Site icon பாமரன் கருத்து

காமெடி நடிகரை அதிபராக்கிய உக்ரைன் மக்கள் | புதிரும் விடையும்

 

கடந்த வாரம் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக வோலோட்யமிர் செலன்ஸ்கி [Volodymyr Zelensky] தேர்ந்தெடுக்கப்பட்டார் . இந்த தேர்தல் முடிவு ஆச்சர்யமானதாக பார்க்கப்பட்டது . இதற்கு காரணம் , 73 % வாக்குகளை பெற்று அதிபரானவர் அரசியல் முன் அனுபவம் இல்லாத கமெடி நடிகர் என்பதுதான் .

 

செலன்ஸ்கி ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் “Servant of the people” எனும் நிகழ்ச்சியில் அதிபராக நடித்திருக்கிறார் . ஒரு வரலாறு பாடம் நடத்திடும் ஆசிரியருக்கு திடீரென அதிபர் பதவி கிடைத்துவிட்டால் அவர் எப்படி நடந்துகொள்வார் என நடக்கும் நிகழ்ச்சி .

 

ஏற்கனவே பலமுனை பிரச்சனைகளில் சிக்கித்தவித்துக்கொண்டிருந்த உக்ரைனை நடப்பு அதிபர் மீட்பார் என்ற நம்பிக்கை இல்லாமல் தவித்துக்கொண்டு இருந்த உக்ரைன் மக்களுக்கு செலன்ஸ்கி இன் நிகழ்ச்சி நம்பிக்கையை கொடுத்ததோ என்னவோ அந்த நிகழ்ச்சியை போலவே இவரையும் திடீர் அதிபர் ஆக்கியிருக்கிறது. உக்ரைன் நாட்டு மக்கள் இப்படி அதிகப்படியான வாக்குகளை கொடுத்து இவரை வெற்றி பெற வைப்பார்கள் என எவரும் எதிர்பார்க்கவே இல்லை.

 

இந்த நிகழ்வில் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை பார்க்கலாம் .

 

அனுபவமற்ற நபரின் கையில் நாடு

 

ukraine new president Volodymyr Zelensky

 

செலன்ஸ்கியால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிடமுடியும் என்பதில் தயக்கம் நிலவுவதாக பல அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள் . காரணம் ரஷ்யா போன்ற நாடுகளுடன் உறவினை மேம்படுத்திட முயலும்போது அனுபவமற்ற இவரை புதின் போன்ற அனுபவசாலி எளிதில் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது என்கிறார்கள் .

 

அனைத்தையும் தாண்டி , ஒரு நாடகத்தில் அதிபராக நடித்ததை பிரதானமாகக்கொண்டு முக்கால்வாசிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதனை ஆபத்தான ஒன்றாகவே நான் பார்க்கின்றேன் .


 

நம் நாட்டிற்கு ஓர் பாடம்

நமக்கு மாற்று யாருமில்லை என பல அரசியல்கட்சிகள் மக்கள் நலனில் அக்கறையின்றி செயல்படுவதனை கண்டுவருகிறோம் . மக்களுக்கு நம்மை விட்டால் ஆளில்லை என்ற அலட்சிய மனப்பான்மை கொண்டோருக்கு உக்ரைன் நாட்டு மக்கள் தகுந்த பாடம் கொடுத்திருக்கிறார்கள் என்றே நம்புகின்றேன் .

பல கட்சிகள் , திறமையாளர்கள் புதிதாக உருவாகிகொண்டுவரக்கூடிய சூழலில் தற்போது இருப்பவர்கள் தங்களது இருப்பிடத்தை தக்கவைத்துக்கொள்ள மக்களுக்கு உண்மையாலுமே நன்மை பயக்கின்ற செயல்களை செய்ய வேண்டும் . இல்லையேல் புதியவர்களுக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள் .


பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version