அவர் 64 பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். அவரது பெயருக்குப் பின்னால் படித்ததை போட வேண்டும் என்றால் பள்ளியில் இருக்கும் கரும்பலகை போல மூன்று தேவைப்படும்.

கல்வி என்பது குறிப்பிட்ட சமூகத்திற்கு இல்லை என மறுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் அங்கே பிறந்த ஒரு குழந்தை கல்வியின் பால் பெரிய ஈர்ப்பு கொண்டு புத்தகங்களை வாசித்து தள்ளியது. கணக்கில் இல்லாத பட்டங்களை பெற்று தீர்த்தது. அறிவின் சின்னம் நீ தான் [Symbol of Knowledge] என உலகம் போற்றும் அளவிற்கு அறிவால் உயர்ந்து நின்றது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல ‘பாபாசாகிப் அம்பேத்கர்’ தான்.

அம்பேத்கர் படித்த படிப்புகள்

படித்தவர் பட்டியலை தயாரித்தால் அதிலே அம்பேத்கார் அவர்களுக்கு நிச்சயமாக முதல்வரிசையில் இடம் உண்டு. பேருக்கு பின்னால் அவர் படித்த பட்டங்களை போட வேண்டும் என்றால் கூடுதலாக பல பக்கங்கள் தேவைப்படும். அத்தனை பட்டங்களை அவர் வாங்கி குவித்துள்ளார். அம்பேத்கார் படித்த படிப்புகள் இங்கே உங்களுக்காக!

Elementary Education, 1902 Satara, Maharashtra
Matriculation, 1907, Elphinstone High School, Bombay Persian, etc.,
Inter 1909, Elphinstone College, Bombay-Persian and English
B.A, 1913, Elphinstone College, Bombay, University of Bombay, Economics & Political Science
M.A, 1915 Majoring in Economics with Sociology, History Philosophy, Anthropology, and Politics
Ph.D., 1917, Columbia University conferred a Degree of Ph.D.
M. Sc 1921 June, London School of Economics, London. Thesis – ‘Provincial Decentralization of Imperial Finance in British India’
Barrister-at- Law 30-9-1920 Gray’s Inn, London
(1922-23, Spent some time reading economics in the University of Bonn in Germany.)
D. SC Nov 1923, London School of Economics, London ‘The Problem of the Rupee – Its origin and its solution’ was accepted for the degree in Economics
L.L.D (Honoris Causa) 5-6-1952 Columbia University, New York For his achievements, Leadership and authoring the constitution of India
D.Litt (Honoris Causa) 12-1-1953 Osmania University, Hyderabad For his achievements, Leadership, and writing the constitution of India

இந்தப்பதிவு அம்பேத்கர் அவர்கள் புத்தகங்களை எப்படி நேசித்தார், எத்தனை மணி நேரம் வாசித்தார் என்பன உள்ளிட்ட பல்வேறு விசயங்களை இப்போது பார்க்கலாம். 

1. இந்த உலகத்தில் அதிகம் படித்த மேதாவி யார் என எங்கிருந்து தேடினாலும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய பதில் ‘அம்பேத்கர்’ என்பது தான். அவர் 64 பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். அவரது பெயருக்குப் பின்னால் படித்ததை போட வேண்டும் என்றால் பள்ளியில் இருக்கும் கரும்பலகை போல மூன்று தேவைப்படும்.

2. பாடங்களில் மட்டுமல்ல மொழி அறிவிலும் அம்பேத்கர் சிறந்து விளங்கினார். அவருக்கு 9 மொழிகள் தெரிந்திருந்தது.

3. அம்பேத்கர் எத்தனை புத்தகங்களை வாசித்து இருப்பார் என்ற கேள்வி பரவலாக எழுகிற கேள்வி. அம்பேத்கர் எத்தனை புத்தகங்களை படித்தார் என்பது குறித்து துல்லியமான தகவல் ஏதும் இல்லை, அது சாத்தியமும் இல்லை. அவர் எண்ணிக்கொண்டும் இருக்கவில்லை. ஆனால் அவர் ஆண்டு ஒன்றுக்கு 100 புத்தகங்களை மிக சாதாரணமாக படிக்கும் நபர். அப்படி என்றால் 50 ஆண்டுகளில் அவர் 5000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்திருப்பார்.

4. இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சென்று அங்கே பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபர் அம்பேத்கர் தான். பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென், பொருளாதாரத்தில் தனக்கு தந்தை அம்பேத்கர் தான் என புகழாரம் சூட்டுகிறார்.

5. அம்பேத்கர் அவர்களின் வாசிக்கும் திறன் எப்படி இருந்தது என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் உதாரணம். இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பும் போது, வெனிஸ் மற்றும் மும்பை க்கு இடையே பயணம் செய்திடும் போது மட்டும் 8000 பக்கங்களை வாசித்திருப்பதாக அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 6 நாள் பயணத்தில் 8000 பக்கங்கள்.

6. ஜான் குந்தர் எனும் புகழ்பெற்ற எழுத்தாளர் தனது Inside Asia என்ற பபுத்தகத்தில் உலகிலேயே மிகப்பெரிய தனி நபர் நூலகத்தை அம்பேத்கர் வைத்திருந்தார் எனவும் அங்கே இருக்கும் புத்தகங்களை அவர் அலங்காரத்திற்காக வைத்திருக்கவில்லை, அனைத்தையும் அவர் வாசித்து இருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அங்கே அவர் 50,000 புத்தகங்கள் வரை சேகரித்து வைந்திருந்தாகவும் சொல்கிறார்கள்.

7. அம்பேத்கர் எழுதிய ‘Waiting for a visa’ எனும் புத்தகம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருக்கிறது. 2004 இல் உலகின் சிறந்த 100 அறிஞர்கள் பட்டியலை தயாரித்தது. அதிலே முதலிடம் பிடித்தது அம்பேத்கர் தான்.

8. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் எட்டு ஆண்டுகள் கொண்ட படிப்பை வெறும் 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களில் முடித்து சாதனை படைத்தார். அந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 21 மணி நேரம் படிப்பதற்காக செலவிட்டார் என்கிறார்கள்.

9. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் “Doctor All Science” என்ற மிக மிக உயரிய பட்டத்தை அம்பேத்கருக்கு வழங்கியது. பல அறிஞர்கள் அந்தப்பட்டதை பெற முயற்சி செய்தும் இதுவரைக்கும் அந்தப்பட்டத்தை வேறு யாரும் பெறவில்லை என்பதே உண்மை.

10. ஆளுநர் லார்ட் லின்லித்கோ மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் 500 பட்டதாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான அறிஞர்களை விட அம்பேத்கர் புத்திசாலி என்று நம்பினர்.

இத்தனை பெருமை வாய்ந்த அம்பேத்கரை நாம் கொண்டாடாமல் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாக அவரை சுருக்கி வைத்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

கல்வியின் அடையாளமாக அம்பேத்கரை போற்றுவோம்.

பாமரன் கருத்து


Share with your friends !
Exit mobile version