Site icon பாமரன் கருத்து

TNPSC உறுப்பினர்கள் நியமனம் செல்லாது , துணை வேந்தர்கள் லஞ்ச புகாரில் சிக்குகிறார்கள் – இவர்களை ஆளுநர் எப்படி நியமிக்கிறார் …யார் குற்றவாளி ?

அண்மையில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் மீது பல புகார்களும் நியமனத்தில் உள்ள மீறல்கள் காரணமாக நீதிமன்றத்தால் பதவியிழப்பு செய்யப்படுவதும் அடிக்கடி நடந்துவருகின்றன …
தற்போது நடந்திருக்கும் முக்கிய பிரச்சனை TNPSC க்கு நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்கள் நியமனம் செல்லாது என நீதிமன்றம் தகுதியிழப்பு செய்தது …இதை போலவே அடிக்கடி பல்கலைகழக துணை வேந்தர்களும்  ஊழலில் அடிபடுகின்றனர் …
என்னதான் இவர்களின் பட்டியலை மாநில அரசு தயாரித்து தந்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி இவர்களை நியமிக்கும் அதிகாரம் முழுவதுமாக ஆளுநருக்கே உண்டு …
எனவே நன்றாக விசாரித்து சரியான நபர்களை நியமிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுநருக்கு தான் அதிகம் இருக்கவேண்டும் …இதற்காகதான் அரசியலமைப்பு இந்த அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கி உள்ளது …மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களை அப்படியே நியமனம் செய்ய ஏன் இடையில் ஆளுநர் என்கிற பதவி ?
பொதுவாக இந்தியாவில் நியமனம் செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்கும் போது அந்த பணியில் இருப்பவர்கள் மட்டும் பதவி இழக்கிறார்கள் …ஆனால் அந்த பதவிக்கு அவர்களை பரிந்துரைத்தவர்களையோ நியமனம் செய்தவர்களையோ யாரும் கேள்வி கேட்பதில்லை ..ஏன் நீதிமன்றம் கூட கேள்வி கேட்பதில்லை …
இது தவறு தானே ? பரிந்துரை செய்தவர்களையும் பதவிப்பிரமாணம் செய்தவர்களையும் தண்டித்தால் மட்டும் தானே அடுத்த முறை அந்த தவறு நடக்காது …அல்லது தெளிவான வழிகாட்டுதல்களையாவது செய்ய வேண்டும் …நீதிமன்றம் போட்ட வழக்குக்கு மட்டும் உத்தரவு போடுகிறது ..அடுத்தமுறை தவறு நடக்காமல் இருக்க எதுவும் செய்வதில்லை …
இல்லையென்றால் மீண்டும் ஒருமுறை தவறான நியமனம் நடக்கும் …அப்போது நீதிமன்றத்தினை எவரும் நாடாமல் இருந்தால் தகுதி இல்லாதவர்களே பதவியில் இருப்பார்கள் ….

Share with your friends !
Exit mobile version