Site icon பாமரன் கருத்து

Sivagamiyin Sabatham Tamil Novel PDF Download | சிவகாமியின் சபதம் pdf

கல்கி எழுதிய புகழ்பெற்ற புதினம் "சிவகாமியின் சபதம்". 1940 ஆம் ஆண்டு வாக்கில் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த சிவகாமியின் சபதம் பின்னர் புதினமாக வெளியிடப்பட்டது. உங்களை கற்பனைக்கடலில் மூழ்கடிக்கும் அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு புதினம் "சிவகாமியின் சபதம்". சிவகாமியின் சபதம், மூன்று பாகங்களாக வெளிவந்தது. இங்கே மூன்று பாகங்களும் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. நீங்கள் சிவகாமியின் சபதம் புதினத்தை டவுன்லோட் செய்து வாசித்து மகிழலாம்.

If you are searching for download sivagamiyin sabatham novel then this is the right place to download this book.

கல்கி எழுதிய புகழ்பெற்ற புதினம் “சிவகாமியின் சபதம்”. 1940 ஆம் ஆண்டு வாக்கில் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த சிவகாமியின் சபதம் பின்னர் புதினமாக வெளியிடப்பட்டது. உங்களை கற்பனைக்கடலில் மூழ்கடிக்கும் அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு புதினம் “சிவகாமியின் சபதம்”. சிவகாமியின் சபதம், மூன்று பாகங்களாக வெளிவந்தது. இங்கே மூன்று பாகங்களும் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. நீங்கள் சிவகாமியின் சபதம் புதினத்தை டவுன்லோட் செய்து வாசித்து மகிழலாம். 

Sivagamiyin Sabatham PDF

கதைச் சுருக்கம்:

கதையானது காஞ்சியில் நிகழ்ந்த போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர்கள் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும்.

கற்பனையிலும் சரி எதார்த்தத்தில் சரி நல்லவன் ஒருவன் இருந்தால் தீயவன் என்றொருவனும் நிச்சயமாக இருப்பான். சிவகாமியின் சபதமும் இதற்கு விதிவிலக்கல்ல. சூழ்ச்சி,தந்திரம்,துரோகம்,விஷம்,பேராசை, பொறாமை என தீமையின் மொத்த உருவமாய் நிற்பவர் காவி உடை தரித்த “நாகநந்தி”. என்னதான் வில்லனாக வலம் வந்தாலும் “நாகநந்தி” எனும் பாத்திரப் படைப்பும் மனதில் ஓரிடத்தைப் பிடிக்க தவறிடவில்லை. இது போன்றே இக்கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தத்தமக்கேயுரிய தனித்துவப் பாணியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இந்நூல் கற்பனைக்கு விருந்தாக அமையும் அதேவேளை நம் அறிவின் தேடலை தட்டிவிடக்கூடியதாகவும் இருக்கின்றது. ஏனெனில் இந்நாவலை வாசித்த பிறகு அதில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் உண்மை தன்மை,  சம்பவம் நிகழ்ந்த இடங்கள், வர்ணனை படுத்தப்பட்ட மலர்களின் விபரம் என பலவிதமான தேடல்களில் நான் ஈடுபடவும் தூண்டுதலாக அமைந்திருந்தது.

கல்கியின் மொழியாட்சியைப் புகழ வார்த்தைகளே இல்லை. மொத்தத்தில் எழுத்துக்களின் வாயிலில் ஒரு சரித்திரத்தை படைத்திருக்கிறார் கல்கி என்றே கூற வேண்டும்.

வாசித்து கொண்டாடுங்கள்!!!

Ponniyin Selvan PDF Download + Audio | பொன்னியின் செல்வன் Free Download

Share with your friends !
Exit mobile version