Site icon பாமரன் கருத்து

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா? | Supreme Court handover decision to parliament

 

 செப்டம்பர் 25, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி  “குற்றவழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இருப்பவர்கள் (MP, MLA) தேர்தலில் பங்கேற்பதை தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளது . மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கொண்டிருந்த இவ்வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் தங்களால்  தடை விதிக்க முடியாது எனவும் அரசியல் கட்சிகள் தாங்களாகவே பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்றம் இதுகுறித்து சட்டம் இயற்றலாம் எனவும் கூறியுள்ளது .

 


 

வழக்கு ஏன் ?



நாடளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும்போது குற்றவழக்குகளில் போலீசாரால் சார்ஜ் சீட் பதிவு செய்யப்பட்ட உடனேயே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் . தீர்ப்பு வரும்வரை காத்திருக்க கூடாது . அவர்கள் அரசியலில் பங்கெடுக்கவும்  தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 


 

அதிகாரத்தில் இருக்கும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்

 

 


இந்த ஆண்டில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையின்படி 1765 சட்டமன்ற மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்கள் தற்போது குற்றவழக்குகளில் விசாரனையை எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது . ஒட்டுமொத்த எண்ணிக்கையான 4896 இல் 1765 என்பது 36 விழுக்காடு . ஆக நாம் தேர்ந்தெடுத்திருக்கின்ற சட்டமன்ற மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்களில் 36 விழுக்காடு என்பது மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டிய விசயம் .

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விழுக்காடு மட்டுமே இவ்வளவு அதிகமானதாக இருக்கிறதென்றால் தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக அதிகமாக இருக்கும் .

 


 

குற்றவாளிகளை தடுக்க வேண்டியது அவசியம்



நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனபிறகு தண்டணை பெற்றால் அவர் பதவி இழப்பதனால் அந்த இடத்திற்கு மறுதேர்தல் நடத்தவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது . தேவையில்லாத வேலையும் பண விரயமும் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் தகுதியற்ற குற்றவாளிகள் ஆட்சி நடத்திடவேண்டிய அவலமும் ஏற்படுகின்றது . நிச்சயமாக இதுபோன்ற நிலையிலிருந்து மக்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நாடளுமன்றத்திற்கும் நீதிமன்றத்துக்கும் இருக்கின்றது .

 


 

மிக சிக்கலான விசயம்



குற்றம் சுமத்தப்பட்டதாலேயே குற்றவாளியாக யாரையும் கருதிவிட முடியாது. அப்படி குற்றம் சுமத்தபட்டவர்கள் சார்ஜ் சீட் பதியப்பட்ட உடனேயே பதவி நீக்கப்படவேண்டும் , தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படவேண்டும் என சட்டமியற்றப்பட்டால் சிலர் மீது வேண்டுமென்றே குற்றத்தை சுமத்தி அவர்களுக்கான உரிமையை பறித்துவிட  அதிகாரமிக்கவர்களால் முடியும் .

ஆகையால் மிக நுட்பமாக கையாளவேண்டிய விசயமாக இதனை பார்ப்பது அவசியமான ஒன்று . என்ன செய்யலாம் ?அரசியல்வாதிகள் மீதான குற்றவழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு பெறும் விதமாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவேண்டும் .இதற்கான நீதிமன்றங்களை உருவாக்கிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது , இன்னும் அந்த செயல்பாடுகள் வேகப்படுத்தப்படவேண்டும். யாரும் பாதிக்கப்படாதவிதமாக சட்டவல்லுனர்கள் சிந்தித்து நல்லதொரு சட்டத்தினை கொண்டுவரவேண்டும்.

 

குற்றவாளிகளாக ஒருமுறை தண்டணை பெற்றுவிட்டால் நிரந்தரமாக தேர்தலில் பங்கெடுக்க முடியாத விதமாக சட்டமியற்றலாம் .

 


 

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version