Site icon பாமரன் கருத்து

முதல் மதிப்பெண் எடுத்த பெண்கள் எங்கே – தேடுங்கள் ?


[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]

நம்மோடு படிக்கும்போது முதல் மதிப்பெண் எடுத்த அல்லது நன்றாக படித்த பெண் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?

தமிழக பள்ளி மாணவர்கள்

இந்த கேள்வியை முன்வைத்து ஒரு சிறிய தேடலை இப்பதிவை படிப்போர் செய்துபாருங்கள் . பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கின்ற பதிலாக கிடைக்கபோவதென்னவோ “ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டமோ அல்லது ஆசிரியர் பயிற்சி படிப்போ அல்லது பொறியியல் படிப்போ படித்துவிட்டு குடும்ப பெண்களாகவே இருப்பார்கள் . சிலர் மட்டுமே வேலைக்கு செல்வார்கள் ” ..

பெண்களின் அறிவு சொத்தை பயன்படுத்தாமல் போகின்றோம்

பெண்களைவிட குறைந்த மதிப்பெண் எடுத்த ஆண்கள் பலர் மேல்படிப்புகள் படித்து பணிக்கு செல்கின்றனர் , பொறியியல் துறையில் நிபுணர்களாக இருக்கிறார்கள் , கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள் . ஆனால் பள்ளிப்பருவத்தில் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்திட்ட பெண்களின் நிலையோ குடும்பத்தை கவனித்துக்கொள்வதாக மாறிப்போவதால் பல துறைகள் திறமையான பெண்களின் அறிவு சார்ந்த பங்களிப்பை இழந்துவருகின்றது .
இதனை கவனிக்க வேண்டாமா ?

சிறந்த வெற்றிக்கு பெண்களின் பங்களிப்பும் முக்கியம்

இன்று பல காரணங்களால், சில துறைகள் மட்டுமே பெண்களுக்கு உகந்த துறைகளாக இருக்கின்றது . உதாரணத்திற்கு ஆசிரியர் பணி , வங்கிப்பணி . இதனால் பிற பொறுப்புக்களில் பெண்களின் பங்களிப்பு மிக மிக குறைவானதாக இருக்கின்றது . குறிப்பாக ஆராய்ச்சிப்பணி , ஆம் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்க்கு மிகச்சிறந்த அறிவு அவசியம் . அப்படிப்பட்ட சிறந்த பெண்கள் பலர் குடும்பத்திற்காக ஆராய்ச்சி சம்பந்தபட்ட துறைகளை தேர்ந்தெடுப்பது இல்லை , பலரோ படித்த படிப்பிற்கு உகந்த எதனையுமே  செய்யாமல் திருமண அட்டையில் பதிவிடுவதற்காக படிப்பினை பயன்படுத்திவிட்டு விட்டுவிடுகிறார்கள்  .

தமிழக பள்ளி மாணவிகள்

 


இது மிகப்பெரிய தவறு . இதனை இன்று நாம் கவனிக்காமல் கடந்து சென்றால் பல துறைகளில் வெற்றி பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதே உண்மை .
பெண்களுக்கு கல்வி கொடுப்பது மட்டுமல்ல அரசின் கடமை
அதனை முறையாக பயன்படுத்திக்கொள்வதும் அரசின் கடமை தான்
இதில் மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்குமே இருக்கின்றது . பெண்களின் அறிவு சொத்தை பயன்படுத்தாத  தேசம் வளர்ச்சி அடைவது கிடையாது . இந்தியாவும் அப்படி செய்துவிட கூடாது .
பெண்களும் பெற்றோர்களும் கணவர்மார்களும் பக்கபலமாக நின்றால் எதுவும் சாத்தியமே

பாமரன் கருத்து
பாமரன் கருத்து
Exit mobile version