Site icon பாமரன் கருத்து

ஆசிரியரின் உடலை சுமந்து நெகிழவைத்த சச்சின்…


கிரிக்கெட் ஜாம்பவான் திரு சச்சின் அவர்களின் செயல் மீண்டும் ஒருமுறை ஒரு சிறந்த பண்பாளராக அவரை காட்டியிருக்கிறது. ஆம் நண்பர்களே தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட ராமகாந்த் ஆச்ரேகர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதோடு மட்டுமில்லாமல் அவரது உடலை சுமந்து சென்று தனது நன்றியை உரிதாக்கியுள்ளார்.

.
.
.

தனது ட்விட்டர் பதிவில் “தான் கிரிக்கெட்டில் ABCD என ஆரம்பம் அனைத்தையும் எனது ஆசிரியர் ராமகாந்த் ஆச்ரேகர் அவர்களிடம் இருந்து தான் கற்றேன், எனது வாழ்வில் அவரது பங்களிப்பினை வார்த்தைகளால் சொல்ல இயலாது. எனக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தவர் அவரே. கடந்த மாதம் பழைய மாணவர்களுடன் அவரை சந்தித்தபோது பழைய நினைவுகளை அசைபோட்டு சிரித்து மகிழ்ந்தோம் ” என குறிப்பிட்டு நீங்கள் எங்களது இதயத்தில் வாழ்வீர்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
.
.
.
சச்சின் மட்டுமின்றி வினோத் காம்ளி, சஞ்சய் பாங்கர் , அஜித் அகர்கர் உள்ளிட்ட பல இந்திய அணி வீரர்களை சரியான முறையில் தயார் செய்து தந்தவர் ராமகாந்த் ஆச்ரேகர்.
.
.
.
இன்று பாடம் நடத்துகிற ஆசிரியரை மாணவர்கள் கிண்டல் செய்வதும், பின்னாட்களில் அவர்களை மறந்துபோவதும் நடப்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் உலகம் போற்றும் ஒரு வீரராக மிகப்பெரிய பணக்காரராக ஆன பின்னரும் தனது உயர்விற்கு காரணமாக இருந்த ஆசிரியரை நினைவிலே கொண்டு, மதித்து, அவர் இறந்த பின்னர் அவரது உடலை சுமந்து நன்றி செலுத்தியிருப்பது இக்கால தலைமுறைக்கு ஓர் பாடமும் கூட.

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version