திரும்பப் பெற முடியாதது வாழ்க்கை. ஆகவே ஒவ்வொரு நாழிகையையும் நாம் மகிழ்ச்சியோடு கடப்பதே சிறந்த வாழ்வு
இங்கே ஒவ்வொருவரும் மகிழ்ச்சியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம். அதனை நாம் எங்கெல்லாமோ தேடி அழைகிறோம். நான் இங்கே குறிப்ப்டப்போகும் இரண்டு வழிகளை பின்பற்றினால் இலவசமாகவே நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற முடியும்.
வழி 1 : பிறர் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என கவலைப்படாதீர்கள்
பலர் நிம்மதியற்ற வாழ்க்கையை இங்கே அனுபவிப்பதற்கு காரணம் பிறர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை அவர்களை ஆட்கொண்டு இருப்பதனால்தான். நாம் இந்த ஆடையை நாளை போட்டுகொண்டு வெளியே சென்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் நன்றாக இருக்கிறதென்று நினைப்பார்களா அல்லது நன்றாக இல்லை என நினைப்பார்களா, நாம் அப்படி செய்துவிட்டோமே ஆகையால் அவர்கள் நம்மை அசிங்கமாக நினைப்பார்களோ, நான் கறுப்பாக இருப்பதை மற்றவர்கள் அழகாக இல்லை என நினைப்பார்களோ என ஒவ்வொரு விசயத்தையும் அடுத்தவர்களை சார்ந்து நினைக்கும் போது நாம் நமது நிம்மதிக்கான சாவியை அடுத்தவர்களிடம் நம்மை அறியாமலே கொடுத்து விடுகிறோம்.
ஒருவர் புதிய ஆடை ஒன்றை அணிந்துகொண்டு வெளியே வருகிறார் எனில் நீ இன்று அழகாய் இருக்கிறாய் என துவக்கத்தில் ஒருவர் சொல்ல கேட்டுவிட்டால் புன்னகை முகத்தில் தவழ்ந்து அன்று முழுநாளும் சந்தோசமாய் முடியும். என்ன இது டிரெஸ் உனக்கு சரியாக இல்லையே என்றோ ஏன் இன்று சோகமாய் இருக்கிற மாதிரி இருக்கிறதே என்றோ சொல்லவிட்டால் அந்த நாள் அதோகதிதான்.
வழி 2 : உங்களைப்போலவே அடுத்தவரும் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள்
ஒரு கையில் விரல்கள் கூட ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. பிறகெப்படி தலை தனியே, மூளை தனியே கொண்ட மனிதர் மட்டும் உங்களைப்போலவே எப்படி இருப்பார்கள்? உங்களது சிந்தனையோடு ஒத்துபோகிற துணைவியோ, நண்பரோ உங்களுக்கு கிடைத்துவிட்டால் நீங்கள் நிம்மதி உடையவராக இருப்பீர்கள். ஆனால் அது பெரும்பாலும் சாத்தியமில்லாத ஒன்று. ஆனாலும் நீங்கள் நிம்மதி உடையவராக மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறவராக இருக்கவேண்டும் எனில் ‘எதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்’. உங்களுக்கு அருகே இருப்பவர்கள் உங்களது சிந்தனையில் இருந்து மாற்று சிந்தனை உடையவராக இருந்தால் அது தவறில்லை என நீங்கள் உணர்ந்துவிட்டால் பிறகென்ன ‘மகிழ்ச்சி’ தான். இந்த இரண்டு விசயங்களையும் நீங்கள் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியோடு வாழுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!