Site icon பாமரன் கருத்து

அதிரடி பாடத்திட்ட மாற்றங்கள் ஒரு பார்வை

நீட் தேர்வினை எதிர்ப்பது சாத்தியமில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துகொண்டுவிட்டனர் . அதற்காக அவர்கள் எடுத்துள்ள, பாடத்திட்டங்களை CBSE க்கு நிகராகவும் பல நாடுகளின் பாடத்திட்டங்களை ஆராய்ந்தும் நமது பாடத்திட்டம் மாற்றப்படும் என்கிற முடிவு வரவேற்க தக்கது .

தமிழக அரசின் இந்த முடிவு கல்வியாளர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன . கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அத்துறையின் முதன்மை செயலாளர் உதய சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

Picture source : The hindu

கவனிக்க வேண்டிய விசயங்கள் : 

கல்வியென்பது வெறும் மருத்துவர்களையோ பொறியாளர்களையோ பிற தொழிலாளர்களையோ உற்பத்தி செய்து தருவது அல்ல . கல்வியென்பது இந்த சமூகத்திற்கு சிறந்த மனிதர்களை உருவாக்கி தருவது .

தமிழக அரசின் இந்த மாற்றத்தில் 6 ஆம் வகுப்பு முதலே தொழில்முறை கல்வி கொண்டுவரப்படும் என்கிறார்கள் . ஒரு மாணவனின் திறன் அறிவு எப்படி ஐந்தாம் வகுப்பிலேயே தெரியும் . மேலும் ஏழை குழந்தைகள் அவர்களின் வறுமை காரணமாக
நிச்சயமாக தொழில்முறை கல்வியை நோக்கித்தான் போவார்கள் .இது அவர்களுக்கான உயர்கல்வி கிடைப்பதை அவர்களை கொண்டே தடுப்பதற்கு ஒப்பாகும் .

இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்

மொழி வரலாறு இலக்கியங்கள்:

ஒரு சிறந்த மனிதனை உருவாக்க வேண்டுமெனில் வரலாறை அவனுக்கு போதிக்க வேண்டும் . அவன் சமூகத்தோடு ஒன்றி வாழவும் இனத்தின் மீது பற்று கொண்டிருக்கவும் மொழி அவசியம் . மொழியினை காக்க இலக்கியங்கள் அவசியம் . இதனை உணர்ந்தும் பாடத்திட்டம் அமைக்கப்பெற வேண்டும் .

அடுத்தடுத்த பொதுத்தேர்வு : 

ஒரு முறையில் பார்த்தால் அடுத்தடுத்த பொதுத்தேர்வு என்பது மாணவர்களை அழுத்தத்தில் வைத்திருப்பதாக தோன்றுவதில் மாற்றுக்கருத்து இல்லை . ஆனால் அரசின் நோக்கமோ மாணவர்களின் பாட சுமையை பகிர்ந்து அளிக்கவே இந்த மூன்று பொதுத்தேர்வு என விளக்கம் அளிக்கப்பட்டு மதிப்பெண்களை குறைக்கும் ஆணைகள் கூட வந்துவிட்டன .

வரவேற்கலாம் : 

பண்ணிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு பல கல்வியாளர்களின் முயற்சிகளுக்கு பிறகு பாடதிட்டம் மாற்றப்படுவதென்பது வரவேற்கப்பட வேண்டியது .

மேலும் வரைவு திட்டத்தில் கூறியுள்ளது போன்று பாடத்திட்டத்தை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றியமைக்க தவறிவிட கூடாது .

மிகச்சிறந்த கல்வியாளர்களை கொண்ட குழுவினை அமைத்து பல நாட்டு பாட திட்டங்களை ஆராய்ந்து மிகச்சிறந்த பாடநூல்களை அமைத்தால் வெற்றிபெற்ற திட்டமாக இது அமையும் .

வரவேற்கிறோம் ! 

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version