நாசா : (நாசா)
விண்வெளி ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டாலும் தற்காலத்தில் மிகத்தீவிரமாக செயல்படும் அமைப்புகளில் ஒன்று அமெரிக்காவின் நாசா . நாசா தற்போது அடுத்த முயற்சியில் களமிறங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளது . ஆம் விரைவில் நிலவு , செவ்வாய் உள்ளிட்ட ஆராய்ச்சி மேற்க்கொள்ளும் கோள்களில் நியூக்ளியர் ரியாக்டரை நிறுவ இருக்கின்றது .
எதற்காக ?
விண்வெளி ஆராய்ச்சியில் அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது பவர் (மின்சாரம்) . அதற்காகத்தான் தற்போது நாசா இந்த முடிவை மேற்கொண்டுள்ளது .
முதல்கட்டமாக நிலவில் இது அமைக்கப்படும் , இதனால் நிலவில் நிழற்குன்றுகல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் . செவ்வாயில் திடீரென மாறும் தட்பவெப்பமும் தூசு படலம் போன்றவற்றால் சூரியனில் இருந்து மின்சாரம் பெறுவது கடினமாக உள்ளது . இனி அதற்கு மாற்றாக நியூக்ளியர் ரியாக்டரை நிறுவ இருக்கின்றது .ஆகவே இனி தங்கு தடையில்லாமல் மின்சார வசதி கிடைக்கும் என்பது நாசாவின் எதிர்பார்ப்பு .
எவ்வளவு சக்தி கிடைக்கும் :
நாசா தற்போது கிலோவாட் அளவிற்க்கான சிறிய நியூக்ளியர் ரியாக்டரை வடிவமைத்து உள்ளது . இதன் மூலமாக 10 கிலோ வாட் அளவிற்க்கான மின்சாரத்தை பெற முடியும் . அதன் மூலமாக இரண்டு வீடுகளை தாராளமாக இயக்கக்கூடிய அளவிற்கு மின்சாரம் கிடைக்கும் .அதுவும் பத்தாண்டுகளுக்கு பயன்படுத்தும் அளவிற்கு .
பூமியில் அணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தவே பரவலாக எதிர்ப்பு கிளம்பியிருக்க கூடிய சூழ்நிலையில் நாசா (அமெரிக்கா ) விண்வெளியிலும் அணு சம்பந்தபட்ட தொழில்நுட்பங்களை நிறுவுவது கேள்விக்கும் உள்ளாகி இருக்கின்றது .
எது எப்படியோ அறிவியலை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் நல்லதுதான் .
நன்றி
பாமரன் கருத்து