நம் அனைவருக்குமே வாழ்வில் எதையாவது சாதித்துவிட வேண்டும் என ஓர் எண்ணம் இருக்கும். அதற்காக முயன்றும் இருப்போம். ஆனால் பலரால் இறுதி வெற்றியை ருசிக்க முடிவதில்லை. அது ஏன் என்பதற்கான தேடலே இக்கட்டுரை.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் எதையாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு தள்ளுவண்டி கடைக்காரருக்கு “ஒருநாள் நான் பெரிய ஹோட்டலுக்கு உரிமை உடையவன் ஆவேன்” என்ற எண்ணம் நிச்சயமாக இருக்கும். இதுபோலவே ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு “Goal” நிச்சயமாக இருக்கும். ஆனாலும் அத்தனை பேரும் சாதித்து விடுவது இல்லை, வெகு சிலரே சாதித்து காட்டுகிறார்கள். ஏன் உங்களால் சாதிக்க முடிவது இல்லை? இந்த கேள்விக்கு சரியான பதில் Lack of Willpower And Planning. அதாவது உங்களிடம் உங்களுடைய கனவினை நிறைவேற்றுவதற்கான சுய சக்தி மற்றும் திட்டமிடலில் பற்றாக்குறை இருப்பதனால் தான் உங்களால் வெற்றிபெற முடிவது இல்லை.
நம்மிடம் இருக்கக்கூடிய மிக முக்கிய பிரச்சனை என்னவென்றால் நாம் எப்போதுமே இறுதியாக கிடைக்கப்போவதை பற்றி மட்டுமே பெரிதாக சிந்திக்கிறோம். எந்த ஒரு வெற்றியும் உடனடியாக கிடைத்துவிடுவது இல்லை. அதற்காக நாம் பல ஆண்டுகள் பொறுமையாக, கடுமையாக போராட வேண்டி இருக்கும் என்பதனை மறந்துவிட கூடாது.
இதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் நான் தான். சில ஆண்டுகளுக்கு முன்னதாக பாமரன் கருத்து எனும் facebook page துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட காலத்தில் நான் இடும் பதிவுகளை ஒற்றை எண்ணிக்கையில் கொண்ட நண்பர்கள் தான் கண்டிருப்பார்கள். Likes வாங்குவது என்பது மிகப்பெரிய வேலையாக இருக்கும். பல சமயங்களில் ஒருவித வெறுப்புணர்வு கூட என்னை ஆட்கொள்ளும். இருந்தாலும் நான் என்னையே தேற்றிக்கொண்டு தொடர்ச்சியாக பதிவுகளை இட்டுக்கொண்டே இருப்பேன். இன்று நான் மிகப்பெரிய சாதனையாளன் ஆகவில்லை என்றாலும் இன்று என்னுடைய facebook page ஐ 40 ஆயிரத்திற்கும் அதிகமான நண்பர்கள் பின்தொடர்கிறார்கள். நான் இடும் பதிவுகளை மதித்து அவர்கள் என்னோடு கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். நான் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் இருக்கிறது என்பதனை அறிவேன்.
உங்களுடைய சக்தி என்னவென்பதை அறிந்துகொள்ளுங்கள்
உங்களுடைய எண்ணம் எவ்வளவு உயரமானதாகக்கூட இருக்கலாம் ஆனால் அதனை அடைவதற்கான தகுதி இருக்கிறதா என்பதனை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். உதாரணத்திற்கு நான் ஒருநாள் முதல்வர் ஆகியே தீருவேன் என எண்ணமுடைய ஒருவருக்கு அரசியல் ஈடுபாடு, அரசியல் அறிவு இருக்க வேண்டும் அல்லவா, அப்படியே இல்லாவிட்டாலும் அதனை வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் இல்லையென்பதனையாவது உணரவேண்டும். அதுதான் மிக முக்கியம்.
திட்டமிடல்
நினைத்தை அடைவதற்கு மிக முக்கியமான இரண்டாவது விசயம் திட்டமிடல். ஆம் நண்பர்களே, வெற்றிபெறுவதற்கான வாய்ப்பினை திட்டமிடல் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு உங்களது கனவு மருத்துவர் ஆகவேண்டும் என்பதுதான் என்றால் அதற்க்கான திட்டமிடலை உங்களுடைய சிறுவயதில் இருந்தே துவங்கினால் மட்டுமே எளிமையாக அதனை எட்டிப்பிடிக்க முடியும்.
திட்டமிடல் என்பது எங்கே துவங்க வேண்டும் என்பதில் இருந்து உங்களுடைய இறுதி கனவு வரை மிகத்தெளிவானதா இருக்க வேண்டும். ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு முன்னதாக அதற்கான முழு பிளானும் போடப்பட்டுவிடும். முதலில் பில்லர் போடுவோம் பிறகு அறைகள் எங்கே வேண்டும் என பார்த்துக்கொள்ளலாம் என இருந்தால் வீடு அலங்கோலமாகிவிடும். அதுபோலத்தான் ஆரம்பம் முதலே திட்டமிடல் இல்லை என்றால் உங்களது கனவும் கானல் நீராகித்தான் போகும்.
பிரச்சனைகள் என்ன?
>> ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும். நமக்கு ஓர் கெட்டபழக்கம் இருக்கிறது, ஒரேயடியாக இறுதி விசயத்தை எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்பதுதான் அது. சிகரத்தை அடைய பொறுமை வேண்டும். மிகவும் நிதானமாக, உறுதியாக நம்முடைய கனவினை நோக்கி பயணிக்க வேண்டும். கார் ஓட்டத்தெரியாமல் பணம் இருக்கிறது என்பதற்க்காக காரை வாங்கி டிரைவரை நம்பி ஏமாந்து போனவர்கள் ஏராளம். முதலில் நாம் இறங்கும் தொழிலில் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
>> நாம் செய்வதற்கு உடனடி பலன் கிட்டிவிடவேண்டும் என்பதுதான் அது. அப்படி கிட்டவில்லையென்றால் உடனடியாக “இது சரிவராது” என செய்ததை விட்டுவிட்டு வேற வேலையை பார்க்க சென்றுவிடுவது. இதுதான் நம்மில் பெரும்பாலானவர்கள் செய்கின்ற பெரும் தவறு. வெற்றிக்காக சில காலமெனும் காத்திருப்பது அவசியம் நண்பர்களே.உடனடியாக உங்களை அனைவரும் நம்பிவிடவேண்டும் என்பது எப்படி நியாயமான எண்ணமாக இருக்க முடியும்? ஆகவே பொறுமை வேண்டும்.
>> சிறிய சிறிய வெற்றியினை உண்டாக்கிக்கொள்ளுங்கள், அதற்க்காக உங்களது கனவினை சிறு சிறு பாகங்களாக மாற்றிக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, கார் வாங்கவேண்டும் என்றால் ஒரு லட்சம் சேர்க்கவேண்டும், இரண்டு லட்சம் சேர்க்க வேண்டும் என திட்டமிட்டுக்கொள்ளுங்கள். ஒரு லட்சம் வந்தவுடன் உங்களுக்கு ஒரு சாதனையை நிகழ்த்திவிட்ட ஓர் சந்தோசம் கிடைக்கும். அந்த சந்தோசம் உங்களுக்கு அடுத்தகட்ட உத்வேகத்தை கொடுக்கும்.
>> நீங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதனை பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட்டதை விட வேகமாக செயல்படுகிறீர்கள் என்றால் சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள் இல்லையேல் வேகப்படுத்திக்கொள்ளுங்கள். வெற்றிக்கு தன்னிலை அறிதல் மிக முக்கியமான ஒன்று.
சிறிய விசயமோ பெரிய விசயமோ அதை பற்றி கவலைப்பட வேண்டாம். Will power மற்றும் planning இந்த இரண்டும் இருந்தால் வெற்றியை எளிமையாக அடைந்துவிடலாம்.
பாமரன் கருத்து
தமிழால் இணைவோம்