Site icon பாமரன் கருத்து

இந்த விசயங்களை செய்யாமல் இருந்தாலே மகிழ்ச்சியாய் வாழலாம்

வாழ்வென்பது இவ்வளவு தான் என்பதையும் நடந்து முடிந்தவற்றை நாம் கவலைப்பட்டாலும் மாற்றிட முடியாது என்பதையும் உணர்ந்துகொண்டோமேயானால் நிச்சயமாக நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை நம்மால் பெற முடியும்.

நம்மில் பலர் தேவையற்ற பல விசயங்களில் நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை கடினமானதாக மாற்றிக்கொண்டு இருக்கிறோம். அப்படி நாம் எந்தெந்த விசயங்களுக்காக நேரம் ஒதுக்கிகொண்டு வீணடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

இந்த உலகில் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது எதுவென்று நீங்கள் நிதானமாக சிந்தித்துப்பார்த்தால் ‘நேரம்’ என்பது மட்டும் தான் சரியான பதிலாக இருக்க முடியும். அப்படிப்பட்ட நேரம் என்பது யாருக்காகவும் எதற்காகவும் காத்துகொண்டு இருப்பது இல்லை, திரும்பவும் வருவதும் இல்லை. குறிப்பிட்ட அந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதில் தான் நாம் எவ்வளவு புத்திசாலி என்பதை அறிய முடியும். நம்மில் பலர் தேவையற்ற பல விசயங்களில் நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை கடினமானதாக மாற்றிக்கொண்டு இருக்கிறோம். அப்படி நாம் எந்தெந்த விசயங்களுக்காக நேரம் ஒதுக்கிகொண்டு வீணடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

இந்தப்பதிவை படிக்கும் நீங்கள் இனி இதில் நான் எனது நேரத்தை வீணடிக்கப்போவது இல்லை என உறுதியெடுத்தால் அதை கமெண்டில் பதிவிடுங்கள்.

இப்படி நேரத்தை கையாண்டால் மகிழ்ச்சியாக வாழ முடியும்

1. சிறிய விசயங்களை தவற விடாதீர்கள்

கடந்த காலம் பற்றி நீங்கள் சிந்திக்கும் போது உங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டக்கூடியவை சிறிய சிறிய விசயங்கள் தான். உதாரணத்திற்கு, நண்பர்களோடு சுற்றுலா செல்லும் போது நடந்த சுவாரஸ்யங்கள், குழந்தைகளோடு இருக்கும் போது நடந்த நிகழ்வுகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே எப்போதும் உங்களை நேசிக்கிறவர்களோடு சிறிய சிறிய மகிழ்ச்சியான தருணங்களை தவற விடாதீர்கள். 

2. பிஸியாகவே இருக்காதீர்கள்

உட்காரக்கூட நேரமில்லை என எதையாவது செய்துகொண்டே இருக்கும் பலர் உண்டு. இது மிகவும் தவறான விசயம். எப்படி ஒரு வேலையை செய்வதற்கு நேரம் ஒதுக்குகிறீர்களோ அதுபோலவே நீங்கள் ஓய்வு எடுக்கவும் நேரம் ஒதுக்குவதை கட்டாயமாக்குங்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.  

3. எதிர்மறை எண்ணங்களை விட்டுவிடுங்கள்

என்னிடம் அது இல்லை, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என புலம்புவோர் பலர் உண்டு. அதில் ஒருவராக நீங்கள் இருக்காதீர்கள். உங்களிடம் இருப்பது கூட இல்லாமல் கோடிக்கணக்கில் மக்கள் இருக்கிறார்கள், உங்களுக்கு நடப்பதை விடவும் ஆயிரம் மடங்கு கொடுமையை அனுபவிப்பவர்களும் இங்கே இருக்கவே செய்கிறார்கள். ஆகவே நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என இருப்பதை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.

4. நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்

சாப்பிடும் போது கல் இருந்தால் அதனை எடுத்துபோட்டுவிட்டு சாப்பிடுவது போல , நம்மை சுற்றி நல்ல விசயங்கள் மற்றும் கெட்ட விசயங்களை காணும் போது நல்லவற்றை எடுத்துக்கொண்டு நகருவது தான் சிறந்தது.

5. அடுத்தவரோடு உங்களை ஒப்பிடாதீர்கள்

உங்களை அடுத்தவர்களோடு எப்போதும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் நேற்று எப்படி இருந்தீர்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என உங்களோடு உங்களை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களை மெருகேற்றிக்கொள்ளுங்கள். அடுத்தவர்கள் வாழ்ந்த விதம், அவர்களுடைய பின்புலம், அவர்களுடைய சூழல் அனைத்தும் வெவ்வேறானவை ஆகவே அவர்களோடு உங்களை ஒப்பிட்டு வருத்தமடைகிறார்கள்.


6. நீங்கள் செய்த தவறை நினைத்து வருந்தாதீர்கள்

நீங்கள் கடந்த காலங்களில் செய்த தவறை நினைத்து வருந்துவது சரியானது தான். ஆனால் காலம் முழுமைக்கும் அதை நினைத்து வருந்திக்கொண்டே இருப்பது தவறானது. நீங்களே உங்களை வருத்திக்கொள்ளும் விதமே அது. நீங்கள் செய்த தவறை சரி செய்ய முடியுமென்றால் அதை சரி செய்திடுங்கள். இல்லையேல் நீங்கள் அந்தத் தவறை மீண்டும் செய்யாதீர்கள். எளிமையாக எடுத்துக்கொள்ளுங்கள். 

7. உங்களைப்போலவே அடுத்தவர்கள் இருக்க நினைக்காதீர்கள்

இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகவே இருப்பார்கள். இதை உணர்ந்துவிட்டால் போதும் நீங்கள் குழப்பமடையவோ வருத்தமடையவோ மாட்டீர்கள். உங்களைப்போலவே ஒத்த எண்ணம், திறமை கொண்டவராக பிறர் இருக்க வேண்டும் என எண்ணி உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்.  

8. அனைவரிடமும் நல்ல பெயர் வாங்க நினைக்காதீர்கள்

பலர் தங்களது பெரும்பாலான நேரத்தை பிறரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே செலவிடுகிறார்கள். இது மிகவும் மோசமான செயல். நீங்கள் எதை செய்தாலும் அதை இரண்டு விதமாக பார்க்கிறவர்கள் இங்கே இருக்கவே செய்கிறார்கள். உங்களுக்கு நேர்மையாக இருந்துவிட்டு வாழ்க்கையை நகர்த்தி செல்லுங்கள்

9. உங்களை பின்னோக்கி இழுப்பவர்களோடு நேரத்தை வீணாக்காதீர்கள்

சிலர் உங்களை முன்னோக்கி உந்தித்தள்ளுவார்கள். நீங்கள் என்ன சொன்னாலும் சிலர் உங்களை நம்பிக்கையற்ற வார்த்தைகளால் பின்னோக்கி இழுப்பார்கள். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களை முன்னோக்கி உந்தி தள்ளுபவர்களோடு நேரத்தை செலவிடுங்கள்.

10. பயத்தை ஒதுக்குங்கள்

ஒவ்வொரு விசயத்திற்கு அஞ்சியே நேரத்தை செலவிடுகிறவர்கள் இருக்கிறார்கள். ஒரு தொழில் துவங்கலாம் என நினைப்பார்கள், தொழில் துவங்கி தோல்வி அடைந்துவிட்டால் என்னவாகும் என நினைத்தே காலத்தை கடத்துகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். தோல்வி பயத்தில் நேரத்தை வீணடிக்காமல் பயத்தை ஒதுக்கிவிட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் அணுகுங்கள்.

அம்மாவால் எடிசன் என்ற மாபெரும் அறிஞன் உருவான கதை
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?

Share with your friends !
Exit mobile version