Site icon பாமரன் கருத்து

நரேந்திர மோடி – ஆளுமையின் வாழ்க்கை பயணம்

நமது பார்வை : நரேந்திர மோடி அவர்களின் செயல்கள் குறித்து விவாதிப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல . சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் கடின உழைப்பு இருந்தால் எந்த உயரத்தையும் எட்டி பிடிக்கலாம் என்பதை நினைவுறுத்தவே இக்கட்டுரை

இந்திய வரலாற்றில் ஒதுக்கிவிட முடியாத ஆளுமையாக உருவாகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அவரின் வாழ்க்கை பயணத்தை பார்க்கும் இம்முயற்சி பிறருக்கும் உதவும் என்பதால் www.pmindia.gov.in இந்த இணையதளத்தில் தரப்பட்டுள்ள தகவல் தமிழில் உங்களுக்காக தரப்பட்டுள்ளது.

 

பிரதமாக பொறுப்பேற்கிறேன் :

ராஷ்டிரபதி பவனின் வெளிப்புற வெளியில் 26 மே 2014 இன் மாலை பொழுதில் இந்திய மக்கள் அளித்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்திய மக்கள் பல்நோக்கு பார்வை கொண்ட உறுதியான மற்றும் முன்னேற்றத்திற்கான பாதையில் நாட்டை கொண்டு செல்லும் தலைவராக கோடிக்கணக்கான இந்தியர்களால் பார்க்கப்பட்டார்.

மிக கடுமையான உழைப்பாளியான நரேந்திர மோடி தனது சிறு வயதிலேயே பிறருக்கு உதவுவதை முதன்மையானதாக முடிவு செய்து கொண்டார். தனது பங்களிப்பை அடித்தள தொண்டனாக தொடங்கி சிறிது சிறிதாக தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இதனை மிக சாதாரண சாதனையாக கருத முடியாது.

 

தலைவராக உருவான வரலாறு :

நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை பயணமானது மேக்சனா மாவட்டத்தின் வட்நகர் பகுதியில் 17 1950 ஆண்டு மூன்றாவது குழந்தையாக பிறந்தார். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அவரது குடும்பமானது 40 அடிக்கு 12 அடி கொண்ட சிறிய வீட்டிலேயே வாழ்ந்துவந்தனர்.

அவரது இந்த ஏழ்மை படிப்புடன் பகுதி நேர வேலை செய்யும் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளியது. அதனால் அவரது நேரங்களை தங்களது டீ கடையிலும் வேலை செய்துவந்தார். அவரது பள்ளி நண்பர்களின் கருத்தின்படி , நரேந்திர மோடி தனது பள்ளி பருவத்திலேயே புத்திசாலியாகவும் , விவாதங்களை விரும்புபவராகவும் புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் மிக்கவராகவும் இருந்திருக்கிறார். தனது பெரும்பாலான நேரங்களை அருகில் உள்ள நூலகத்திலேயே செலவிட்டுளார்.

தனது 17 வது வயதில் வீட்டைவிட்டு கிளம்பி இந்தியா முழுமைக்கும் பயணத்தை மேற்கொண்டார்.

பயணத்தை முடித்து வீட்டிற்கு வந்த அவர் தன் வாழ்க்கையில் தான் அடைய வேண்டியது என்ன என்பது குறித்து தெளிவான பார்வை கொண்டவராக தெளிந்தார்.பிறகு அகமதாபாத் சென்று RSS இல் தன்னை இணைத்துக்கொண்டார். அங்கு கற்று தேர்ந்து 1970 களில் இந்திய அரசியலில் நுழைந்தார்.

மோடியின் அரசியல் பயணம் :

பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த மோடி 1987 இல் குஜராத் பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்படுகிறார்.அவருடைய முதல் பணியான அகமதாபாத் முனிசிபல் தேர்தலில் வெற்றியோடு தொடங்கியது. 1990 குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் க்கு நெருக்கமான வெற்றியை பதிவு செய்தது பாஜக. 1995 தேர்தலில் மோடியின் திறமையான முறையினால் 121 இடங்களை பெற்றது பாஜக. இவரது காலத்தில் 1998 இல் லோக் சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

2001 மோடி அவர்களுக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் டெலிபோன் மூலமாக பேசினார். மோடி அவர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை அந்த பேச்சு தொடங்கி வைத்தது.

ஆட்சி அதிகாரத்தில் மோடி :

மோடி அவர்கள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் (அக்டோபர் 2001 முதல் மே 2014 வரை ) குஜராத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். தொடர்ச்சியாக இவரது திறமையாலும் இயக்கத்தினால் இந்தியாவின் மகுடமான “பிரதமர்”பதவியையும் எட்டி பிடித்துள்ளார்.

ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள ஒரு சிறிய விசயமாவது இருக்கும். நமது பிரதமரிடம் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது கடின உழைப்பு .

நன்றி
பாமரன் கருத்து

 

Share with your friends !
Exit mobile version