நீதிபதிகள் தவறான தீர்ப்புகளை சில சமயங்களில் கொடுத்துவிடுவது உண்டு. அவர்களும் மனிதர்கள் என்றாலும் கூட அப்படி கொடுக்கப்படும் சில தீர்ப்புகள் கூட சாமானியர்களை நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை சிதைத்துவிடுகிறது.
விசித்திரமான வழக்குகளை இந்த நீதிமன்றம் சந்தித்துள்ளது என்ற வார்த்தை நம்மில் பலருக்கும் பரிட்சயமான வார்த்தை. ஆனால் விசித்திரமான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்குகின்றன என்ற வார்த்தைகளையும் நாம் இப்போது அடிக்கடி கண்டுவருகிறோம். குறிப்பாக பாலியல் தொந்தரவு வழக்குகளில் தான் அப்படிப்பட்ட தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கிவருகின்றன. இப்படிப்பட்ட தீர்ப்புகளை வழங்குவது புதிய நீதிபதிகளோ அல்லது மாவட்ட அளவில் உள்ள நீதிபதிகளோ அல்ல. உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றங்களிலும் உள்ள நீதிபதிகளே இப்படிப்பட்ட தீர்ப்புகளை வழங்குகிறார்கள். இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பாப்டே கூட அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார் என்பதுதான் விசித்திரமான பிரச்சனை.
மார்ச்,2021 துவக்கத்தில் 4000 க்கும் மேற்பட்ட பெண் உரிமை ஆர்வலர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதன் சாராம்சம் என்னவெனில் ‘நீங்கள் பதவி விலக வேண்டும்’ என்பதுதான். இத்தனை பெண் உரிமை ஆர்வலர்கள் இணைந்து தலைமை நீதிபதிக்கே கடிதம் எழுதுகிற அளவுக்கு அவர் என்ன செய்தார்?
அண்மையில் அரசு ஊழியர் ஒருவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட அரசு ஊழியரிடம் இப்படி கேட்டார் ‘நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டால் உங்களுக்கு பெயில் கிடைக்கும். இல்லையேல் பெயில் கிடைக்காது. நீங்கள் அரசு வேலையை இழக்க நேரிடும். சிறைக்கும் செல்ல நேரிடிடும். நாங்கள் கட்டப்படுத்துவதாக இதனை நீங்கள் நினைத்தால் நிராகரிக்கலாம்’ என கேட்டார்.
இதுதான் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பாலியல் தொந்தரவு என்பது விருப்பமில்லாமல் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் நடந்துகொள்வதையே குறிக்கிறது. அப்படி இருக்கும் போது அந்த ஆணையே திருமணம் செய்துகொள்ள தலைமை நீதிபதி அறிவுறுத்துவது எவ்வளவு தவறானது என்பதனால் தான் பெண் ஆர்வலர்களிடையே பெரிய அளவில் எதிர்ப்பு உண்டானது.
இது ஒருபுறம் என்றால் மத்திய பிரதேசத்தில் இருக்கும் உயர்நீதிமன்றமோ ‘பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பெண்ணுக்கு ராக்கி கட்டி மன்னிப்பு கேட்குமாறும் அதோடு 11000 ரூபாயை மன்னிப்பு கேட்கும்போது வழங்குமாறும் கூடுதலாக 5000 ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் ஆடைகள் வாங்கிக்கொள்ள கொடுக்குமாறும் அறிவுறுத்தியது’. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுப்பக்கமோ மீண்டும் அந்தப்பெண்ணையோ குற்றம் சுமத்தப்பட்டவர் சந்திக்கவே கூடாது என்பது தான் சட்டமாக இருக்கும் சூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாக சந்தித்து மன்னிப்பு கேட்குமாறு நீதிமன்றமே கூறுவது பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது.
இதனை எதிர்த்து அபர்ணா பத் மற்றும் சில வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவிழ்க்கர் கன்வில்கர் மற்றும் ரவீந்திர பத் விசாரித்தார்கள். தங்களது கண்டனத்தை கடுமையாக தெரிவித்துக்கொண்ட நீதிபதிகள் பாலியல் வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை வெளியிட்டார்கள். இந்த விதிமுறைகளை படிப்பவர்கள், உங்களுக்கு அருகே உள்ளவர்களுக்கு இந்த தவறு நடைபெற்றால் நீங்கள் முறையிட உதவும்.
ஜாமீன் நிபந்தனைகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் தொடர்பு கொள்ளவோ, எதற்காகவும் அவர்களை சந்திக்கவோ அனுமதிக்க கூடாது. நிபந்தனைகள் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து காப்பதற்காகவே இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்கு குற்றம் செய்தவரால் ஆபத்து உள்ளது என நினைத்தாலோ அல்லது பாதிக்கப்பட்டவர் அப்படி முறையிட்டாலோ, காவல்துறையிடம் இருந்து அறிக்கை பெற்று அதற்கு ஏற்றவாறு விதிகளோடு ஜாமீன் பரிசீலிக்கப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நேரடியாக இருவரையும் சந்திக்க அனுமதிக்க கூடாது.
குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அதுபற்றி பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக தெரிவிப்பதோடு ஜாமீன் நகலை இரண்டு நாட்களுக்குள் அவரிடம் கொடுக்க வேண்டும்.
இந்த மாதிரியான வழக்குகளில் ஆணாதிக்க கருத்துக்களை தெரிவிக்க கூடாது.
திருமணம் போன்ற மத்தியஸ்தம் செய்திடும் வேலையில் நீதிமன்றம் ஈடுபடக்கூடாது.
வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அதிக உணர்வோடு இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சியடையும் அல்லது அச்சப்படும் விதமாக எதுவும் இருக்ககூடாது.
பாதிக்கப்பட்டவர் நம்பிக்கை இழக்கும் ரீதியிலான வார்த்தைகளை எழுதும் போதும் பேசும்போதும் நீதிபதிகள் பயன்படுத்தக்கூடாது.
இவை நீதிபதிகள் அளித்த விதிகளின் சுருக்கமே. ஆங்கிலத்தில் விரிவாக இங்கே இருக்கிறது.
Bail conditions should not mandate, require or permit contact between the accused and the victim. Such conditions should seek to protect the complainant from any further harassment by the accused;
– Where circumstances exist for the court to believe that there might be a potential threat of harassment of the victim, or upon apprehension expressed, after calling for reports from the police, the nature of protection shall be separately considered and appropriate order made, in addition to a direction to the accused not to make any contact with the victim.
– In all cases where bail is granted, the complainant should immediately be informed that the accused has been granted bail and copy of the bail order made over to him/her within two days
– Bail conditions and orders should avoid reflecting stereotypical or patriarchal notions about women and their place in society, and must strictly be in accordance with the requirements of the CrPC. In other words, discussion about the dress, behavior, or past “conduct” or “morals” of the prosecutrix, should not enter the verdict granting bail
– The courts while adjudicating cases involving gender-related crimes, should not suggest or entertain any notions (or encourage any steps) towards compromises between the prosecutrix and the accused to get married, suggest or mandate mediation between the accused and the survivor, or any form of compromise as it is beyond their powers and jurisdiction
– Sensitivity should be displayed at all times by judges, who should ensure that there is no traumatization of the prosecutrix, during the proceedings, or anything said during the arguments
– Judges especially should not use any words, spoken or written, that would undermine or shake the confidence of the survivor in the fairness or impartiality of the court.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!