Site icon பாமரன் கருத்து

ஐனநாயக பேராபத்து – நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கப்போகும் சமூக வலைதளங்கள் ?

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட போகின்றார் ஹிலாரி கிளிண்டன் பெரும்பாலனவர்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர்.

ஆனால் தேர்தல் முடிவு,
பெரும்பாலானவர்களால் வெறுக்கப்பட்ட, ஜனாதிபதி பொறுப்பிற்கே லாயக்கற்றவர் என விமர்சிக்கப்பட்ட டிரம்ப் அவர்களுக்கு சாதகமாக வந்தது .

அந்த சூழ்நிலையில் பெரும்பாலானவர்களின் கேள்வியாக …

சமூக வலைத்தளங்களான facebook உள்ளிட்டவைகளில் ரஷ்ய நாட்டவரின் தலையீட்டால் தான் டிரம்ப் வெற்றியடைந்தார் என சொல்லப்படுவதில் உள்ள உண்மை என்ன ?

தற்போதுவரை புலம்பும் ஹிலாரி கிளிண்டன் :

தற்போது நடைபெரும் இந்தியா டுடே நாளிதழ் நடத்தும் நிகழ்வொன்றில் பங்கேற்ற ஹிலாரி , அமெரிக்க தேர்தலில் ரஷ்ய நாட்டவரின் தலையீட்டினாலேயே டிரம்ப் வென்றார் என கூறியிருக்கிறார் . மேலும் சமூக வலைதளங்கள் மக்களின் தேர்தல் முடிவுகளில் தலையிடுவது என்பது மிகவும் ஆபத்தானது எனவும் கூறியிருக்கிறார் .

உண்மை என்ன ?

நீங்கள் சமூக வலைதளங்களில் இயங்குபவராக இருந்தால் நிச்சயமாக ஒன்றினை கவனித்திருப்பீர்கள் , ஆமாம் சில போஸ்ட் மட்டும் பல லட்சம் பேரால் லைக் செய்யபட்டு ஷேர் செய்யப்பட்டு , கமெண்ட் செய்யப்பட்டு இருக்கும் . ஆனால் நீங்கள் அதே போட்டோவை டவுன்லோடு செய்து போட்டு பாருங்கள் சிலரே லைக் கமெண்ட் , ஷேர் செய்வார்கள்

காரணம் அவை பலருக்கு காட்டப்படாமலே இருக்கும் . மற்றவர்கள் பார்க்கும்போது உங்களது போஸ்ட் ஐ facebook காட்டினால் தானே மற்றவர்கள் லைக் ,கமெண்ட் , ஷேர் செய்திட முடியும் .

தற்போது facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உங்களது போஸ்ட் ஐ அதிகப்படியான நபர்களுக்கு காண்பிக்க வேண்டுமெனில் அதற்காக குறிப்பிட்ட தொகையை கட்டவேண்டும் “Boost Post” . அப்படி கட்டினால் நீங்கள் யாரைவேண்டுமானாலும் டார்கெட் செய்து அவர்களுக்கு உங்களது போஸ்ட் ஐ காண்பிக்க செய்ய முடியும் .

இந்த இடம் தான் ரஷ்யர்களின் தலையீட்டிற்கு காரணமாக இருந்துள்ளது .

ரஷ்யர்களால் ஆயிரக்கணக்கான கணக்குகள் அமெரிக்கர்களை போன்று facebook இல் திறக்கப்பட்டு அதன் மூலமாக ஹிலாரிக்கு எதிரான கருத்துக்கள் தேர்தல் காலத்தில் பரப்பப்பட்டன . இதனை விசாரனை குழுவும் உறுதி செய்துள்ளது .

ஜனநாயகத்திற்கு பேராபத்து :

ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும்போது அது இயல்பாக மக்களால் விரும்பி அதிகம் பார்க்கப்பட்டால் பகிரப்பட்டால் தவறில்லை . ஆனால் பணம் செலவு செய்வதனால் தொழிநுட்ப திறமை இருப்பதனால் அதனை வைத்துக்கொண்டு சிலருக்கு ஆதரவாகவோ சிலருக்கு எதிராகவோ ஒரு கருத்து மக்களிடம் திணிக்கப்பட்டால் அது ஏற்படுத்தும் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் .

ஒருவரை பற்றிய தவறான செய்திகளே நீங்கள் facebook திறக்கும்போது வந்துகொண்டிருந்தால் இயல்பாகவே நீங்கள் அவரை வெறுக்க ஆரம்பித்து விடுவீர்கள் . அதுவும் வெளிநாடுகளின் தலையீட்டால் அது நடக்கும்பட்சத்தில் அது ஜனயாகத்திற்கு பேராபத்து .

தொழில்நுட்பத்தின் உதவியால் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு அடுத்த நாட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் மக்களின் முடிவில் தலையிடுவது மாபெரும் குற்றம் , ஜனநாயக விரோதம் .

facebook உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இதனை சமாளிக்க போகின்றனவா அல்லது சம்பாதிக்க போகின்றவா ?

உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version