Site icon பாமரன் கருத்து

ரெய்டு நடந்தாலும் கூட்டத்தை கூட்டிடாரே – தினகரன் – மணியணும் மங்குணியும்

ரெய்டு நடந்தாலும் கூட்டத்தை கூட்டிடாரே – தினகரன்

மங்குணி : என்ன மணியையா இரட்டை இலை போயிட்டா தினகரன் அவ்ளோதான்னு சொன்னிங்க …வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது கூட்டத்தை பாத்திங்களா ?

மணியன் : பாத்தேன் பாத்தேன் …ஆனால் இது தானா சேர்ந்த கூட்டமில்லை , சேர்த்த கூட்டம்னு சொல்லுறாங்களேடா மங்குணி

மங்குணி : சேர்ந்த கூட்டமோ சேர்த்த கூட்டமோ கூட்டம் கூடுச்சா அத பாருங்க

மணியன் : இங்க மட்டும் இல்லை , எங்கேயுமே பணம் இருந்தா கூட்டம் எளிதா கூட்ட முடியும் .

மங்குணி : அதுக்கு தான தேர்தல் தேதியை அறிவிக்கிறதுக்கு முன்னாடியே தினகரன் சசிகலா மற்றும் அவர்கள் சார்ந்த இடங்களிலும் சோதனை நடத்தினாங்க

மணியன் : பாருடா …இதெல்லாம் எப்படிடா உனக்கு தெரியுது

மங்குணி : பால் குடுக்க டீ கடைக்கு போனப்போ அங்க பேசிக்கிட்டாங்க …

மணியன் : ஆமாடா மங்குணி நீ சொல்றதும் சரி தான் .

இரட்டை இலை சின்னம் கிடைக்காம போனா தினகரன் தேர்தல் ல போட்டியிடுவார்னு தெரியும் . அப்படி போட்டியிட்டா தங்கள்கிட்ட இருக்கிற மொத்த பணத்தையும் இறக்கி வெற்றிபெற தயங்கமாட்டார்னு தெரிஞ்சுதான் ரெய்டு விட்டாங்க

மங்குணி : ஆனாலும் கூட்டத்தை கூட்டிட்டாருல்ல ….

மணியன் : ஆமா வெற்றிவேல் தான் இதுக்கெல்லாம் ஏற்பாடு செஞ்சுருக்காராம் .

என்னதான் ரெய்டு விட்டாலும் ரெய்டு வருவாங்கனு தெரிஞ்ச தினகரன் வைக்க வேண்டிய இடத்துல வைக்காமயா இருந்திருப்பார் …

மங்குணி : அப்போ கண்டிப்பா பணம் புழங்கும் னு சொல்லுறிங்களா

மணியன் : வழக்கம் போல இல்லைனாலும் கொடுக்க முயற்சி செய்வாங்க ….தினகரன் மட்டுமில்ல பெரிய கட்சிகள் அனைத்துமே கொடுக்க தயங்காது .இதுல யாரு ஜெயிக்கிறாங்கனு பாத்துதான் தமிழக அரசியலே நகர போகுது …அதுனால பணம் புழங்க அதிக வாய்ப்புள்ளது

தேர்தல் ஆணையம் கைல தான் எல்லாம் இருக்கு …பாப்போம் .

பாமரன் கருத்து

Exit mobile version