ஒவ்வொருமுறை நடக்கும் தாக்குதல்களில் தந்தையை இழந்து அழுகின்ற மகள்களின் கண்ணீர் துளிகளின் வலிகள் வார்த்தைகளாக ….
ஒவ்வொருமுறை வரும்போதும்
ஓடி வருகின்ற என்னை
அள்ளி அணைத்துக்கொண்ட
கரங்கள் ஓய்வெடுப்பது ஏனோ?
அப்பாக்கள் ஹீரோ எனும்போது
ஹீரோவே அப்பாவாக அமைந்த
யோகக்காரி என்னை
ஏமாற்றி போனதேனோ?
என் கண்ணம் வருடிய
உங்கள் பாச கரங்கள்
குண்டு வெடிப்பில் பட்ட
துன்பங்கள் எத்தனையோ?
மகள்களின் கண்ணீர் துளிகள்
அப்பாக்களின் சவப்பெட்டியை
நனைக்கும் கொடும் நிகழ்வது
முடிவுறுவது நடக்குமோ?
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!