புத்தகம் – நான் இந்து அல்ல நீங்கள்…?
ஆசிரியர் – தொ.பரமசிவன்
பதிப்பகம் – வானவில் புத்தகாலயம்
பக்கங்கள் – 16
விலை – ₹11
உலகமயமாக்கல் என்ற பெயரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கிறது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவாரக் கூச்சல் இடுகிறார்கள். ‘இந்து’ என்ற சொல்லும் அதன் அடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை. ஆனால் படித்த, நகர்ப்புரம் சார்ந்த, வறுமைக் கோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் ‘இந்து’ என்ற சொல்லில் ஏமாந்து போகிறார்கள். கிருஸ்தவர் என்பது போல இஸ்லாமியர் என்பது போல இந்து என்பதும் ஓர் அடையாளம் என்று நினைக்கின்றனர். ஆனால், பெருவாரியான மக்களுக்கு சாதி என்னும் கொடுமையான அடையாளம் தான் உண்மையானதாக இருந்து வந்திருக்கிறது. மத அடையாளம் எல்லாம் மேல் சாதிகளுக்குத் தான். இந்து அடையாளம் குறித்து சில பேராசிரியர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் தந்த விளக்கம் தான் இந்த சிறு வெளியீடு ஆகும். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.
Download நான் இந்துவல்ல நீங்கள் Book Pdf
இந்தப் புத்தகத்தில் பின்வரும் கேள்விகளுக்கான விரிவான பதில்கள் தரப்பட்டுள்ளன,
இந்து என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
இந்து என்ற சொல் நமக்கானது இல்லையென்றால் இதற்கான பழைய சொல் என்னவாக இருக்கும்?
இந்துக்கள் என்ற சொல் யாரையெல்லாம் குறிக்கும்?
இந்துக்கள் ஏன் சீக்கியர்களை சேர்த்துக்கொள்கிறார்கள்?
தமிழ்நாட்டில் சைவர்கள், வைணவர்கள் இன்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகிறதே அதற்கான பொருள் தான் என்ன?
சங்கராச்சாரியார் கோவிலுக்கு போகிறாரே?
இந்து மதம் சார்ந்த இன்னும் பல கேள்விகளுக்கான பதில்களை தொ. பரமசிவம் இந்த சிறிய புத்தகத்தில் அடக்கமாக விரிவாக தந்திருக்கிறார்.
இந்து மதம் இன்றைய சமூகத்தில் பெரும் பேசுபொருளாகவும் மக்களை ஒன்றிணைக்கும் கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, இந்து மதத்திற்குள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் பரந்த அளவில் இருக்கிறது, அது திட்டமிட்டு அதனை பாதுகாக்கவும் செய்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்