Site icon பாமரன் கருத்து

Know about Amazon Kindle Device in Tamil 2018 | அமேசானின் Kindle Device குறித்து அறியலாம்

நமது தாத்தா பாட்டி மற்றும் அப்பா அம்மா காலத்தில் நாளிதழ் வாசிப்பும்  புத்தக வாசிப்பும் அதிகமாக இருந்தன . இதனால் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு மிகப்பெரிய வர்த்தகம் நடைபெற்று வந்தது . ஆனால் நம் தலைமுறையில் புத்தகங்களை கடைகளுக்கு சென்று வாங்கி படிப்பது குறைந்துவருகிறது . இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் தொழில்நுட்ப முன்னேற்றதினால் கணினியிலும் செல்போன்களிலும் படிக்கின்ற பழக்கம் அதிகரித்து வருகின்றது . 

 

 

இந்த தலைமுறை அதிகமாக வாசிக்கின்றது, டிஜிட்டல் கருவிகளில்
ஆனால் தொடர்ச்சியாக கணிணி மற்றும் செல்போன்களை பார்ப்பதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் . நமக்கும் இவற்றில் படிப்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கும் .

 

இங்கு தான் அமேசான் நிறுவனத்தின் Kindle Device க்கான தேவை ஏற்படுகிறது .

 

 Kindle Device எப்படி வேலை செய்கின்றது ?

 

அமேசானின் Kindle Device

 

Kindle ஒரு எலக்ட்ரானிக்ஸ் கருவி தான். பார்ப்பதற்கு Tab போன்று இருக்கும் இந்த கருவியும் பேட்டரி மூலம் தான் இயங்குகிறது , இணையத்தின் உதவியினாலேயே இயங்குகிறது . பிறகு என்ன வித்தியாசம் என்கிறீர்களா ? நிச்சயமாக இருக்கின்றது . படிக்கும் போது முற்றிலும் புத்தகத்தாளில் படிப்பது போன்ற ஒரு உணர்வினை Kindle இல் படிக்கும்போது பெற முடியும் . இதனால் கண்களுக்கு எந்தவித பாதிப்போ அல்லது தொந்தரவோ இருக்காது . 

 

You can feel like a book when you read on Kindle Device

 

இதனை தவிர Amazon ஏற்கனவே ஆன்லைனில் புத்தக விற்பனையில்  ஈடுபட்டு கொண்டிருப்பதனால் Kindle கருவியை தானே உருவாக்கிட தொடங்கியது . எண்ணற்ற பல புத்தகங்களை மின்னணு முறையில் வைத்திருப்பதனால்  Kindle இல் எண்ணற்ற பல புத்தகங்களை டவுண்லோடு செய்து படிக்க முடியும் . பல புத்தகங்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன.

 

வேறு இணையதளங்களில் டவுன்லோட் செய்த pdf file போன்றவற்றையும் படிக்கலாம்
ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரே கருவிக்குள் அடக்கிவிட  முடியுமென்பதனால் புத்தகங்களை சுமந்துகொண்டு செல்ல வேண்டி இருக்காது .

 

Kindle இன் சிறப்பம்சங்கள் :

அதிநவீன resolution இருப்பதனால் மிகதெளிவாக படிக்க முடியும் 

ஒருமுறை சார்ஜ் போட்டாலே வாரக்கணக்கில் படிக்க முடியும் , ஆகவே தொலைதூர பயணங்களில் படிப்பதில் சிக்கல் ஏற்படாது .

மேலும் Vocabulary, Dictionary போன்ற பல சிறப்பம்சங்கள் உங்களது மொழித்திறனை அதிகரிக்க உதவும்

 

Kindle (Rs 4999)

 

இதுதான் அமேசானின் குறைந்தவிலை Kindle .
Buy Here

 

Screen Size : 6 inch
Resolution : 167ppi
Back Light : No
Storage : 4 GB
Connectivity : Wi-Fi 

 

மிகக்குறைந்த விலையில் விற்கப்படும் Kindle இதுதான் . ஆனால் Backlight வசதி இல்லாத காரணத்தால் இரவினில் வேறு வெளிச்சம் இல்லாமல் புத்தகம் படிக்க இயலாது .

 

Kindle Paper White (Rs 8999)

Buy Here

Screen Size : 6 inch
Resolution : 300ppi
Back Light : Yes
Storage : 4 GB
Connectivity : Wi-Fi + 3G or Wi-fi
Wi-fi : Rs 8999
WiFi+3G : Rs 11999

 

Backlight வசதி இருக்கக்கூடிய Kindle இல் மிகக்குறைந்த விலையில் விற்கப்படக்கூடியது இதுதான் .

Wifi வசதி மட்டும் போதுமென்றால் Rs 8999 விலையிலும் Wi-fi மற்றும் 3G இரண்டும் இருந்தால் Rs 11999 விலையிலும் கிடைக்கும் 

பொதுவாக Hotspot பயன்படுத்திக்கூட Wifi வசதியை பெறமுடியும் என்பதனால் நீங்கள் Wifi வசதி மட்டும் இருக்கக்கூடிய Kindle (Rs 8,999) ஐ வாங்கிக்கொள்ளலாம் .

மேலும் resolution 300 ppi இருப்பதனால் மிகத்துல்லியமாக எழுத்துக்களை வாசிக்கமுடியும் .

 

Kindle Voyage : Rs 16499

Buy Here

Screen Size : 6 inch
Resolution : 300ppi
Back Light : Yes + Adaptive light sensor
Storage : 4 GB
Connectivity : Wi-Fi + 3G or Wi-fi

 

Kindle Paper White, Kindle Voyage இரண்டிற்கும் இடையில் இருக்கக்கூடிய மிக முக்கிய வித்தியாசமே தான் . இல் backlight வசதி இருந்தாலும் நாம் தான் அதனை adjust செய்திட வேண்டும் . 

ஆனால் voyage இல் adaptive sensor இருப்பதனால் தானாகவே திரையின் வெளிச்சத்தை மாற்றிக்கொள்ளும் . இதனால் தொந்தரவில்லாமல் படிக்கலாம் .

 

Kindle Oasis : Rs 21999

Buy Here

Screen Size : 7 inch
Resolution : 300ppi
Back Light : Yes + Adaptive light sensor
Storage : 8 GB or 32 GB
Connectivity : Wi-Fi + 3G or Wi-fi
Water Proof : Yes 

 

Kindle Oasis இன் மிகமுக்கிய சிறப்பம்சமே Water Proof தான் . அதிகபட்சமாக 2 மீட்டர் ஆழம் மற்றும் 60 நிமிடம் வரையில் தண்ணீருக்குள்ளும் பாதிப்பில்லாமல் இருக்கும் .
குறைந்தபட்சமாக storage 8 GB யும் அதிகபட்சமாக 32 GB யும் இருப்பதனால் மற்ற kindle களை காட்டிலும் அதிகமான புத்தகங்களை சேமித்துவைத்துக்கொள்ள முடியும் .

 

My Choice : Kindle Paper White (Rs 8999)

 

மற்ற kindle இன் அளவும் resolution ம் இதில் இருக்கின்றது . Backlight வசதி இருகின்றது . சாதாரணமாக புத்தகங்களை தொந்தரவில்லாமல் படிப்பதற்கு இந்த kindle லே போதுமானது . ஆகவே wifi வசதி மட்டும் இருக்கக்கூடிய Kindle Paper White போதுமானது .

 

பாமரன் கருத்து
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version