பிட்காயின் (Bit Coin) என்றால் என்ன ?
பிட்காயின் உருவான வரலாறு ? | History of Bit Coin in Tamil
பிட்காயின் மக்கள் நம்பிக்கையை எப்படி பெற்றது ?
ஏதேனும் பொருளை வாங்கவேண்டும் என்றால் வங்கி அட்டையை பயன்படுத்தி வாங்குவோம் , அந்த வங்கி பொருளை விற்பவருக்கு பணத்தை வழங்கும் . இந்த எதுவுமே பிட்காயின் விசயத்தில் இல்லை . அதுதான் பிட்காயினின் நம்பிக்கையை அதிகரிக்க காரணம் .
இடைத்தரகர்களே கிடையாது
ஆம், பிட்காயின் இணையத்தில் ஒரு சில வழிமுறைகளை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது . ஆண்டுக்கு இவ்வளவு என்கிற விகிதத்தில் “mining ” என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது .
பிட்காயினை கண்காணிப்பது யார் ?
பிட்காயின் தகவல் அனைத்தும் ஏதோ ஒரு சர்வரில் சேமிக்கப்பட்டு இருக்காது . மாறாக பிட்காயின் வைத்திருக்கக்கூடிய அனைவரது கணக்குகளிலும் மொத்த தகவலும் சேமிக்கப்பட்டு இருக்கும் . அதாவது வங்கி நமது விவரங்களை சேமித்து வைத்திருப்பதற்கு பதிலாக நாம் ஒவ்வொருவருமே அனைவரது தகவலையும் சேமித்து வைத்திருப்பதை போன்றது .
யாரேனும் ஒருவரிடத்தில் உணமையான தகவல் இருந்தால் கூட தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்படும் . இதுதான் இதன் மீதான நம்பிக்கையை அதிகரிக்க காரணம் .
பிட்காயின் உருவாவது எப்படி ? ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா ?
பிட்காயின் “mining ” என்கிற ஒரு வழிமுறைப்படி உருவாக்கப்படுகிறது .
பிட்காயின் உருவாக்கியவர்கள் அதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் . அதன்படி 21 மில்லியன் பிட்காயின்களை மட்டுமே உருவாக்கிட முடியும் .
மேலும் தற்போது வரை 12 மில்லியன் பிட்காயின்கள் உருவாக்கப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள் . பிட்காயின் உருவாகும் அளவினை தானாக கட்டுப்படுத்திட அல்காரிதம் [Self Executing Program] அதற்குள்ளேயே உள்ளது .
பிட்காயின் இரண்டு வழிகளில் உருவாக்கப்படுகிறது.
பிறரிடம் இருந்து வாங்குவது
Mining மூலமாக உருவாவது
Mining மூலமாக உருவாவது என்னவென்றால், ஒவ்வொரு முறை பண பரிமாற்றம் நடைபெறும் போதும் தானாகவே செயல்படக்கூடிய Program உதவியுடன் கடினமாக ‘Puzzle’ ஒன்று உருவாகும். அதனை முதலில் கண்டுபிடிப்பவர்களுக்கு rewards வழங்கப்படும்.
பிட்காயின் “mining ” என்றால் என்ன ?
தங்கத்தை சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுப்பதற்கு “mining என்றுதான் பொருள் . அதனைபோலவே புதிய பிட்காயின்களை உருவாக்குவதற்கான செயல்முறைக்கு பெயர் “மைனிங் ” .
ஒருநபரோ அல்லது ஒரு குழுவோ யார் வேண்டுமானலும் இந்த மைனிங்கில் ஈடுபடலாம் . அதன்படி அவர்கள் குறிப்பிட்ட கணித புதிர்களை கண்டுபிடித்து விடுவதன் மூலமாக சில பிட்காயின்களை பரிசாக பெறலாம் .
பிட்காயினின் மதிப்பை நிர்ணயிப்பது யார் ?
தங்கத்தின் விலையை நிர்மாணிப்பது எது என்பதற்கான விடையே இதற்கான விடையும் . ஆம் தங்கத்திற்க்கான தேவை , அதன் மீதான நம்பிக்கை , மக்களின் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும்போது அதன் விலை அதிகரிக்கின்றது அல்லவா அதனைபோலவே தான் பிட்காயின் விசயத்திலும் நடக்கிறது .
பிட்காயினை வாங்குவது எப்படி ?
- Coinbase.com
- Coinmama.com
- Cex.io
- Bitstamp.net
- Paxful.com
- Xcoins.io
- Localbitcoins.com
- Coinatmradar.com
பிட்காயினை வாங்கலாமா ?
பிட்காயினை வாங்க வேண்டாம் என RBI மற்றும் இந்திய அரசு கூறிவந்தாலும் பலர் இதனை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் . இதனை வாங்கலாமா என கேட்டால் ? பங்குசந்தையில் பணம் போடுவது எவ்வளவு ஆபத்தானதோ அதனை போலவே ஆபத்தானது பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோ கரன்சிகள் .
ஆனால் அவற்றிற்க்கான நம்பகத்தன்மை அனைவரிடத்திலும் அதிகரிப்பதால் அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது என்பதும் உண்மை .உதாரணத்திற்கு ஒருவேளை இந்தியாவின் பொருளாதரம் பாதிக்கப்பட்டு இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்தால் நீங்கள் பிட்காயினை வைத்து இருந்தால் அமெரிக்கா சென்று டாலராக மாற்றி வாழ்க்கையை தொடங்கலாம் .
ஆகவே போனாலும் நஷ்டமில்லை என்கிற அளவில் முதலீடு செய்து பார்க்கலாம் .
உலகின் அடுத்த கரன்சியாக மாறப்போவது கிரிப்டோகரன்சிதான் .
இந்திய ரிசர்வ் வங்கி பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் நம்பகத்தன்மை அற்றவை என்பதனால் அதில் இந்தியர்கள் முதலீடு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது