Site icon பாமரன் கருத்து

ரஜினி கமல் இருவரின் அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது? முன்னிலை யார் ?

ரஜினி கமல் என்கிற இரண்டு மிகப்பெரிய தமிழ் நடிகர்களும் அரசியலுக்கு வந்தமையால் தமிழக அரசியல் மீண்டும் சினிமாவை நோக்கி திரும்பியுள்ளது. கமல் ரஜினி இருவரும் அரசியல் ஆர்வத்தினை தெரிவித்து கிட்டத்தட்ட 6 மாதங்களை கடந்துவிட்ட நிலையில் இருவரும் தற்போது எந்த இடத்தில் இருக்கிறார்கள் . யார் யாரை முந்தியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம் .

 

ரஜினி : MGR ஆட்சி

 

 

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டார் . ஆனாலும் கட்சிக்கொடி , கட்சியின் பெயர் , கொள்கை என எதையுமே இன்னும் அறிவிக்கவில்லை . ஆனாலும் ஆன்மீக  அரசியல் அதாவது நேர்மையான , தூய்மையான அரசியலே தனது நிலைப்பாடு என கூறி வருகின்றார் .மேலும் MGR ஆட்சியை மீண்டும் தருவதாக கூறியிருக்கிறார் .

 

ரஜினி இன்னும் அரசியல் கட்சியை அறிவிக்கவில்லை . ஆனாலும் ரஜினி ரசிகர் மன்றத்தின் மூலமாக ஆள் சேர்க்கும் வேலையை முடுக்கி விட்டுள்ளார் .

 

கமல் :  மய்யம்

 

 

கமல் அரசியல் கட்சியை ஆரம்பித்து கொடி , ஓரளவு கொள்கைகள் என அனைத்தையும் செய்துவிட்டார் . கமலஹாசனின் முக்கிய கொள்கை ‘மய்யம்’  அதாவது இரண்டு தரப்புகளில் இருக்கக்கூடிய நல்ல கருத்துக்களை எடுத்துக்கொண்டு செயலாற்றுவது தான் மக்கள் நீதி மையத்தின் கொள்கை என அறிவித்து செயல்படுகிறார் .

 

ஒருபக்கம் ரஜினி அடிப்படை கட்டமைப்புக்ளை அமைத்துவிட்டு கட்சியை அறிவிக்கலாம் என செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது மறுபக்கம் கமல்ஹாசன் கட்சியை ஆரம்பித்து உறுப்பினர்களை , கட்சி பொறுப்பாளர்களை சேர்க்கும் வேலையில் நகர்கிறார் .

 

 
ரஜினி , ஐபிஎல் போட்டியை எதிர்த்து நடந்த போராட்டத்தில் போலீசாரை தாக்கியது குற்றம் என சொன்னது மாதிரியே , தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டின்போது இறந்தவர்களை பாதிக்கபட்டவர்களை சந்தித்துவிட்டு வரும்போது , செய்தியாளர்கள் சந்திப்பில் சமூக விரோதிகள் தான் போராட்டம் கலவரமாக மாறிட காரணம் என பேசி பற்ற வைத்தார் .

 

மறுபக்கம் கமல்ஹாசன் துப்பாக்கிசூடு நடப்பதற்கு முன்பாகவே தூத்துக்குடி மக்களின் போராட்டத்தில் கலந்துகொண்டார் . மேலும் கிராம சபை குறித்தும் அதன் முக்கியதுவம் குறித்தும் சில நிகழ்வுகளை நடத்தியிருந்தார் .

 

ரஜினி , கமல் ஆகிய இருவருமே இரு துருவங்கள் தான் . இவர்களிடம் கொள்கை ரீதியாக ஒற்றுமை ஏற்பட வாய்ப்பில்லை . இருந்தாலும் தேர்தல் காலங்களில் என்ன நடக்கும் என சொல்லிட முடியாது .

 

தற்போதய சூழ்நிலையில் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்ற படித்த வர்க்கத்தினரிடையே ரஜினி அவர்களுக்கு ஆதரவு குறைந்தும் கமலுக்கு அப்போதிருந்த ஆதரவு அப்படியே இருப்பதையும் காண முடிகின்றது .

 

இருந்தாலும் ரஜினி அவர்களுக்கு இருக்ககூடிய மாஸ் கமல்ஹாசனுக்கு  இல்லை என்பதே உண்மை .ஆனாலும் சூழ்நிலையை சமாளித்து பேசக்கூடிய திறன் கமல்ஹாசனுக்கு கூடுதல் பலம் . அது இல்லாமையே ரஜினிக்கு பலவீனம் .  பெரும்பாலும் கிராமப்பகுதி மக்களே தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க கூடிய சூழ்நிலையில் வெறும் சமூக வலைதள ஆதரவு எதிர்ப்புகளை வைத்து மட்டுமே எதையும் சொல்லிவிட முடியாது .

 

இந்த இரண்டு துருவங்களும் இப்போதுதான் வளர்ந்து வருகின்றன . இவர்கள் இருவரும் மாறுபட்ட கொள்கைகளை கொண்டிருந்ததாலும் இவர்களுடைய வெற்றி மக்களின் மனதினை வெல்வதில் தான் இருக்கின்றது .

 

என்னை பொருத்தவரையில் இந்த காலக்கட்டத்தில்  கமல்ஹாசன் மக்களின் ஆதரவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றார் . மறுபக்கம் ரஜினி அவர்கள் மக்களின் ஆதரவை இழந்துகொண்டே போகிறார் . இவை இரண்டுமே படித்தவர்களின் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் தான் . ஆனால் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பது பாமர மக்கள் தான் . அவர்களின் முடிவினை நம்மால் கணிக்கவே இயலாது .

 

இதற்கிடையில் மற்ற கட்சிகளும் களத்தில் இருப்பதனால் யார் வெல்வார்கள், யாருக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பது விடைதெரியா கேள்வியே .

 

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version