வருமான வரி சோதனை – மணியனும் மங்குனியும்
வருமானவரி சோதனை -ஜெயலலிதா செய்த திட்டங்களும் நன்மைகளும் எப்படி உண்மையோ அதனை போலவே அவர் செய்த சொத்து சேர்ப்பும் உண்மையே .
மணியம் : மங்குனி என்னடா போயஸ்
கார்டன் போகலையா ?
மங்குனி : நான் எதுக்கு போகணும் , அம்மா அம்மானு பேசுற ஒரு அமைச்சர் முதல்வர் கூட அந்தப்பக்கம் போகல ..
எல்லாத்துக்கும் காரணம் சசிகலா தான் .
மணியன் : அடேய் நீயுமாடா எல்லாத்துக்கும் சசிகலா தான் காரணம்னு சொல்லுற
மங்குனி : ஆமா அப்படித்தானே முதல்வர் பழனிசாமி கூட சொல்லுறாரு
மணியன் : அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க
கொஞ்சம் யோசிச்சுப்பாரு , ஜெயலலிதாவை யாராவது கைக்குள்ள வச்சுக்கிட்டு சொத்து சேர்க்க முடியுமா ?
எவ்வளவு பெரிய ஆளுமை ஜெயலலிதா ? கொஞ்சம் யோசிச்சு பாரு
மங்குனி : ஆமா அதுவும் சரிதான் ….அப்பறம் ஏன் எல்லாரும் சசிகலாவை குற்றம் சொல்கிறார்கள்
மணியன் : இது இப்போ ஆரம்பிச்சது இல்ல ஜெயலலிதா உயிரோட இருக்கும்போதே எதாவது குற்றசாட்டு வந்தால் சசிகலா மேல போட்டுட்டு தன்னிடம் தவறில்லை என்பார் .
அதுதான் இப்போது ஜெயலலிதா விசுவாசிகள் என அழைத்துக்கொள்பவர்களும் செய்கிறார்கள் .
மங்குனி : ஏன் எல்லாரும் ஜெயலலிதா பெயரை காப்பாற்ற நினைக்க வேண்டும் .
மணியன் : அன்றும் இன்றும் அதிமுகவின் ஓட்டுவங்கி எம்ஜிஆர் அவர்களையும் ஜெயலலிதா அவர்களையும் மட்டுமே சார்ந்துள்ளது .
இவர்கள் இருவரையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களாக அதிமுகவினர் கருதுகின்றனர் . ஆகையால் ஜெயலலிதாவின் தூய்மையை நிரூபிக்க சசிகலா அவர்களை பயன்படுத்திக்கொள்கின்றனர் .
ஜெயலலிதா செய்த திட்டங்களும் நன்மைகளும் எப்படி உண்மையோ அதனை போலவே அவர் செய்த சொத்து சேர்ப்பும் உண்மையே .
நாகரிகம் கருதி மறைந்த ஒருவரின் மீது குற்றம் சுமத்தாமல் இருக்கலாமே தவிர எல்லாவற்றிற்கும் சசிகலா மட்டுமே காரணமென்று சொல்லுவது பொய் .
பாமரன் கருத்து