Site icon பாமரன் கருத்து

What is Income Tax? Why should we file Tax Return? | Tamil | வருமானவரி என்றால் என்ன ?

வருமானவரி (Income Tax)  செலுத்தியவர்கள் tax return file செய்வதற்கு கடைசி தேதி ஜுலை 31 எனவும் அதற்குள் பதிவு செய்யாதவர்களுக்கு ரூ 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது .

 
http://incometaxindiaefiling.gov.in/home

5000 penalty for exceed due date for filing tax return

 

ஏற்கனவே வருமானவரி கட்டியவர்கள் உடனடியாக ஜுலை 31 க்குள் return file செய்துவிடுங்கள் .

 

Last date July 31

 

வருமானவரி குறித்த தகவல்கள் தெரியாத நண்பர்கள் இந்த பதிவினை தொடர்ந்து படிக்கவும்

 

வருமானவரி என்றால் என்ன ? | What is Income Tax?

 

ஒரு நாடு இயங்குவதற்கு  நலத்திட்டங்கள் செய்வதற்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் தேவைப்படும் அல்லவா ? அந்த பணத்தின் பெரும்பகுதி வருமானவரியின் மூலமாகத்தான் அரசுக்கு கிடைக்கிறது . இதுதவிர பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாகவும் இயற்கை வளங்களை விற்றும் அரசு வருமானம் ஈட்டுகிறது .

 

You want to pay tax as per your income

இந்தியாவில் இரண்டுவிதமான வரி இருக்கின்றது .

நேரடி வரி (Direct Tax)
மறைமுக வரி (Indirect Tax)

 

Direct Tax – நேரடி வரி என்பது நேரடியாக நாமே அரசுக்கு செலுத்துவது , வருமானவரி. ஒவ்வொருவரும் அரசு நிர்ணயித்தபடி அவரவர் வருவாய்க்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை அரசிற்கு செலுத்துவது .

 

Indirect Tax – மறைமுக வரி என்பது நம்மிடம் இருந்து மறைமுகமாக பெறப்படும் வரி . உதாரணத்திற்கு ஒரு பொருளை வாங்கும்போதோ உணவகத்தில் உணவு உண்ணும்போதோ செலுத்துகின்ற விலைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை வரியாக சேர்த்து செலுத்துவோம் . தற்போது பெரும்பாலான மறைமுக வரி அனைத்தும் GST க்குள் வருகின்றது .

 

Form 16 என்றால் என்ன? | What is FORM 16?

 
நீங்கள் (Employee) ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் . உங்களது நிறுவனம் (Employer) உங்களுக்கு வழங்குகிற சம்பளத்தை அரசின் விதிகளோடு ஒப்பிட்டு அதற்கேற்ப வருகின்ற தொகையினை உங்களது சம்பளத்தில் பிடிப்பார்கள் . பிறகு உங்களது நிறுவனம் அந்த தொகையினை அரசாங்கத்திற்கு செலுத்துவார்கள் . அவ்வாறு செலுத்தியதற்கு ஆதாரமாக உங்களது நிறுவனம் உங்களுக்கு கொடுக்கின்ற ஆதாரத்திற்கு பெயர் தான் Form 16. 

Form 16 is a evidence that your company paid your deducted tax amount to the government

 

இதனை உங்களது நிறுவனத்திடம் இருந்து பெற்று Tax Return File செய்ய வேண்டும் .

 

Income Tax Return என்றால் என்ன ? | What is Income Tax Return?

 

Filing Tax return

 

Income Tax Return என்பது மின்னனு (electronically register) முறையில் நீங்கள் வரி செலுத்திய தகவல்களை வருமானவரித்துறையில் பதிவேற்றம் செய்வது . அப்படி பதிவேற்றம் செய்திடும் போது உங்களது வருமானம்  (தனிப்பட்ட முறையில் கிடைக்கும் வருமானம் , அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் சம்பளம் , வட்டி பிற இல்லாவிட்டாலும் உங்களது பான் கார்டு இணைந்திருக்கும் எதில் வருமானம் வந்தாலும் அதுவும் சேர்க்கப்படும் ) வரிகட்டிய தகவல்கள் அனைத்தையும் பதிவிடவேண்டும் . வருமானத்திற்கு ஏற்ற வகையில் ITR 1 ITR 2 என பல form இருகின்றது .

 

அலுவலகத்தில் வரி கட்டியபிறகு  எதற்காக தனியே செய்திட வேண்டும் ?

 

My company paid tax for me then why I have to file Tax return Again?

 

ஒரு நபருக்கு அலுவலகத்தில் வேலை பார்ப்பதால் மட்டும் வருமானம் கிடைப்பது இல்லை . வேறு வகையிலோ , வட்டியின் மூலமாகவோ வருகின்ற வருமானத்திற்கும் வட்டி கட்டவேண்டியது நம் கடமை . ஆகவே வருமானவரி தாக்கல் செய்யும்போது அனைத்து வருமானத்தையும் காட்டவேண்டும். நமக்கான வரி வேறெங்காவது பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால் (உதாரணத்திற்கு அலுவலகத்தில் பிடித்தம் செய்திருந்தால் ) அந்த தகவலை பதிவு செய்திட வேண்டும் . அவ்வாறு செய்யும்பட்சத்தில் அதற்கு வரி தனியாக கட்ட தேவையில்லை . மீதமுள்ள வருமானத்திற்கு வரி கட்டவேண்டும் .

 

இதற்காகத்தான் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக வருமான வரி மின்னனு முறையில் தாக்கல் செய்ய வேண்டும் . நாம் செலுத்த வேண்டிய வரிக்கு  அதிகமான வரியை செலுத்தியிருந்தால் நமது வங்கி எண்ணுக்கு (Tax Return) அனுப்பிவிடப்படும் , குறைவான வரி கட்டியிருப்பின் வரி கட்டுமாறு கடிதம் அனுப்பப்படும் .

 

Income Tax Return செய்யவில்லையென்றால் என்னாகும்?

 

வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யாத நபர்களுக்கு இந்திய வருமானவரித்துறை வருமானவரி தாக்கல் செய்திடுமாறு கடிதம் அனுப்பும் . குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி கணக்கை தாக்கல் செய்யவில்லையெனில் அபராதத்தொகையும் அதில் இணைக்கப்படும் .

 

Income Tax Return செய்யாதவரை அரசை பொருத்தவரை நீங்கள் இன்னும் வரி கட்டாத நபரே

 

தாமதமாக வரி கணக்கினை தாக்கல் செய்தால் உங்களுக்கு ஏதேனும் கூடுதல் வரி பிடிக்கப்பட்டிருந்தாலும் அவை திருப்பி வழங்கப்படமாட்டாது .நீங்கள் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யாதவரை அதற்கான தொகை நிலுவையில் வைக்கப்படும் , அபராதத்தொகையும் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும் .

 

இந்த முறை வருமானவரி சட்டம் புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது . அதன்படி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வரி கணக்கினை தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் .

 

சில முக்கிய குறிப்புகள் :  

வருமானவரி கணக்கினை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் தாக்கல் செய்திடுங்கள் . 

அனைத்துவிதமான வருமானத்தையும் குறிப்பிட மறந்துவிடாதீர்கள் .

 

சந்தேகம் இருப்பின் தெரிந்தவர்களிடம்
கேட்டு சரியாக வரி கணக்கினை தாக்கல் செய்திடுங்கள் .

 

அலட்சியமாக இருக்க வேண்டாம்.

 

பாமரன் கருத்து

 

Share with your friends !
Exit mobile version