நிலவு உதிர்த்த
வெண்ணிற வெளிச்சத்தில்
அவளை கடந்தபோது
அவளது ஒற்றைப்பார்வை
ஓராயிரம் பூக்களை
என்னுள் பூக்கவிட்டன!
வறண்ட என்மனதை
பார்வையால் பண்படுத்தி
பூங்காவாக்கி விட்டாள்!
இப்படியொரு பூங்காவை
அவள் அறிந்திருக்கமாட்டாள்
காரணம் எளிது !
நான் ஒரு வழிப்போக்கன்!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!