முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழகத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பின் போது அகால மரணம் அடைந்தார். தமிழகம் இன்னமும் வருத்தப்படும் இந்த நிகழ்வு குறித்து பலர் பேசி இருக்கிறார்கள், பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், அவற்றில் சில ஏற்ற இறக்கங்கள், சொந்தக் கருத்துக்கள் ஆகியவை கலந்திருக்கலாம். ஆனால், அந்தக் களத்தில் நேரடியாக நின்று அங்கே நடந்த குண்டுவெடிப்பினால் பாதிப்பிற்கு உள்ளான, சொல்லப்போனால் ஆச்சர்யமாக பிழைத்த முன்னனி அரசியல் தலைவர் தா. பாண்டியன் இந்த நிகழ்வு குறித்து மிகவும் விரிவாக எழுதி இருக்கிறார்.
நூலின் பெயர்: ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்
ஆசிரியர்: தா.பாண்டியன்
வெளியீடு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கம்: 113
விலை:105
113 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலமாக ராஜிவ் காந்தியின் மரணம் நடந்த கடைசி மணித்துளிகளில் நடந்த சம்பவத்தை மிகவும் விரிவாகவும் உண்மையாகவும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் தா. பாண்டியன் எழுத்துக்கள் உதவும். வெறுமனே ராஜிவ் காந்தியின் மரணம் குறித்து மட்டும் குறிப்பிடாமல் ராஜிவ் காந்தியின் அரசியல் வளர்ச்சி குறித்தும் பல கருத்துக்களை தந்துள்ளார். அதோடு, அவரது அரசியல் அனுபவமின்மை மற்றும் தவறான யோசனைகளை கேட்பது போன்ற காரணங்களால் ஏற்பட்ட சறுக்கல்கள் குறித்தும் எழுதி இருக்கிறார்.
ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் நூலில் இருந்து :
*** மே 18 எனது பிறந்த நாள், 1992 பின் மே 21 நான் மறு பிறவி காெண்ட நாள்
*** 1987 இல் தாேழர் கல்யாண சுந்தரம் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார் நாங்கள் இந்தியன் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தாேற்றுவித்தாேம். பின்னர் அகில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியும், ஐசியும் சேர்ந்து சேலத்தில் நடந்த மாநாட்டில் ” இந்திய ஐக்கியக் கம்யூனிஸ்டுக் கட்சியை” அமைத்தாேம் தாேழர் மாேகித் சென்னைச் செயலாளராகவும் தாேழர் எஸ்.ஏ.டாங்கேயைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தாேம்
*** 1989 இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பாேது தான் ராஜீவ் காந்தியுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது
வடசென்னை நாடாளுமன்றத் தாெகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டேன் அன்று முதல் 1991 மே 21 வரை கடைசி நிமிடம் வரை சேர்ந்து விவாதித்த உரையாடிய விவரங்கள் தான் இங்கு தந்து உள்ளேன்
*** பங்களா தேசத்தை விடுவித்தது, எண்ணெய்க் கிணறு தாேண்டி முயன்று வெற்றி கண்டது, மன்னர் மானியத்தை ஒழித்து வங்கிகளை அரசுடமை ஆக்கியது பாேன்ற நடவடிக்கைகளால் இந்திரா காந்தி இரும்பு பெண்மணி என ஏடுகள் வருணித்தன
*** ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த பாேது எடுத்த நடவடிக்கைகளிலே மிகப்பெரும் அரசியல் விவாதத்திற்கு காரணமாக இருந்தது இலங்கை தமிழர் பிரச்சனை தான். அவர் மிக அதிகமான நேரம் பணத்தை செலவிட்டதும் அதற்காகதான் சில அதி தீவிர நடவடிக்கைகளை எடுத்தும் அதற்காகத்தான் அண்டை நாட்டாேடு பேசி ஒப்பந்தம் செய்து விட்டு நாடு திரும்பும் பாேது அரசு மரியாதை செலுத்த நின்ற ராணுவ வீரன் ராஜீவைக் காெல்ல முயன்றதும் அதற்காகதான்
*** டில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களை எந்த மந்திரியும் அரசு அதிகாரிகளும் காக்க வைத்திருக்க நான் பார்த்தது இல்லை நெடு நாட்களாக மக்கள் பிரதிகளை மதிக்கிற ஒரு நல்ல வழக்கம் டில்லியில் இருக்கிறது அதே பாேல் என்ன கடிதம் எழுதினாலும் பதில் தவறாமல் வரும்
இதற்கும் மேலாக நாடாளுமன்ற அவைக்குள் காரசாரமாகப் பாெரிந்து தள்ளும் கட்சியினர் பாெதுமன்றம் வந்தவுடன் கை காேர்த்து சிரித்துப் பேசிக் காெண்டு இருப்பார்கள் இதைப்பார்க்க தமிழ்நாட்டைச் சேர்ந்த நமக்குச் சற்றே வியப்பா இருக்கும் இங்கே மாற்றுக்கட்சி என்றால் அடிதடி காயம் தான்
*** மேடைக்கு அருகில் சில காங்கிரஸ் கட்சி நண்பர்கள் அவர்களை மேடையை விட்டு இறங்கியதைக் கண்டித்தும் ஒரு கம்யூனிஸ்ட்டை உள்ளே விட்டால் நாம் அனைவரையும் மேடையை விட்டு துரத்திவிட்டான் பார் என்றும் திட்டிக் காெண்டிருந்தார்கள்.
*** காங்கிரஸ்க் கடசியினர்க்கு அவரது கட்சியின் தலைவரை மரியாதையாக நடத்துவது எப்படி பாதுகாப்புக் காெடுப்பது எப்படி ஒரு பாெதுக்கூட்ட மேடை அமைப்பது எப்படி என்பது பாேன்ற பல சாதாரண விஷயங்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு அகன்று பல ஆண்டுகள் ஆகி விட்டதாக நான் நினைக்கிறேன்
*** யாழ்ப்பாணம் முற்றுகையிடப்பட்டு உணவுக்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில் படகுகள் மூலம் உணவுப் பாெருட்களை ராஜீவ்காந்தி அனுப்பினார்.அதைக் கரை சேரவிடாமல் இலங்கை அரசு தடுத்தது இதைக் கண்டு வெகுண்ட ராஜீவ் ராணுவ விமானங்கள் மூலமே இலங்கைக்குச் சென்று உணவுப் பாெருட்களைப் பாேட வைத்தார்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்