Site icon பாமரன் கருத்து

மும்பையை அதிரவைத்த சிகப்பு “விவசாயிகள்” உணவளித்து அசத்திய டப்பாவாலாக்கள்

அகில இந்திய கிஸான் சபா என்கிற அமைப்பை சேர்ந்த சில நூறு பேர் விவசாய கடன் தள்ளுபடி , விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தல் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக் மாவட்டத்திலிருந்து மும்பையில்  இருக்கக்கூடிய சட்டமன்றத்தை  முற்றுகையிட நடைபயணம் மேற்கொண்டனர் .

வழக்கம் போல மிக சாதாரணமான அரசியல் அமைப்பின் பேரணியாக முடிந்துவிடும் என அரசு எண்ணியிருக்கலாம் . ஏன் போராட்டத்தை நடத்திய அமைப்பினரே கூட எண்ணியிருக்கலாம் .

ஆனால் ஏற்கனவே வறட்சியால் வறுமையில் திளைத்துக்கொண்டிருந்த ஒவ்வொரு விவசாயிகளின் காதுகளில் பேரணி குறித்த செய்தி விழவே விவசாய அமைப்பினர் பலரும் , அரசியல் கட்சிகள் பலவும் இந்த பேரணிக்கு பேராதரவை கொடுத்தன .
விளைவு, சில நூறுகளில் ஆரம்பித்த பேரணி முப்பது ஆயிரம் பேர் கொண்ட பேரணியாக மாறியுள்ளது . இதனை சற்றும் எதிர்பார்க்காத  மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட 6 பேர் கொண்ட குழுவினை ஏற்படுத்தியுள்ளார் .

ஆதரவளிக்கும் மும்பை டப்பாவாலாக்கள் :

பல நாட்களாக நடைபயணம் செய்து 180 கிலோமீட்டர் பயணித்து தற்போது மும்பை ஆசாத் மைதானத்தில் நிரம்பியிருக்கும் விவசாயிகளுக்கு உணவளிக்க மும்பையை சேர்ந்த டப்பாவாலாக்கள் முடிவு செய்துள்ளனர் .

தாங்கள் உணவருந்த காரணமாக இருந்த விவசாயிகளுக்கு உணவளிப்பது என முடிவு செய்துள்ளனர் .

அரசு ஆதரவளிப்பது எப்போது ?

சாதாரண மனிதர்களுக்கு விவசாயிகளின் நிலை புரியும்போது மக்களுக்காகவே ஆட்சி நடத்துகிறோம் என சொல்லிக்கொள்ளும் ஆட்சியாளர்களுக்கு எப்போது புரியுமோ  என தெரியவில்லை .

விவசாயிகளின் நிலை உயரவேண்டும் .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version