ஆம்பளைங்க வந்துச்சுனா
ஆளோ பேரோ பாக்காம
ஓரமா ஒதுங்கிடுறாங்கஎப்போவாச்சும் பாத்துருக்கியா
ஓரமா ஒருபொம்பள
பஸ்டாண்டுல ஒதுங்கினதகட்டண கழிப்பறையே
பொம்பளைங்க வெட்கத்துலதான்
நிரம்பி வழியுதுதூய்மை இந்தியாவுல
வெளிய போகணும்னா
பொம்பளையா பொறந்தவங்க
வீட்டுலையே முடுச்சுரனும்என்னைக்காவது ஒருநாள்
ஒதுங்கிநின்னு போகையில
ஒங்க வீட்டு பொம்பளைங்க
நிலைய கொஞ்சம் நினச்சதுண்டா ?ஆட்சியாளர்களே , அதிகாரிகளே , மக்களே நம் சமூகத்தில் பெரும்பாலும் சந்தைக்கோ வெளி வீட்டு விசேசங்களுக்கோ பயணிப்பது பெண்களாக இருப்பார்கள் .
ஆணுக்கு வருவதை போன்ற இயற்கை உபாதைகள் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு . ஆனால் முறையாக எங்காவது பொது கழிப்பிடங்கள் அரசால் பராமரிக்கப்படுகின்றனவா ? பல இடங்களில் தனியார் கழிப்பறைகள் கூட இருப்பதில்லை .
ஆண்களால் ஓரமாக ஒதுங்கிவிட முடியும் ….நம் குடும்ப பெண்களால் ?
உலக தினமாக சிலவற்றை கொண்டாடுவது அன்றைய தினத்திலாவது அதுபற்றி சிந்திப்பார்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதற்க்காக மட்டுமே. அரசாங்கம் உடனடியாக பொது கழிப்பறைகளை திறந்திட வேண்டும்.
கழிப்பறைகள் முக்கியமான இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட வேண்டும் . அவை இருக்கும் இடம் குறித்த தகவல் பொதுமக்களுக்கு கிடைக்கும் படி செய்திடல் வேண்டும் .
நன்றி
பாமரன் கருத்து