Site icon பாமரன் கருத்து

No driver needed in future | டிரைவர் இல்லாமல் ஓடப்போகும் கார்கள்

Here I explained about driverless self driving car in tamil. What are the challenges there against this self driving cars.

இன்னும் சில வருடங்களுக்குள் ஓட்டுநர் இல்லாமல் சாலைகளில் பயணிக்கப்போகும் கார்கள். கற்பனை அல்ல , உண்மை

ஹாலிவுட் திரைப்படங்களில் நாயகன் காரினை ஓட்டிக்கொண்டு இருப்பார் . வில்லன்கள் தாக்கும்போது auto mode இல் மாற்றிவிட்டு வில்லன்களை தாக்குவார் . காரும் தானாகவே ஓடும் .
இது திரைப்படத்தில் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்றென அப்போது உங்களோடு சேர்த்து நானும் நினைத்துக்கொண்டு இருந்தேன் .

ஆனால் அப்படியொரு கார் கண்டுபிடிக்கப்பட்டால் டிரைவர் ஒருவருக்காக நாம் காத்திருக்க தேவை இருக்காது , அவருக்கு சம்பளம் கொடுக்க தேவை இருக்காது , பாதுகாப்பாகவும் இருக்கும் . இதனை பற்றி சிந்தித்த பல முன்னனி நிறுவனங்கள் பல தானியங்கி கார்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்தன .

பின்வரும் சில நிறுவனங்களை உதாரணமாக சொல்லலாம் …

 

Audi

Tesla

Google

Uber etc….

படிக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாகவும் சிறப்பானதாகவும் தோன்றும் டிரைவர் இல்லாமல் ஓடும் கார்களை கண்டுபிடிப்பதும் பாதுகாப்பான பயணத்தை வழங்கிடுமாறு அதனை வடிவமைப்பதும் அவ்வளவு எளிதானது அல்ல நண்பர்களே .

இருந்தாலும் அதற்கான முயற்சிகள் சிறப்பாக நடந்துகொண்டே இருக்கின்றன .

டிரைவர் இல்லாமல் ஓடும் கார்களை கண்டுபிடிப்பதில் உள்ள சவால்களை பார்ப்போமா ?

Challenges for Driverless Cars 

பாதுகாப்பு (Security and Safe)

இந்த கண்டுபிடிப்பு முயற்சி பாராட்ட தகுந்ததாக இருந்தாலும் இதுவரை சோதனை முயற்சிகளில் பலகட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்துகொண்டு தான் இருக்கின்றது .

மனிதனின் மூளையை போல அதிவிரைவாக செயல்பட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கார்களை இயக்கிடும் வண்ணம் ஒரு செயலியை வடிவமைப்பது உண்மையாலுமே சவாலான ஒன்று .

மாறுபடும் கால சூழ்நிலைகள் , திடீரென தோன்றும் இடர்பாடுகள் என பல தொந்தரவுகளை சமாளித்து பாதுகாப்பாக பயணத்தை அமைத்திடுமா என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய கேள்வி .

அச்சம் (Fear about this Technology)

டிரைவர் இல்லாமல் ஓடும் கார்கள் தனியான சாலையில் பயணிக்கப்போவது இல்லை , அவை மனிதர்கள் ஓட்டும் கார்கள் பயணிக்கக்கூடிய சாலையில் தான் பயணிக்க போகின்றன .

எதிரே வரும் காரில் டிரைவர் இல்லை என தெரிந்தால் மக்கள் எவ்வாறு சகஜமாக சாலைகளை பயன்படுத்துவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி .

சட்டம் (Law)

அமெரிக்காவின் சில நகரங்களில் சோதனை ஓட்டம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது . ஆனால் அத்தனையும் பலத்த கண்காணிப்புக்கு நடுவிலே நடக்கிறது .

இந்தியா போன்ற நாடுகளில் ஓட்டுநர் இல்லா வாகனங்களுக்கு அனுமதி இல்லை . அவ்வளவு எளிதாக கொடுக்கப்படவும் வாய்ப்பில்லை என்றே எண்ணுகின்றேன் .

இந்த காரினால் விபத்து ஏற்பட்டால் ,கார் உரிமையாளர் பொறுப்பா ? அல்லது கார் தயாரிப்பாளர் பொறுப்பா என்பதே ஆகப்பெரும் குழப்பம் .

காரின் விலை (Price of the driverless car)

ஏற்கனவே கார்களின் விலை சாதாரண மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத அளவிற்கு இருக்கும் சூழ்நிலையில் , லட்சக்கணக்கான கோடிகளை செலவளித்து உருவாக்கப்படும் கார்களை ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்திடும் விலைக்கா விற்பார்கள் ?

நிச்சயமாக இருக்கப்போவது இல்லை . தற்போது விற்பனையாகும் கார்களை விட பலமடங்கு அதிகமான விலைக்கு தான் இந்த கார் விற்கப்படும் .

____________________________________

அத்தனை சவால்களையும் கடந்து டிரைவர் இல்லாத கார்களை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என பல நிறுவனங்கள் முயன்றுகொண்டு இருக்கின்றன .

இதுமட்டும் நடந்துவிட்டால் மிகப்பெரிய புரட்சியே போக்குவரத்துத்துறையில் நடைபெரும் . காத்திருப்போம் எதனையும் படைக்கும்
ஆற்றல் மனிதர்களிடம் இருக்கின்றது .

டிரைவர் இல்லாத வாகனத்தில் செல்ல தயாரா ?

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version