ஆகச்சிறந்தவள் அம்மா – அன்னையர் தின சிறப்பு பகிர்வு
குழந்தை பருவத்தில் யாருக்கும் இனிப்புகளை பகிர்ந்துகொள்ளாமல் இருந்தவள் , வளரும் பருவத்தில் பிடிவாதத்தின் நிழலாய் வளர்ந்தவள் , தனக்கென பாராமல் பிள்ளைகளுக்கு பாத்திரத்தின் அடிவரை சென்று அலசி அலசி தட்டில் வைக்கிறாள் . தின்பண்டங்களை வாளிக்குள் பூட்டி சாயந்தரம் வரும் பிள்ளைகளுக்காக தயாராக வைத்திருக்கிறாள் .
எங்கே சென்றது அவளது சுய விருப்பங்கள் ?
கல்லானாலும் கணவன் என பழமொழி இருந்தாலும் குழந்தையின் நலனுக்காக கணவனையே எதிர்த்து நிற்கும் மனைவிமார்களை உலகம் கண்டிருக்கிறது . தனது குழந்தைகளுக்கு ஆபத்து வருகின்றது என தெரிந்தால் “பெரிய பருந்தினை எதிர்த்து நிற்கும் கோழி போல ” தயங்காமல் எவரையும் எதிர்த்து நிற்பாள் .
ஆசைகளை அடக்கி
விருப்பங்களை விளக்கி
பெற்றெடுத்த பிள்ளைக்காக
வாழ்வையே தியாகமாக்கும்
எதிர்பார்ப்பு இல்லாத
இமயம் ” அம்மா “
மனித உயிரிகளில் மட்டுமே அம்மா இப்படி எதையும் எதிர்பாராமல் சிறந்தவளாக இருப்பதில்லை , உலகில் தோன்றிய அனைத்து உயிரிகளுகளமான அம்மா என்னும் உறவு இப்படித்தான் இருக்கின்றது .
பிள்ளைக்கு அம்மாவின்மேல் இருக்கக்கூடிய பாசத்தையும் அம்மாவுக்கு பிள்ளைகளின் மேல் இருக்கக்கூடிய பாசத்தையும் எந்த அறிவியலாலும் ஆராய்ந்து சொல்லிட முடியாது . அது இயற்கையால் வந்த பிணைப்பு .
இக்காலத்திலும் சில பிள்ளைகள் அம்மாக்களை மதிக்காமல் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம் . இனிமேலாவது அந்த தவறை தவிர்க்கலாமே ?
-
- உடனே உங்களது அம்மாவிற்கு நன்றி சொல்லுங்கள் .
அடுப்பங்கரையில் வாடும் அவர்களின் சிறு ஆசைகளை நிறைவேற்றிடுங்கள்
எப்போதும் அவர்களை மதித்து நடந்திடுங்கள்
நல்ல பிள்ளையாக தாய்மையை மதித்து நடந்தால் என்றுமே அன்னையர் தினம் தான் . அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் .
PAMARAN KARUTHU