இந்திய அரசு கண்டுகொள்ளாத கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தமிழக அரசு அழைத்து கவுரவபடுத்திட வேண்டும்.
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒருவார பயணமாக இந்தியா வந்துள்ளார் . அவரை இந்தியநாட்டின் பிரதமர் என்ற முறையில் மோடியோ அல்லது அவை சார்ந்த அமைச்சர்களோ யாரும் இதுவரை அழைக்கவில்லை.
திரு.மோடி அவர்கள், வெளிநாடு சுற்றுப்பயணம் செய்யும்போதெல்லாம் அவருக்கு பெரும்வரவேற்பு கொடுத்து வரவேற்கப்படுவது உண்டு . அதேபோல் வெளிநாட்டின் பிரதமர்கள் இந்தியா வரும்போதெல்லாம் திரு.மோடி அவர்கள் நேரில் சென்று பலத்த வரவேற்பளிப்பார். ஆனால் , கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கீழ்நிலையில் உள்ள அமைச்சர் ஒருவர் (கஜேந்திர சிங் ஷெகாவத் – வேளாண்துறை இணையமைச்சர்) வரவேற்றார். மோடியால் செல்லமுடியவில்லையெனில், அவரின் அடுத்த நிலையில் உள்ள அமைச்சர்களை அனுப்பி அழைத்திருக்கலாம். மேலும், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு ட்ரூடோ சென்றபோதும் பிரதமர் மோடி அவரை சந்திக்கவில்லை. பிரதமர் மட்டுமல்லாமல், திரு.ட்ரூடோ அவர்கள் தாஜ்மஹால் சென்றபோதுகூட உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் திரு. யோகியும் அவரைச் சந்திக்கவில்லை.
தற்போதைய நிலையில், இந்தியாவின் உயரிய தொழிலதிபர்கள் ட்ருடோவை மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் சந்தித்து வருகின்றனர். இதுபற்றி , கனடா ஊடகங்கள் மோடியை பறைசாற்றுகின்றன.
இதுபற்றி, கனடாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளதாவது:
“மத்திய அமைச்சரவையின் ஓர் உறுப்பினர் அவரை வரவேற்க வேண்டும் எனும் விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. சில வெளிநாட்டு தலைவர்களை மோதி நேரில் சென்று வரவேற்றார் என்பதற்காக எல்லோரையும் அவ்வாறே வரவேற்க முடியாது” என்றார்.
ஏற்கெனவே , மோடியின் அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது என எண்ணும் பட்சத்தில் கனடாவாழ் தமிழர்களுக்கு எண்ணற்ற சலுகையளிக்கும் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்காதது சற்றே வருத்தமளிக்கிறது.
ட்ரூடோ அவர்கள் தமிழர்களுக்காக, கனடா நாட்டின் தேசியகீதத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதுவரையில், எந்த ஒருநாட்டு பிரதமரும் இவ்வாறு செய்ததில்லை (இந்தியா உட்பட). மேலும், தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு அரசு விடுமுறை தந்துள்ளதுடன் பொங்கலன்று வேட்டி, சட்டை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடினார். கனடாவில் தமிழர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் முக்கியத்துவத்தையும் அளிக்கின்ற ஒரு தலைவராக இருக்கின்றார் .
தெரிந்தோ தெரியாமலோ இந்திய அரசு அவருக்கு கொடுத்திடாத
கவுரவத்தை தமிழக அரசு அவரை வரவேற்று கொடுத்திட வேண்டும் .
நீங்களும் உங்களது கருத்துக்களை எழுதி அனுப்பலாம் . உங்களது பெயரிலேயே அந்த கட்டுரைகள் பதிவிடப்படும் .
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : admin@pamarankaruthu.com